வருமானத்திற்கு அதிகமாக சொத்து.. ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு
சென்னை: பள்ளிக்கல்வித்துறை முன்னாள் இயக்குநரும், ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளருமான ராமேஸ்வரம் முருகன் அவரது மனைவி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் ராமேஸ்வரம் முருகனுக்கு சொந்தமான இடங்களில் நேற்று ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
தமிழக பள்ளி கல்வித்துறை முன்னாள் இயக்குநரும், தற்போதைய ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளருமான ராமேஸ்வரம் முருகன், குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அரசு பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக பதவி வகித்தவர். இவர் கடந்த ஆட்சியின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.ஏ. செங்கோட்டையனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

தற்போது தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரிய செயலராக உள்ளார். இந்த நிலையில் கடந்த 2012 முதல் 2016 ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக நேற்றைய தினம் ஈரோடு, அக்ரஹார வீதியில் உள்ள ராமேஸ்வரன் முருகனின் மாமனார் அறிவுடை நம்பி வீட்டிலும், கோபிசெட்டிபாளையம் வெள்ளாங்கோயில் பகுதியில் உள்ள அவரது தந்தையார் வீட்டிலும் நேற்று காலை 8 மணி முதல் ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி ராஜேஷ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.
அறிவுடைநம்பிக்கு, ஈரோடு அக்ரஹார வீதியில் நகைக்கடை உள்ள நிலையில் அங்கும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் ரேகா உள்ளிட்ட 8 க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
கோபிச்செட்டிப்பாளையம், வெள்ளாங்கோயிலில் உள்ள ராமேஸ்வர முருகனின் வீட்டில் அவரது தந்தை சின்ன பழனிசாமி இருந்தார். அப்போது அங்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீஸார், வீட்டின் கதவுகளை பூட்டிக்கொண்டு சோதனையில் ஈடுபட்டனர். நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனையானது தொடர்ந்து மாலை வரை நீடித்தது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அரசு பள்ளி கல்வித்துறை இயக்குனராக இருந்தபோது இவர் மீது எழுந்த பல்வேறு முறைகேடு புகார்களின் அடிப்படையிலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பெயரிலும் இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனையில் ராமேஸ்வரம் முருகன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தற்காக ஆவணங்கள் சிக்கின. வருமானத்திற்கு அதிகமாக ராமேஸ்வரம் முருகன் 3.45 கோடி சொத்து சேர்த்ததாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ராமேஸ்வரம் முருகன், அவர மனைவி அகிலாண்டேஸ்வரி, தாய், தந்தை, மாமனார் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications