ஒழிக ஒழிக.. குருபூஜையில் ஒலித்த கோஷம்.. சட்டென மறிக்கப்பட்ட கார்.. ஸ்டன் ஆன எடப்பாடி.. ஷாக்
சென்னை: அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கார் அபிராமத்தில் மறிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆன பின் எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக தேவர் குரு பூஜைக்கு சென்றுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை நடந்து வருகிறது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் காலையில் சென்றார்.

அவரை தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் சென்றார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார். பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அவர் அங்கே சென்றுள்ளார். செல்லூர் ராஜு, உதயகுமார் உள்ளிட்ட மாஜி அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி உடன் இன்று முத்துராமலிங்கத் தேவர் 116வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை விழாவில் உடன் இருந்தனர்.
எதிர்ப்பு: இங்கே எடப்பாடி மரியாதை செலுத்தும் போதே.. அவருக்கு எதிராக கடுமையான கோஷம் எழுப்பப்பட்டது. எடப்பாடி ஒழிக்க.. இபிஎஸ் ஒழிக என்று கோஷம் எழுப்பப்பட்டது .
கட்சி தொண்டர்கள் வேனை சூழ்ந்து பலத்த பாதுகாப்பு கொடுத்தும் கூட அங்கே பரபரப்பான சூழ்நிலை நிலவியது. தொண்டர்கள் ஒரு பக்கம் உற்சாக வரவேற்பு அளித்தாலும் கூட எடப்பாடி ஒழிக்க என்று கோஷம் எழுப்பப்பட்டது. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் சிரித்தபடி எடப்பாடி சென்றார்.
என்ன சொன்னார்?: பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், மரியாதை செலுத்திய பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அதில், சட்டமன்றத்தில் தேவர் படத்தை வைத்தது அதிமுக அரசுதான்; சென்னை நந்தனத்தில் தேவர் சிலையை அமைத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. தேசமும் தெய்வீகமும் தனது இரு கண்கள் என வாழ்ந்த மாமனிதர் முத்துராமலிங்கத் தேவர். அவரை வணங்குவது மிகப்பெரிய பாக்கியம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கல் வீச்சு?: பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய?அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கார் அபிராமத்தில் மறிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரின் கார் மீது கற்களும் வீசியதாக தகவல்கள் வருகின்றன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எச்சரிக்கை: ஏற்கனவே இது தொடர்பாக சசிகலா ஆதவாளர் தேனி கர்ணன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் தனது பேட்டியில், முக்குலத்தோர் பிரிவினருக்கு தலைவர்கள் சசிகலா, ஓ பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர்தான். தேவையின்றி எடப்பாடி பழனிசாமி பசும்பொன் சென்று அசிங்கப்பட கூடாது. அங்கே சென்றால் அவருக்கு அசிங்கம் மட்டுமே ஏற்படும். இவரை ஒரு காலத்திலும் முக்குலத்தோர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் . அதிகாரம் உங்களிடம் இருக்கலாம். தங்க கவசம் இருக்கலாம். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கே வரவேற்பு கிடைக்காது.
குரு பூஜை நடக்கும் கோவிலுக்கு.. சந்நிதிக்கு அவர் செல்ல முடியாது. அப்படி செல்ல முயன்றால் அவருக்கு அசிங்கம்தான் ஏற்படும். எதிர்க்கட்சி தலைவருக்கு அடி விழுந்தால் அவருக்கு அசிங்கம். தமிழ்நாட்டிற்கும் அசிங்கம். அதை ஏற்றுக்கொள்ள எடப்பாடி தயாராக இருக்க வேண்டும். அவரை முக்குலத்தோர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அதை எடப்பாடி புரிந்துகொள்ள வேண்டும். மற்றபடி எனக்கு பலம் இருக்கிறது நான் போவேன் என்று இருக்க கூடாது.
உங்கள் சகாக்கள் வேண்டுமானாலும் போகலாம். மக்கள் மன்னித்து விடுவார்கள். ஆனால் நீ போக கூடாது. மீறி சென்றால் நிலைமை உனக்கு எதிராக செல்லும். உன்னுடன் இருக்கும் துரோகிகளை மக்கள் மன்னிப்பார்கள். அவர்கள் காசுக்கு விலை போனவர்கள். ஆனால் உன்னை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். முக்குலத்தோர் சொந்தங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
-
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
கொக்கு போல் காத்திருந்த எடப்பாடி.. சீனியர்களை சின்னாபின்னாம்மாக்கி மாஸ்! இப்படி ஒரு ப்ளானா? சூப்பர்! -
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications