Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவங்க இல்லாட்டி என்ன.. பாஜக இருக்கே.. பாமகவை தவிர்த்து இதே கூட்டணி தொடரும்.. ஜெயக்குமார் அதிரடி

பாமகவை தவிர்த்து பிற கட்சிகளுடன் கூட்டணியை தொடர்கிறது அதிமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது" என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.. இதையடுத்து, தமிழக அரசியலில் புதுவித எதிர்பார்ப்பும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

பாமகவின் இந்த நகர்வை 2024ல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டுதான் மேற்கொண்டுள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

தங்கள் கூட்டணியில்தான் பாமக தொடர்ந்து நீடித்து வருகிறது என்று அதிமுக மேலிடம் கருதிய நிலையில், திடீரென உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக பாமக அறிவித்துவிட்டது.. இந்த திடீர் அறிவிப்பானது, அதிமுகவில் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் சேர்த்து ஏற்படுத்தியுள்ளது.

இடஒதுக்கீடு

இடஒதுக்கீடு

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு அளித்து சட்டத்தை நிறைவேற்றியவரை, அதிமுகவுக்கும் பாமகவுக்கும் இடையேயான கூட்டணி வலுவாகத்தான் இருந்து வந்தது.. ஒருவேளை வன்னியர்களின் வாக்குகளை அதிமுக மொத்தமாகவே கவர்ந்துவிட்டதோ என்றே கருதப்பட்டது... ஆனால், திமுக ஆட்சி அமைத்ததற்கு பிறகுதான், பாமகவின் நிலைப்பாட்டிலும் செயல்பாட்டிலும் மாறுபாடுகள் தென்பட துவங்கின.

 விமர்சனம்

விமர்சனம்

அப்போது முதலே திமுகவை பாமக பெரிதாக விமர்சிக்கவில்லை.. சட்டமன்றத்திலும் எந்தவிதமான கேள்வியையும் கேட்கவில்லை.. மாறாக, திமுக அரசை பாராட்டியே ராமதாஸ் மற்றம் அன்புமணியின் அறிக்கைகளும் பேச்சுக்களும் ட்வீட்டுகளும் அமைந்து வந்தன.. அதிமுக அரசு நிறைவேற்றிய 10.5% இடஒதுக்கீடு சட்டத்தை திமுக அரசு அரசாணையாக வெளியிட்டதுமே, இந்த நெருக்கம் அதிகமாகிவிட்டது.

 மணிமண்டபம்

மணிமண்டபம்

1987ல் வன்னியர் சங்கம் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 21 பேருக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்ததும், அதை பாமக மனமுவந்து வரவேற்றதும் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்பட்டது.. இப்படிப்பட்ட சூழலில்தான் உள்ளாட்சி தேர்தல் 6, 9 தேதிகளில் 2 கட்டமாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

Recommended Video

    PMK VS AIADMK | உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டி | Oneindia Tamil
     ஜெயக்குமார்

    ஜெயக்குமார்

    9 மாவட்டங்களிலும் பாமக தனித்து போட்டியிடும் என்று ஜிகே மணி அறிவித்தார்.. அதிமுக கூட்டணி தர்மத்தை காப்பாற்றவில்லை என்றும் கடந்த தேர்தலில் அதிமுகவினர் பல இடங்களில் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் டாக்டர் ராமதாஸ் கூறியிருந்தார்... இதையடுத்து சில மணி நேரத்திலேயே மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பாமகவுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொணியில் ஒரு பேட்டி தந்தார்..

     விமர்சனம்

    விமர்சனம்

    "இது அவர்கள் கட்சி எடுத்த முடிவு, இழப்பு அவர்களுக்குதான்... எங்களுக்கில்லை.. ஆனால், எங்களுடைய கட்சியை விமர்சனம் செய்ய யாருக்கும் தகுதி கிடையாது.. எங்களை விமர்சித்தால், நாங்கள் பாமகவை விமர்சிப்போம் என்று பதிலடி தந்தார். அத்துடன், யாருடைய கட்டாயத்தின் பேரில் இந்த முடிவெடுத்தார்கள் என்பது எங்களுக்கு தெரியாது.. எழுதப்படாத ஒப்பந்தம் போல, அவர்களோடு சேர்ந்து இந்த முடிவெடுத்திருக்கலாம் என்றும் ஒரு பஞ்ச் வைத்து பேசியிருந்தார் ஜெயக்குமார்.

     பாமக முடிவு

    பாமக முடிவு

    அதிமுக மீதோ, அதிமுக அரசின் மீதோ, எந்தவிதமான விமர்சனங்களையும் தெரிவிக்கவில்லை என்று பாமக தரப்பில் இதற்கு பதில் தெரிவித்தாலும், அதை அதிமுக மேலிடம் இன்று வரை ஏற்க தயாராக இல்லை.. பாமக விலகியதையும் அதிமுகவால் ஜீரணிக்கவும் முடியவில்லை.. அது இன்றைய தினம் ஜெயக்குமார் தந்த பேட்டியிலும் வெளிப்பட்டுள்ளது.

     கூட்டணியில் பாஜக

    கூட்டணியில் பாஜக

    செய்தியாளர்களிடம் இன்று பேசிய ஜெயக்குமார், "ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது.. அதிமுக பொறுத்தளவில் கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி எப்படி இருந்ததோ அதைபோல் தான் உள்ளது... பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்த நிலையில், பாமகவை தவிர, பிற கட்சிகளுடன் கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் தொடர்கிறது" என்றார்.

     வன்னியர்கள் வாக்கு

    வன்னியர்கள் வாக்கு


    பெரும்பாலான வடமாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில் அதிமுக அதில் வெல்லக்கூடுமா? பாமக தயவு இல்லாமல் இந்த தேர்தலை அதிமுக சந்திக்குமா? என்பது தெரியவில்லை.. அதேசமயம், 2019 எம்பி தேர்தல் முதலே அதிமுக கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்து வரும் பாமகவுக்கு பெரிய அளவுக்கு வெற்றி எதுவும் கிடைக்கவில்லை.. இப்போதாவது வன்னியர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல்களில் செல்வாக்கை பெற்றுவிடுவோம் என்று கணக்கு போடுவதாக தெரிகிறது. பாமகவின் இந்த முடிவை, திமுக எப்படி பயன்படுத்தி கொள்ள போகிறது என்பதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக கிளம்பி உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+