அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சிக்கல்?.. கட்டிட பணி நிறைவு சான்றிதழ்.. டைம் வேஸ்ட்.. பறந்த கோரிக்கை
சென்னை: பணி நிறைவு சான்றிதழ்களை பயன்படுத்தி, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு பெறுவதில் புதிய சிக்கல் ஒன்று கிளம்பி உள்ளதாம். இதுகுறித்து முக்கிய கோரிக்கை ஒன்றும் வலுத்து வருகிறது.
தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், நிலத்தின் பிரிக்கப்படாத பங்கான யுடிஎஸ் பத்திரம் தனியாகவும், கட்டுமான ஒப்பந்தம் தனியாகவும், இதுநாள்வரையிலும் பதிவு செய்யப்பட்டு வந்தது.

பணி நிறைவு சான்றிதழ்: ஆனால், பணி நிறைவு சான்றிதழ் பெறப்பட்ட நிலையில், யுடிஎஸ் பத்திரம், கட்டுமான ஒப்பந்தம் தனித்தனியாக பதிவு செய்யப்படுவதால், பதிவுத்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதனால்தான், பணி நிறைவு சான்றிதழ் பெற்ற திட்டங்களில், யுடிஎஸ் பத்திரத்திலேயே கட்டிட மதிப்பையும் குறிப்பிட்டு, இரண்டுக்கும் சேர்த்து முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் வசூலிக்க, பதிவுத்துறை முடிவு செய்தது..
அதுமட்டுமல்ல, அடுக்குமாடி திட்டங்களில் பணி நிறைவு சான்றிதழ் பெற்ற வீடுகளுக்கு மட்டுமே, இந்த புதிய நடைமுறை பொருந்தும் என்றும், பணிகள் நடந்து வரும் திட்டங்களில், யுடிஎஸ் பத்திரம் தனியாகவும், கட்டுமான ஒப்பந்தம் தனியாகவும் பதிவு செய்வதில், எந்தவிதமான தடையும் இல்லை" என்றும் பதிவுத்துறை தரப்பில் விளக்கம் ஒன்று தரப்பட்டிருந்தது.
அந்தவகையில், நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் பணி நிறைவு சான்றிதழ் வழங்குவதற்கான நடைமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.. எனினும், இந்த பணி நிறைவு சான்றுகளை பயன்படுத்தி, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு பெறுவதில் காலதாமதமாவதாக கூறப்படுகிறது.
புதிய கோரிக்கை: இதுகுறித்து தமிழக வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி. மணிசங்கர் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் சொன்னதாவது:
"நகராட்சி, மாநகராட்சிகள் வழங்கும் பணி நிறைவு சான்றிதழின் அசல் பிரதி அல்லது சான்றிடப்பட்ட பிரதியை, மின்சார, குடிநீர் இணைப்புகள் பெறுவதற்காக தாக்கல் செய்கிறோம்.. இந்த சான்றிதழ் வழங்கப்பட்டது உண்மையா என்பதை உறுதி செய்ய, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், நகராட்சி, மாநகராட்சிகளுக்கு கடிதம் எழுதுகிறார்கள்..
ஆன்லைன் வசதி: ஆனால், இந்த கடிதம், நகராட்சி, மாநகராட்சிக்கு வந்து, அவர்கள் அதை உறுதிப்படுத்தி பதில் கடிதம் எழுதுவதற்கே 10 நாட்களுக்கு மேல் ஆகிவிடுகிறது. இது வீடு கட்டும் மக்களையும் அலைக்கழிக்க வைக்கிறது.. கடிதம் எழுதி பதில் பெற்று சரிபார்ப்போம் என்பதால் கூடுதல் தாமதத்தை ஏற்படுத்துகிறது... நகராட்சி, மாநகராட்சிகள் வழங்கும் சான்றிதழ், கம்ப்யூட்டர்களில் தயாராவதால், இவற்றை ஆன்லைன் முறையிலேயே சரி பார்க்க வசதி ஏற்படுத்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications