எச்.ராஜாவுக்கு பக்கவாதம்.. இப்போ உடல்நிலை எப்படி இருக்கு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!
சென்னை: பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நேற்று ஊடக விவாத நிகழ்ச்சி ஒன்றின்போது மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் எச். ராஜாவின் உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், சென்னையில், தனியார் தொலைக்காட்சி சார்பில் நேற்றும், இன்றும் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து நேற்று இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பங்கேற்றிருந்தார். அப்போது, திடீரென அங்கு அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. விவாதத்தின் போது எச். ராஜா திடீரென மயங்கி விழுந்தார். அவர் கீழே விழப்போன நிலையில் மேடையில் இருந்தவர்கள் அவரை சுதாரித்துப் பிடித்தனர். சர்க்கரை அளவு குறைவாக இருப்பதாக கருதப்பட்டு அவருக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
அதே நிகழ்வு அரங்கில் இருந்த பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜாவின் உடல்நிலையை பரிசோதனை செய்து, அதிக ரத்த அழுத்தத்தால் மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என கூறினார். எச்.ராஜாவால் நிற்கவோ, நடக்கவோ முடியவில்லை.
மூளை பக்கவாதம் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்பட்டதால், உடனே அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி கொடுத்தனர். MRI மற்றும் CT ஸ்கேன்களை எடுத்தனர். பின்னர் அவர் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவின் உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவுக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் எச். ராஜாவின் உடல்நலம் முன்னேறி வருவதாகவும், அவர் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்.ராஜா, உறவினர்கள், நண்பர்களுடன் பேசக்கூடிய வகையில் நலமுடன் உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை + கேடி ராகவனுக்காக.. அதிமுகவிடம் 5 தொகுதிகளை மாற்றி கேட்ட பாஜக.. யோசிக்கும் எடப்பாடி -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க












Click it and Unblock the Notifications