முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து எப்போது டிஸ்சார்ஜ்? மா.சுப்பிரமணியன் கொடுத்த அப்டேட்!
சென்னை: முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து எப்போது வீடு திரும்புவார் என்று மருத்துவமனை இன்று கூறுவார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மு.க.முத்து மறைவின் போது நாள் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் நின்றுகொண்டே இருந்தார். தொடர்ச்சியாக ஒன்றரை கிமீ நடைப்பயணம் மேற்கொண்டதால், சோர்வடைந்ததாகவும் கூறி இருக்கிறார்.
அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார். கடந்த சில மாதங்களாகவே மாவட்ட வாரியாக பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், ரோடு ஷோ மூலமாக மக்களைச் சந்தித்து வந்தார். 72 வயதிலும் நீண்ட தூரம் ஸ்டாலின் நடந்து சென்று மக்களை சந்தித்தது பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்ட போது, லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதன் காரணமாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன்பின் அப்பல்லோ மருத்துவமனை சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், முதல்வர் ஸ்டாலின் மேலும் 3 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவருக்கு வேறு சில பரிசோதனைகள் மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்தபடி அரசுப் பணிகளை முதல்வர் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது. நேற்று மருத்துவப் பரிசோதனைக்காக தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் அழைத்துச் செல்லப்பட்டார்.
பரிசோதனைக்குப் பின் மீண்டும் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து மருத்துவமனையில் இருந்தவாறே, தலைமைச் செயலாளருடன் இணைந்து உங்களுடன் ஸ்டாலின் திட்டங்களை ஆய்வு மேற்கொண்ட ஸ்டாலின், அதிகாரிகளுக்கு சில அறிவுறுத்தல்களையும் வழங்கினார். இந்த நிலையில் ஸ்டாலின் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்தார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து மா.சுப்பிரமணியன் பேசுகையில், முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை நன்றாக உள்ளது. அவரின் உடல்நலம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக அறிக்கை வெளியிடப்படும்.
மு.க.முத்து மறைவின் போது நாள் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் நின்றுகொண்டே இருந்தார். தொடர்ச்சியாக ஒன்றவை கிமீ நடைப்பயணம் மேற்கொண்டதால், சோர்வடைந்தார். இதனால் முதல்வர் ஸ்டாலின் சிகிச்சை முடிந்து எப்போது வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் இன்று கூறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications