ஆப்பிள் நிறுவனம்.. தனது ஐபோன் பயனாளிகளுக்கு வழங்கும் ரூ.8700.. எப்படி பெறுவது? யாருக்கு கிடைக்கும்?
சென்னை: ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் பயனாளிகளுக்கு தலா ரூ.8700 வழங்க உள்ளது. இது யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்று இங்கே பார்க்கலாம்.
ஐபோனில் இருக்கும் சிரி செயலி அனுமதியின்றி தனிப்பட்ட உரையாடல்களை ஒட்டுக்கேட்டதற்காக, பதிவு செய்ததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்காவில் 95 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 790 கோடி) அபராதம் செலுத்த ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஐபோனில் இருக்கும் சிரி செயலி அனுமதியின்றி தனிப்பட்ட உரையாடல்களை ஒட்டுக்கேட்டு உள்ளது, அதை பதிவும் செய்துள்ளது, அதோடு வெளியே உள்ள சில நிறுவனங்களுக்கு பல்வேறு பணிகள், சோதனைகளுக்காக அதை பகிர்ந்தும் உள்ளது.
நாம் அருகே உள்ளவருடனோ அல்லது செல்போனிலோ எதாவது ஒரு பொருள் குறித்துப் பேசுவோம். பிறகு சில மணி நேரத்தில் அது தொடர்பான விளம்பரம் உங்கள் மொபைலில் வரும். இது நம்மில் பலருக்கும் நடந்து இருக்கும். இதனால் நாம் பேசுவதை எல்லாம் செல்போன் ஒட்டுக்கேட்டுக் கொண்டு இருக்கிறதா என்ற சந்தேகம் அனைவருக்கும் வரும். இருப்பினும், அதற்கான ஆதாரம் தான் இல்லை. பிரபல நிறுவனங்கள் எல்லாம், உரையாடல்களை எல்லாம் நாங்கள் கேட்க மாட்டோம் எனக் கற்பூரம் அடித்து சத்தியம் செய்து கொண்டே வந்துள்ளன.
இதை பொதுவாக போனில் இருக்கும் மைக் வழியாக பல்வேறு செயலிகள் செய்யும். ஏன் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கூட தங்களின் ஆடியோ பர்மிஷன் வழியாக உங்களை ஒட்டுக்கேட்டு விளம்பரங்களை உங்களுக்கு காணிக்கும்.
எல்லை மீறிய சிரி
ஆனால் இதில் சிரி கொஞ்சம் எல்லை மீறி உள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆடியோ பர்மிஷன் கொடுத்தால் மட்டுமே உங்களின் மைக் வழியாக உங்களை ஒட்டுக்கேட்டு விளம்பரங்களை உங்களுக்கு காணிக்கும்.
ஆனால் நம்முடைய அனுமதி இல்லாமலே.. ஐபோனில் சிரி சில நேரங்களில் தற்செயலாக இயக்கப்பட்டு நாம் பேசுவதை கேட்பதும், அதை பதிவு செய்வதும் என்று அத்துமீறி வந்தது உள்ளது. நீங்கள் போன் பேசும் போது தானாக ஆக்டிவேட் ஆகி ஒட்டுகேட்டுள்ளது இந்த பாடி சோடா. ஒருபோதும் பகிரப்பட அனுமதி இல்லாத உரையாடல்களைப் இது பதிவு செய்துள்ளது. சில ஆடியோ கிளிப்களில் தனிப்பட்ட மருத்துவத் தகவல்கள் மற்றும் தனிப்பட்ட விவாதங்கள் இருந்ததாக அந்த நேரத்தில் வெளியான அறிக்கைகள் உறுதிப்படுத்தின.
அதாவது உங்களின் அந்தரங்களை கூட சிரி ஓட்டுக்கேட்டு உள்ளது. உங்களுக்கு விளம்பரங்களை காட்ட வேண்டும் என்று மட்டுமல்ல வேறு பல காரணங்களுக்காகவும் கூட உங்களின் பேச்சுக்களை சிரி ஒட்டுகேட்டுள்ளது.
ஆப்பிள் ஒப்புதல்
இந்த வழக்கில் ஆப்பிள் நிறுவனம் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்தாலும், விசாரணைக்கு செல்லாமல் வழக்கைத் தீர்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. சிரி ஏஐ பயனர் தனியுரிமையைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது என்றும், குரல் பதிவுகளை சந்தைப்படுத்தவோ அல்லது தரவை மூன்றாம் தரப்பினருக்கு விற்கவோ இல்லை என்றும் ஆப்பிள் நிறுவனம் கூறி உள்ளது.
ஆனாலும் அமெரிக்காவில் உள்ள தகுதியுள்ள பயனர்கள் எல்லோருக்கும் 100 டாலர்.. அதாவது 8700 ரூபாய் செலுத்த ஒப்புக்கொண்டது. ஆனால் இந்த தொகை அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இந்தியாவில் உள்ளவர்களுக்கு வழங்கப்படாது என்பது சோகமான செய்தி!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications