"மேட் இன் சென்னை".. தமிழகத்தில் முழுக்க முழுக்க தயாரிக்கப்படும் முதல் ஐபோன் 11.. தலைநகருக்கு பெருமை!
சென்னை: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 மாடல் மொத்தமாக சென்னையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதற்கான முடிவை பாக்ஸ்கான் நிறுவனம் தற்போது எடுத்துள்ளது.
சென்னையில் தற்போது சர்வதேச நிறுவனங்கள் முதலீடுகளை அதிகப்படுத்தி வருகிறது. அதிலும் சீனாவில் இருக்கும் நிறுவனங்கள் வேகமாக தமிழகத்தில் முதலீடுகளை பெருக்கி வருகிறது.
சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்கள் சென்னையில் தனது கிளையை தொடங்க ஆலோசனை செய்து வருகிறது.சென்னை தற்போது உலக அளவில் டெலிகாம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களால் குறி வைக்கப்பட்டு உள்ளது.

சென்னை எப்படி
தமிழகத்தில் தற்போது முதலீடுகளை அதிகப்படுத்தி உள்ள பாக்ஸ்கான் நிறுவனம், மொத்தமாக தமிழகத்தில் உற்பத்தியை செய்ய இருக்கிறது. இந்த நிறுவனம்தான் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பி வருகிறது. சீனாவில் பாதி, சென்னையில் பாதி என்று செய்யப்பட்டு வந்த உற்பத்தியை நிறுத்திவிட்டு மொத்தமாக சென்னையில் உற்பத்தியை செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. சென்னையில் இனி அனைத்து ஐபோன் தயாரிப்பையும் மொத்தமாக செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மொத்த உற்பத்தி
ஏற்கனவே சென்னையில் இருக்கும் பாக்ஸ்கான் கிளை, ஆப்பிள் ஐபோன் எக்ஸ் ஆர் வகையை உற்பத்தி செய்தது. ஆனால் மொத்தமாக உற்பத்தி செய்யவில்லை. 80% உற்பத்தி சென்னையில் நடந்தது. அதனால் இதை முழுமையாக மேட் இன் இந்தியா என்று சொல்ல முடியாது. இந்த நிலையில்தான் மொத்தமாக முழுக்க முழுக்க சென்னையிலேயே ஐபோனை தயாரிக்க ஆப்பிள் நிறுவனமும் பாக்ஸ்கான் நிறுவனமும் முடிவு செய்துள்ளது.

ஆப்பிள் முடிவு
ஆம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 மாடலை மொத்தமாக சென்னையில் உற்பத்தி செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்னையில் உற்பத்தி செய்யப்படுவதால் இந்த போனில் இனி மேட் இன் இந்தியா என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். அடுத்த மூன்று வருடங்களுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து மாடல்களும் இங்கேயே உற்பத்தி செய்யப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

ஏற்கனவே உள்ளது
சென்னையில் ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பும் ஃபாக்சான் நிறுவனம் உள்ளது. அதேபோல் அவர்கள் சென்னையில் கூடுதலாக 7500 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. தைவானை சேர்ந்த இந்த நிறுவனம் சீனாவில் இருந்து மொத்தமாக வெளியேறி சென்னையில் பல்வேறு முதலீடுகளை செய்ய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications