ரூ.7500 கோடி.. சென்னைதான் வேண்டும்.. குறி வைத்த ஆப்பிள் நிறுவனம்.. முதலீடு செய்யும் ஃபாக்சான்.. செம!
சென்னை: சென்னையில் ஆப்பிள் நிறுவனம் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது, தனது தொழிற்சாலையை தொடங்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகிறது. அதேபோல் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பும் ஃபாக்சான் நிறுவனம் சென்னையில் முதலீட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
சென்னையின் மீது முதலீடு செய்ய கொஞ்சம் கொஞ்சமாக உலக நிறுவனங்கள் திட்டமிட்டு வருகிறது. அதிலும் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் சென்னையில் முதலீடு செய்ய அதிக விருப்பம் தெரிவித்து வருகிறது.
சீனாவில் இருந்து உலக நிறுவனங்கள் வெளியேற தொடங்கி உள்ளது.வர்த்தக போர் காரணமாக சீனாவில் இருந்து இந்த நிறுவனங்கள் வெளியேறி வருகிறது. முக்கியமாக அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேறி வருகிறது.

சென்னை நிலைமை
இந்த நிலையில்தான் சீனாவில் இருந்து வெளியேறும் இந்த நிறுவனங்கள் சென்னையில் முதலீடு செய்ய முடிவு எடுத்து இருக்கிறது. அதன்படி சீனாவில் இருந்து ஆப்பிள் நிறுவனம் வெளியேற முடிவு செய்துள்ளது. இது சென்னை வர வாய்ப்புள்ளது. சென்னையில் தைவானை சேர்ந்த ஃபாக்சான் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. சென்னையில் ஏற்கனவே ஃபாக்சான் நிறுவனம் உள்ளது. தற்போது சென்னையில் ஃபாக்சான் நிறுவனம் கூடுதலாக 7500 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு எடுத்துள்ளது.

என்ன முடிவு
சீனாவில் மொத்தமாக முதலீட்டை நிறுத்திவிட்டு மொத்தமாக அதை அப்படியே சென்னை நோக்கி திருப்ப இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்னையில் ஸ்ரீபெரும்புதூரில் இந்த தொழிற்சாலை உள்ளது. ஃபாக்சான் என்பது ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பும் நிறுவனம் ஆகும். ஆப்பிள் நிறுவனம் கொடுத்த அழுத்தத்தால் தற்போது இவர்கள் சீனாவில் இருந்து வெளியேறுகிறார்கள்.

வேலை வாய்ப்பு
ஃபாக்சான் நிறுவனத்திற்கு ஆந்திராவிலும் ஒரு கிளை உள்ளது. இருந்தாலும் அவர்கள் சென்னையில் முதலீடு செய்ய இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் சென்னையில் அடுத்தடுத்து 6000+ வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். 3 வருடங்களில் இந்த முதலீடு முழுமையாக செய்யப்படும் என்று கூறுகிறார்கள். சென்னையில் இவர்கள் ஐபோன் எக்ஸ்ஆர் வகையை உருவாக்க உள்ளனர்.

ஐபோன் வகை
இதற்கு முன் சென்னையில் ஐபோன் எஸ்இ வகை உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் சென்னையில் மொத்தமாக ஆப்பிள் போன் தயாரிப்பு மாற்றப்படலாம் என்கிறார்கள். அதாவது சீனாவில் இருக்கும் கிளை நிறுவனத்தை ஆப்பிள் சென்னைக்கு மாற்றலாம். ஃபாக்சான் நிறுவனத்தை சென்னை அனுப்ப ஆப்பிள்தான் என்பதால் அதே ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் சென்னையை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications