Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐபிஎஸ் அதிகாரிகள் தீபா சத்யன், திசா மிட்டல் மீது நடவடிக்கை.. கட்டாய காத்திருப்புக்கு காரணம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் பள்ளிக்கரணை துணை ஆணையர் தீபா சத்யன், சென்னை பெருநகர கிழக்கு இணை ஆணையர் திசா மிட்டல் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 'மறக்குமா நெஞ்சம்' என்றதலைப்பில் சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் நடைபெற்றது. இந்த இசைக்கச்சேரியை Orchid Productions ப்ரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனமும், 5, AC Block 3rd St, Anna Nagar, Chennai, Tamil Nadu 600040 என்ற முகவரியில் இயங்கி கொண்டிருக்கும் ACTC Events என்ற நிறுவனமும் ஒருங்கிணைத்து நடத்தினர். பனையூரில் இருக்கக்கூடிய ஆதித்யா ராம் பேலஸில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஐந்தாயிரம் முதல் 20 ஆயிரம் வரை பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் பலரும் வந்திருக்கின்றனர்.

AR Rahman concert issue 2 IPS officers in waiting list in Chennai

அந்த நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அருகே உள்ள சாலை கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் அளவுக்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து தங்கள் வந்திருந்த கார்களை சாலையோரம் நிறுத்திவிட்டு ஐந்து கிலோ மீட்டர் வரை நடந்தே நிகழ்ச்சி நடக்கக்கூடிய இடத்திற்கு வந்த ரசிகர்களால் நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு உள்ளே செல்ல முடியவில்லை.

15000 பேர் மட்டுமே அமர்ந்து வேடிக்கை பார்க்கக்கூடிய ஒரு இட வசதியை வைத்துக்கொண்டு 50,000 மேற்பட்டோருக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிகழ்ச்சிக்கு குழந்தைகளை அழைத்து வந்த தாய்மார்கள் பலரும் கதறினர். ஒரு நூறு மீட்டர் இடைவெளியில் தன்னுடைய குழந்தைகளை பிரிந்த ஒரு தாய் அந்த குழந்தைகளிடம் நெருங்க முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல். உள்ளே சென்றால் மூச்சு கூட விட முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டது. உயிர் பிழைத்தாலே போதும் என்று பலரும் திரும்பி சென்றனர்.

ரூ.2000 முதல் ரூ.25ஆயிரம் வரை கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்களுக்கு இருக்கைகள் கிடைக்கவில்லை. கூட்டத்துக்குள் சிக்கி வெளியே வரமுடியாமல் பெண்கள், முதியவர்கள் திணறினர். இதைக் கண்டித்து, இதுவரை இப்படிஒரு மோசமான இசை நிகழ்ச்சியைப் பார்த்ததே இல்லை என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைச் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்தனர்.

வடநெம்மேலியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சென்னை திரும்பிக் கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின் வாகனமும் நெரிசலில் சிக்கியது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை நடத்திய ஏசிடிசி (ACTC) நிறுவனம் சமூக வலைதளத்தில் மன்னிப்பு கோரியுள்ளது. "கூட்ட நெரிசலால் கலந்துகொள்ள முடியாதவர்களிடம் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறோம். அதற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.இதன் தொடர்ச்சியாக ஏ.ஆர்.ரஹ்மான், 'இசைநிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிவிட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாதவர்கள் [email protected] என்ற மெயிலுக்கு உங்கள் டிக்கெட்டின்நகலை பகிருங்கள். எங்கள் குழு விரைவில் உங்களுக்குப் பதில் அளிக்கும் என்று ஏஆர் ரகுமான் பதிவிட்டார்.

இந்நிலையில், அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டம், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்பேரில், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில், சட்டம் - ஒழுங்கு இணை ஆணையர் மூர்த்தி, பள்ளிக்கரணை துணை ஆணையர் தீபா சத்யன் ஆகியோர் பனையூரில் இசை நிகழ்ச்சி நடந்த இடத்தில் நேற்று ஆய்வு நடத்தி, அறிக்கையை டிஜிபிக்கு அனுப்பி வைத்தனர்

இதனை அடுத்து பள்ளிக்கரணை துணை ஆணையர் தீபா சத்யன், சென்னை பெருநகர கிழக்கு இணை ஆணையர் திசா மிட்டல் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நிகழ்ச்சி குளறுபடி, போக்குவரத்து பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில், "பெருநகர சென்னை கிழக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையரான ஐபிஎஸ் அதிகாரி திஷா மிட்டல், கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தாம்பரம் காவல் ஆணையரகத்தின் பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு துணை ஆணையரான ஐபிஎஸ் அதிகாரி தீபா சத்யன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு கண்காணிப்பாளரான ஐபிஎஸ் அதிகாரி ஆதர்ஷ் பச்சேரா, திருநெல்வேலி கிழக்கு சரக இணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பாஜக சார்பில் நடந்த இந்து சமய அறநிலையத்துறை முற்றுகைப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த தவறியதால், ஐபிஎஸ் அதிகாரி திஷா மிட்டலும், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், நடந்தத இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளால் எழுந்த புகாரின் காரணமாக, துணை ஆணையர் தீபா சத்யனும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+