திருமண பிரிவு குறித்து கற்பனை கட்டு கதைகள்..வீடியோக்களை நீக்காவிட்டால் வழக்கு! ஏஆர் ரஹ்மான் நோட்டீஸ்
சென்னை: ஏ.ஆர் ரஹ்மான் திருமண பிரிவு குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களுடன் கட்டுரைகள், வீடியோக்களை சில ஊடகங்கள் வெளியிடப்பட்டுள்ளது, இதனால் ஏ.ஆர் ரஹ்மான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்பும் வகையில் வெளியிட்ட பதிவுகளை நீக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தமிழ் துறையுலகின் பிரபல இசை அமைப்பாளராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோட்சி வருபவர் ஏ.ஆர்.ரகுமான். கடந்த 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானுவை திருமணம் செய்து கொண்டார் ராகுமார்.

இந்த தம்பதியினருக்கு இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் திருமண பந்தத்தில் 30 ஆண்டுகளை நெருங்கி வரும் வேளையில் ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்தார்.
இருவருக்கும் இடையே தீர்க்க முடியாத இடைவெளி உருவானதாக அவர் தெரிவித்திருந்தது திரையுலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பதிவிட்டிருந்த ஏ.ஆர்.ரகுமான் தங்களது திருமண பந்தம் 30 ஆண்டுகளை எட்டும் என நம்பி இருந்தோம். ஆனால் எல்லாமே கண்ணுக்கு தெரியாத முடிவாக சென்று விட்டது என எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக கூறியிருந்தார்.

ஏ.ஆர் ரகுமானின் அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்தில் அவரது இசைக் குழுவில் பேஸ் கிட்டாரிக்காக பணிபுரியும் மோஹினி டே என்பவரும் தனது கணவரை பிரிவதாக அறிவித்திருந்தார். இதை அடுத்து சமூக வலைதளங்களில் ஏராளமான கட்டுக்கதைகளும் கருத்துக்களும் உலாவியது.
இந்த நிலையில் அந்த விவகாரங்களுக்கும் தங்களது பிரிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என சாய்ரா பானு தரப்பு கூறி இருந்தது. மேலும் தனது தந்தை குறித்து அவதூறான கருத்துக்கள் ஆதரமற்ற வதந்திகள் பரப்பப்படுவதாக ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீனும் கூறி இருந்தார். இந்த நிலையில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு கருத்துக்கள் பரப்பப்படுவதாகவும், இதுபோன்ற கருத்துகளால் ஏ.ஆர் ரஹ்மான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்பும் வகையில் வெளியிட்ட பதிவுகளை நீக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டீஸில்," ஏ.ஆர் ரஹ்மான் திருமண பிரிவு குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களுடன் கட்டுரைகள், வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஏ.ஆர் ரஹ்மான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். அதனால் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்பும் வகையில் வெளியிட்ட பதிவுகளையும் சில கற்பனையில் அளித்த பேட்டிகளையும் நீக்க வேண்டும். இந்த அவதூறு வீடியோக்கள், கட்டுரைகளை உடனடியாக நீக்காவிட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டப்பிரிவுகளின் கீழ் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்படும்" என கூறப்பட்டுள்ளது.

-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications