அண்ணாசாலை தர்கா சந்தனக்கூடு விழா.. ஏ.ஆர்.ரகுமான் பிரார்த்தனை.. ஆடி காரில் வந்து ஆட்டோவில் பயணம்
சென்னை: அண்ணாசாலை தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவில் சிறப்பு பிரார்த்தனையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்றார். அவரை காண அங்கு ரசிகர்கள் சூழ்ந்ததால் ஆடி காரில் வந்திருந்த அவர் கூட்ட நெரிசலால் அங்கிருந்த ஆட்டோவில் புறப்பட்டு சென்றார்.
சென்னை அண்ணா சாலையில் புகழ்பெற்ற ஹஸ்ரத் சையத் மூசா காதிரி என்னும் தர்கா அமைந்துள்ளது. சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் அமைந்துள்ள இந்த தர்காவில் மத வேறுபாடு இன்றி மக்கள் வந்து வழிபடுவது வழக்கம். ஹஸ்ரத் சையத் மூசா ஷா காத்ரி பாக்தாதி 450 ஆண்டுகளுக்கு முன்பு பாக்தாத் ஷரீப்பில் இருந்து வந்து , தற்போது மவுண்ட் ரோடு தர்கா என்று அழைக்கப்படும் இடத்தில் வாழ்ந்தார்.

ஹஸ்ரத் சையத் மூசா ஷா காத்ரி பாக்தாதி நோய்களை சிறந்த குணப்படுத்தும் சக்திகளைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் இறந்தவுடன், அவர் அவரது வீட்டிற்குப் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டார், இங்கே அவரது குடும்பத்தினர் தர்கா ஷரீஃப் எழுப்பினர். இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு கந்தூரி மற்றும் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.
இன்றைய தினம் சென்னை அண்ணாசாலை தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவில் சிறப்பு பிரார்த்தனையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்றார். அவரை காண அங்கு ஏராளமான ரசிகர்கள் கூடினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படவே, தனது காரில் செல்லாமல் அங்கிருந்த ஆட்டோவில் புறப்பட்டு சென்றார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications