Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"4 செல்போன்கள், 20 பெண்கள்.." அப்புறம் அந்த ரீல்ஸ்? தெய்வச்செயல் பற்றி அரக்கோணம் பெண் திடுக் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் திமுக பிரமுகர் தெய்வச்செயல் மீது கல்லூரி மாணவி ஒருவர் திருமண மோடி மற்றும் அரசியல்வாதிகளுக்கு இரையாக்க முயற்சித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன் வைத்து புகார் அளித்துள்ளார். இதுதொடர்பான புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறை, அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த புகார் தேசிய அளவில் கவனம் பெற்ற நிலையில், தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணையை கையில் எடுத்துள்ளது.

இதனிடையே தெய்வச்செயல் மற்றும் அவரின் மனைவி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் கொடுத்திருக்கிறது. நேற்று ராஜ் பவன் வந்த பாதிக்கப்பட்ட ஆளுநரிடம் புகார் அளிக்க முயற்சித்தார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ரெட் பிக்ஸ் யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ராஜ் பவனில் என்னை யாரும் அனுமதிக்கவில்லை. ஆளுநரை பார்க்க முடியாது. மெயிலும் புகார் கொடுங்கள் என்றனர்.

Arakkonam DMK Functionary Deivaseyal Faces Sexual Harassment Allegations Victim s Redpix Interview Sparks Outrage

ராஜ் பவனில் நடந்தது என்ன?

தொடர்ந்து அதே இடத்தில் செய்தியாளர்களிடம் பேசினேன். அப்போது வந்த போலீசார், என்னை ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு ஆர்டிஓ அலுவலகம் அழைத்து செல்கிறேன் என்று அலைக்கழித்தனர். தெய்வச்செயலுக்கு எப்படி முன் ஜாமீன் கிடைத்தது என்றே தெரியவில்லை. யாரை காப்பாற்றுவதற்காக இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை என்று கூறினார்.

போலி திருமணம்

பின்னர், திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்ததாக போலீஸ் அறிக்கையில் இருந்தது தொடர்பான கேள்விக்கு, அப்படியெல்லாம் கிடையாது. ரிஜிஸ்டர் கூட செய்யாமல் திருமணம் செய்தார். ஏற்கனவே என் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அதனை பற்றி பேச விரும்பவில்லை. திருமணம் செய்ய வேண்டாம் என்று சொன்ன போதும், தாலி கட்டிக் கொண்டு நீ படி.. பின் பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.

சந்தோஷமாக ரீல்ஸ் எடுத்தது ஏன்?

ரீல்ஸ் கூட சந்தோஷமாக போடவில்லை.. அது ஒன்றுதான் திருமணம் நடந்ததற்கான எவிடன்ஸ்.. எனக்கு ஒரு பிரெண்ட் இருக்கிறாள்.. அவளின் மாமா தான் தெய்வச்செயல். அவரை அங்கிள் என்றே சொல்லுவேன்.. அப்போதெல்லாம் திமுகவில் இருக்கிறேன்.. எந்த பிரச்சனை என்றாலும் சொல் என்பார்.. அவர் வந்ததே என்னை பார்க்கத்தான் என்று பின்னாடி தான் தெரிய வந்தது.

பழகியது எப்படி?

என் வீட்டில் தந்தை - அண்ணா இடையில் பிரச்சனை போய்க் கொண்டிருந்தது. அந்த பிரச்சனை பற்றி என் பிரெண்டிடம் சொல்ல, அது தெய்வச்செயலுக்கு தெரிந்துவிட்டது. அந்த பிரச்சனை அவர் சரி செய்தார். அதன்பின் என்னுடன் பேச தொடங்கினார்.. என்னை டார்ச்சர் செய்வார், கெஞ்சுவார்.. கல்லூரிக்கு செல்லும் போதெல்லாம் கண்ணீருடன் செல்வேன்.. ஊரில் கூட வந்து கேட்டு பாருங்கள்..

2 திருமணம் செய்த தெய்வச்செயல்

என்னை பற்றி ஊரிலும் தப்புத்தப்பாக சொல்ல தொடங்கிவிட்டார்கள்.. திருமணம் முடிவடைந்த பின்னரே எல்லாம் போலி என்று தெரிந்தது.. அவருடன் அக்காவாக வந்தவரும் போலி தான்.. திருமணத்திற்கு பின் என் வீட்டில்தான் இருந்தேன். பிப்ரவரி மாதம்தான் எல்லோருக்கும் என்னை அறிமுகம் செய்து வைத்தார். தெய்வச்செயலுக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் முடிந்துவிட்டது.

2வது மனைவியின் மூலம் தெரிந்த உண்மை

அந்த 2வதாக திருமணம் செய்த பெண்ணுடன் 5 ஆண்டுகளாக வாழ்ந்திருக்கிறார்.. அந்த பெண்தான், நான் மட்டுமல்ல.. 20 முதல் 25 வயதுள்ள பெண்களை திருமணம் செய்து வாழ்வார். பிறகு சலித்தவுடன் விரட்டுவார். அவரது செல்போனை ஆய்வு செய்தால் 20 பெண்களையாவது இவர் இரையாக்கியிருப்பது தெரிய வரும். என்னிடம் 2வது மனைவி குறித்து தெரிய வந்தபின், தெய்வச்செயல் ஓடிவிட்டார்.. எனது மொபைலையும் எடுத்து கொண்டு சென்றார்.. அந்த மொபைலில் இருந்த எங்கள் திருமண வீடியோ, புகைப்படங்களை அழித்துவிட்டார்..

4 செல்போன்கள்

ஆனால் அதனை ஏற்கனவே என் குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்ததால், இப்போது ஆதாரமாக கொடுத்துள்ளேன்.. திருமணம் முடிந்த நாளில் இருந்தே எனக்கு அவர் மீது சந்தேகம் இருந்தது. அதேபோல் தெய்வச்செயலிடம் 4 செல்போன்கள் உள்ளது. அதனை ஆய்வு செய்தால், நிச்சயமாக மாட்டுவார்.. எல்லா விவரங்களும் கிடைக்கும்.

திமுகவினருக்கு அறிமுகம்

சென்னைக்கு அழைத்து வந்து அமைச்சரின் பிஏ-வுடன் அறிமுகம் செய்து வைத்தார்.. அரக்கோணத்தில் உள்ள திமுக நிர்வாகிகளுக்கு என்னை அறிமுகம் செய்து வைக்காமல், எதற்காக சென்னையில் உள்ள நிர்வாகிகளுக்கு மட்டும் அறிமுகம் செய்து வைக்க வேண்டும்? என்று தெரிவித்தார். தொடர்ந்து திமுக நிர்வாகிகளால் யாரும் உங்களிடம் தவறாக நடக்க முயன்றார்களா என்ற கேள்விக்கு, இதுவரை இல்லை.

அனுபவித்த டார்ச்சர்

ஆனால் நான் சொல்லும் நபருடன் நீ உறவு கொள்ள வேண்டும் என்று அடித்து கொண்டே இருப்பார்.. இதனை சொன்னபின், அடுத்த நாளே அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டேன்.. அம்மா, அண்ணா இருவரும்தான் என்னை காப்பாற்றினார்கள்.. தெய்வச்செயல் செய்த டார்ச்சர் காரணமாகவே தற்கொலை செய்ய முயற்சித்தேன்.. ஏற்கனவே முதல் வாழ்க்கை நன்றாக இல்லை.. இதனால் 2வது வாழ்க்கையும் இப்படியாகியது சோகமளித்தது.

போலீஸ் புகார்

மே 5ஆம் தேதி கல்லூரி தேர்வு எழுதலாம் என்று சென்ற போது, காரில் வைத்து அடிக்க தொடங்கிவிட்டார். அதன்பின் போலீசாரிடம் புகார் அளித்தேன். முதலில் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தேன்.. தாலுக்கா ஸ்டேஷனில் புகார் அளித்தேன்.. தெய்வச்செயலின் பெயரை கேட்டு புகாரை எடுத்து கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+