அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்? தலைமை அறிவிக்கும் முன்பே சுவர் விளம்பரம்.. இப்படி பண்றீங்களே
சென்னை: அரக்கோணம் லோக்சபா தொகுதிக்கான, திமுக வேட்பாளராக ஜெகத்ரட்சகனை முன்னிறுத்தி இப்போதே சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டு வருகின்றன.
வேலூர் மாவட்டம், அரக்கோணம் லோக்சபா தொகுதிக்கான வேட்பாளர் நேர்காணல் திமுகவில் மார்ச் 10ம் தேதிதான் நடந்து முடிந்தது. அதிமுகவில் மார்ச் 11ம் தேதி நடைபெற்று முடிந்தது.

அதிமுகவில் வேட்பாளர் நேர்காணல் நடைபெறுவதற்கு முன்பாகவே வேலூர் தொகுதிக்கு ஏ.சி.சண்முகம் தான் வேட்பாளர் என பிரச்சார நோட்டீஸ் ரெடி செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர் அவரது ஆதரவாளர்கள்.
இதேபோல வேலூர் லோக்சபா தொகுதி வேட்பாளர் திமுகவின் கதிர் ஆனந்த் என நோட்டீஸ் வெளியிடப்பட்டது அவரது ஆதரவாளர்களால்.

இதையெல்லாம் மிஞ்சும் வகையில், ''அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகன்'' என நெமிலி ஒன்றியத்தின் பலயிடங்களில் சுவர் விளம்பரம் செய்துள்ளனர் அப்பகுதி திமுக நிர்வாகிகள்.
''தலைமை அறிவிக்கும் முன்பாகவே விருப்பமனு அளித்தவர்களின் ஆதரவாளர்களே இன்னார் தான் வேட்பாளர்ன்னு பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். விளம்பரம் செய்கிறார்கள். இதுதான் கட்சி தலைவருக்கும், கட்சி தலைமைக்கும் இவர்கள் தரும் மரியாதையா?'' என கேள்வி எழுப்புகின்றனர் திமுக, அதிமுக தொண்டர்கள்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications