தூக்க மாத்திரை தந்த ஸ்டாலின்.. தூங்கும் லஞ்ச ஒழிப்புத்துறை? காபி தந்து "எழுப்பும்" அறப்போர் இயக்கம்
சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 8 மாதங்களில் வெறும் 4 வழக்குகளை மட்டுமே பதிவு செய்துள்ளதை கண்டித்து, அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு காப்பி பொடி அனுப்பும் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது.
தமிழகத்தில், லஞ்ச ஒழிப்புக்கு எதிரான கண்டனங்களை அறப்போர் இயக்கம் தொடர்ந்து பதிவு செய்து வருகிறது.. அந்தவகையில், திமுக அரசையும் விடாமல் கேள்வி எழுப்பியபடியே உள்ளது.

"தமிழ்நாட்டில் செயல்படாமல் தூங்கி வழியும் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகங்களை இழுத்து மூடி விட்டால், அரசுக்கு வருடம் 50 கோடிக்கு மேல் செலவு குறையும்... ஊழல் அதிகாரிகளை பாதுகாப்பதற்காக, அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை கூட விசாரிக்காமல் முதல்வர் ஸ்டாலின் கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.
ஊழல் வழக்குகள்: ஊழல் செய்தவர்களை சிறைக்கு அனுப்புவேன் என்று தேர்தல் பிரச்சாரத்தில் கோஷமிட்டு ஆட்சிக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், இப்போது ஊழல்வாதிகளை பாதுகாக்க லஞ்ச ஒழிப்புத்துறையையே முடக்கி வைத்துள்ளார்" என்று விமர்சித்து வருகிறது.
கடந்த ஜனவரி மாதம்கூட, லஞ்ச ஒழிப்புத்துறையை அறப்போர் இயக்கம் அறிக்கை வெளியிட்டு கடுமையாக சாடியிருந்தது. "கடந்த 4 மாதங்களில் மொத்தமே 2 வழக்குகள் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. 500, 1000 என்று லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை பிடிப்பதை தவிர, எந்த வேலையும் செய்யாமல் சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை தூக்க மாத்திரை சாப்பிட்டு தூங்கிக் கொண்டு இருக்கிறது.
சம்பளம்: இதற்கு எதற்கு நூற்றுக்கணக்கான பேர் சீட்டை தேய்த்து கோடிக்கணக்கில் தண்ட சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்.. அறப்போர் கொடுத்த புகார்களில் எதிலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லையே?
பல புகார்களில் FIR கூட போடப்படவில்லையே? இது தான் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் திமுக ஆட்சியில் லட்சணமா? இப்படி எந்த வேலையும் செய்யாமல் இருக்க தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை எதற்கு? இழுத்து மூடிவிட்டு தமிழகத்தில் லஞ்ச ஊழலை ஒழித்துவிட்டோம் என்று அறிவித்து விடலாமே..!" என்றெல்லாம் காட்டமாக கேட்டிருந்தது பெரும் பரபரப்பை அரசியல் களத்தில் உண்டுபண்ணியிருந்தது.
அறப்போர்: கடந்த ஜனவரியில் 4 மாதங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை வெறும் 2 கேஸ்களை மட்டுமே பதிவு செய்ததாக குற்றஞ்சாட்டியிருந்த அறப்போர் இயக்கம், தற்போது, கடந்த 8 மாதங்களில் வெறும் 4 வழக்குகளை மட்டுமே பதிவு செய்துள்ளதாக மீண்டும் குற்றஞ்சாட்டியிருக்கிறது.. இதனை கண்டித்து, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு காப்பி பொடி அனுப்பும் போராட்டத்திற்கு அறப்போர் இயக்கம் ஏற்பாடு செய்திருக்கிறது.
இதுகுறித்து வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், "லஞ்ச ஒழிப்புத்துறையின் தூக்கத்தை கலைப்பது எப்படி? சென்னையில் மட்டும் லஞ்ச ஒழிப்புத்துறையின் 8 பிரிவுகள் செயல்படுகின்றன. அவர்கள் இணைந்து திமுக ஆட்சியில் மொத்தமாக பதிவு செய்த FIRகள் 75 மட்டுமே.
மோசமான நிலைமை: அதிலும் 2024ம் வருடத்தில் கடந்த 8 மாதங்களில் வெறும் 4 FIRகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 1.5 வருடங்களாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக பதவி வகிக்கும் Abhay Kumar Sing IAS காலத்தில் DVAC தூக்கத்தில் இருக்கிறதா அல்லது போதையில் இருக்கிறதா என்று தெரியாத மோசமான நிலையில் இருக்கிறது.
அறப்போர் கொடுத்துள்ள KP Park ஊழல் புகார் மற்றும் Smart City ஊழல் புகார்களை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுமதி கொடுக்காமல் அதற்கு பதிலாக முதல்வர் ஸ்டாலின் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்துள்ளார்.
கலையும் தூக்கம்: ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான மக்கள் பணத்தை விழுங்கி செயல்படும் லஞ்ச ஒழிப்புத்துறை இப்படி தூங்கிக் கொண்டு இருப்பதால் ஊழல்வாதிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இவர்களின் தூக்கத்தை நாம் தான் கலைக்க வேண்டும்.
வருகிற ஞாயிறு மாலை 5 மணிக்கு அறப்போர் அலுவலகத்தில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு காப்பி பொடி அனுப்பி அவர்கள் தூக்கத்தை கலைக்க முயற்சி செய்ய இருக்கிறோம். நீங்களும் காப்பி பொடியுடன் வந்தால் நமது அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கலாம்" என்று அந்த அறிவிப்பில் அறப்போர் இயக்கம் பதிவிட்டிருக்கிறது.. திமுக அரசை கண்டித்து முன்னெடுக்கப்படும் இந்த போராட்டமானது தமிழக மக்களின் கவனத்தையும் பெற்று வருகிறது.
திமுக அரசு மீது அறப்போர் இயக்கம் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும்நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி உட்பட அதிமுக தலைவர்களையும் விடாமல் விமர்சித்து வருகிறது.. ஆனால், இதனை அதிமுக மறுத்து வருகிறது..
அத்துடன், திமுகவிற்கு B டீம் என்றும், முடிந்தால் பொங்கல் பரிசு தொகுப்பில் நடைபெற்ற ஊழலை வெளிக்கொண்டு வர ஆய்வுகளை நடத்தட்டும் என்றும் அதிமுகவின் சட்ட ஆலோசனை குழு உறுப்பினர் இன்பதுரை ஒருமுறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications