• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

யார் மீதெல்லாம் கேஸ்.. யார் போர்ஜரி.. யார் பாவம்.. புட்டு புட்டு வைக்கும் அறப் போர் இயக்கம்!

|

சென்னை: அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரெட்சகன் மீது குற்ற வழக்கும், பாமக வேட்பாளர் ஏகே மூர்த்தி மீது ஃபோர்ஜரி வழக்கும் உள்ளதாம்.. இவர்கள் மீது மட்டுமல்லாமல் இப்போது போட்டியிடும் தமிழக வேட்பாளர்களின் விவரங்களை புட்டு புட்டு வைக்கிறது ஒரு அமைப்பு!

இந்த தேர்தலில் சத்தமே இல்லாமல் ஒரு முக்கிய பங்கினை முன்னெடுத்து வரும் அந்த அமைப்பின் பெயர், "அறப்போர் இயக்கம்". உங்கள் தொகுதியில் போட்டியிட கூடிய வேட்பாளர்கள் விவரங்கள், எத்தனை பேர், அவர்களின் பின்னணி, வழக்கின் விவரங்களை புள்ளி விவரங்களுடன் அள்ளி தருவதுதான் இந்த அமைப்பின் முக்கிய பணியே!

"ஆராய்ந்து சிந்தித்து வாக்களியுங்கள்" என்று அந்த வீடியோ ஆரம்பமாகிறது. இதில் ஒரு பெண் இந்த தகவல்களை தருகிறார். உதாரணத்துக்கு அதில் அரக்கோணம் தொகுதி பற்றி சொல்கிறார். இதோ அந்த விவரம் உங்களுக்காக:

ட்ரியோ.. ட்ரியோ.. ட்ரியோ.. டுய்ய்ய்ய்.. ஜட்கா ஓட்டி திண்டுக்கல்லை மிரள வைத்த மன்சூர் அலிகான்!

 வேட்பாளர்கள்

வேட்பாளர்கள்

"6 சட்டமன்ற தொகுதியை கொண்டதுதான் அரக்கோணம் தொகுதி. அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, திருத்தணி, காட்பாடி, ஆற்காடு ஆகும். இந்த முறை தேர்தலில் 19 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 1 பெண் வேட்பாளர், 18 ஆண் வேட்பாளர்கள்" என்று சொல்லி ஒவ்வொருவரை பற்றியும் விவரிக்கிறார்.

நடுங்க வைக்கும் புகார்கள்.. இத்தனை கேஸ்களா? உங்கள் தொகுதி எம்.பியின் கேஸ் ஹிஸ்டரி தெரியுமா?

 ஜெகத்ரெட்சகன்

ஜெகத்ரெட்சகன்

அதில் இப்போதைக்கு அரக்கோணத்தில் பலத்த போட்டியில் உள்ள பாமக வேட்பாளர் ஜிகே மணி, திமுக வேட்பாளர் ஜெகத்ரெட்சகன் ஆவார்கள். இவர்களை பற்றி இந்த வீடியோவில் தெரிவித்துள்ளதாவது:

 2 வழக்குகள்

2 வழக்குகள்

வேட்பாளர் பெயர் திரு. எஸ். ஜெகத்ரெட்சகன். திமுகவை சேர்ந்தவர். இவர் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவருக்கு வயது 71. சுய தொழில் செய்வதாகவும், சமூக சேவை செய்வதாகவும் கூறியுள்ளார். இவரது சொத்து மதிப்பு சுமார் 114 கோடி. இவரது கடன் மதிப்பு 16 கோடி. நிகர சொத்து மதிப்பு 98 கோடி. இவர் மீது 2 குற்ற வழக்குகள் உள்ளன. அதாவது அரசாங்க வருவாய் பதிவுகளை மாற்றியமைத்தாக 2 வழக்குகள் உள்ளன. இவரது சின்னம் உதயசூரியன்.

 6 குற்ற வழக்குகள்

6 குற்ற வழக்குகள்

அடுத்த வேட்பாளர் திரு. ஏகே மூர்த்தி. பாட்டாள் மக்கள் கட்சியை சேர்ந்தவர். இவரது வயது 51. இவரது கல்வி எம்ஏ சோஷியாலஜி. செய்யும் தொழில் சுயதொழில். மேலும் அரசியல்வாதியாக இருப்பதே ஒரு தொழிலாக குறிப்பிட்டுள்ளார். இவரது சொத்து மதிப்பு 4 கோடியே 60 லட்சம். கடன் மதிப்பு 77 லட்சம். நிகர சொத்து மதிப்பு 3 கோடியே 60 லட்சம் ஆகும். ஃபோர்ஜரி உட்பட 6 குற்ற வழக்குகள் இவர் மீது பதிவாகி உள்ளது. இவரது கட்சியின் சின்னம் மாம்பழம்" என்கிறது அந்த வீடியோ பதிவு

 ஆரணி ஈரோடு

ஆரணி ஈரோடு

இதேபோல ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது அறப்போர் இயக்கம். உங்களது தொகுதி வேட்பாளர்களை நீங்களும் அறிந்து கொள்ள கீழ்க்காணும் இணைப்புகளில் போய்ப் பார்க்கலாம்.

அரக்கோணம்
https://youtu.be/rX9UmC_mA5Q
ஆரணி
https://youtu.be/KgGgsl_7lWk
ஈரோடு
https://youtu.be/T6WHqTASKoY
கடலூர்
https://youtu.be/6fzkWl1YhsM
கன்னியாகுமரி
https://youtu.be/Ywjw4FEZdAE
கரூர்
https://youtu.be/6jWeinHg1YQ

 பெரம்பலூர் புதுச்சேரி

பெரம்பலூர் புதுச்சேரி

புதுச்சேரி
https://youtu.be/PeatjQ7vb70
பெரம்பலூர்
https://youtu.be/_V7WdjGsHMc
பொள்ளாச்சி
https://youtu.be/LCthY9qXLkE
மதுரை
https://youtu.be/0-izi0aUPX8
மத்திய சென்னை
https://youtu.be/SkhWgwBinjU
மயிலாடுதுறை
https://youtu.be/uaKaMQdBqFo
ராமநாதபுரம்
https://youtu.be/5SKnrN2kPPs

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

தென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
வருடம்
வேட்பாளர் பெயர் கட்சி லெவல் வாக்குகள் வாக்கு சதவீதம் வெற்றி வித்தியாசம்
2014
டாக்டர் ஜெ. ஜெயவர்த்தன் அஇஅதிமுக வென்றவர் 4,38,404 41% 1,36,625
டி.கெ.எஸ். இளங்கோவன் திமுக தோற்றவர் 3,01,779 28% 0
2009
ராஜேந்திரன் சி அஇஅதிமுக வென்றவர் 3,08,567 42% 32,935
பாரதி ஆர்.எஸ். திமுக தோற்றவர் 2,75,632 38% 0

 
 
 
English summary
New Organazation Arappor Iyakkam has released a video about the Candidates and their details

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more