ட்விஸ்ட்! எடப்பாடி - விஜயை இணைத்த கள்ளக்குறிச்சி! ரெடியான மெகா கூட்டணி! பின்னாடி இவ்வளவு நடக்குதா?
சென்னை; கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்து உள்ளது. இந்த விவகாரம் விஜய் - எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை ஒரு குடைக்கு கீழ் இணைக்கும் வாய்ப்புகள் உள்ளதாக வாதங்கள் வைக்கப்படுகின்றன.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.
இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்., என்று குறிப்பிட்டு உள்ளார். முதல்முறையாக வாழ்த்து சொல்வதை நிறுத்திவிட்டு.. கோபமாக விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி கேம்; அதேபோல் முதல் ஆளாக இந்த விவகாரத்தில் லீகல் டீமை அனுப்பி எடப்பாடி வழக்கு போட்டுள்ளார். கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி தொடர்பாக வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து 35 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வில், அதிமுக வழக்கறிஞர்கள் அணி செயலாளர் இன்பதுரை மற்றும் வழக்கறிஞர் டி.செல்வம் ஆகியோர் முறையீடு செய்தனர்.
அப்போது அவர்கள், விஷ சாராய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரிப்பது முறையாக இருக்காது என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.
அதேபோல் இன்று சட்டசபை. ஆனால் எடப்பாடி பழனிசாமி சட்டசபை செல்லவில்லை. மாறாக அவர் நேரடியாக கள்ளக்குறிச்சி செல்ல முடிவு செய்துள்ளார் . அங்கே சம்பவ இடத்தை பார்வையிட உள்ளார். பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரடியாக சென்று பேச உள்ளார்.
கூட்டணி; இதனால் எங்கே அதிமுக - விஜய் இடையே கூட்டணிக்கான ஏற்பாடுகள் நடக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆந்திராவில் "அதிரடி" அரசியல் செய்து வந்த பவன் கல்யாண்.. தற்போது அங்கே அமைச்சராகி உள்ளார். ஆந்திரா மாநிலத்தில் 175 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அங்கே தெலுங்கு தேசம் வெற்றிபெற்றுள்ளது. ஆந்திராவில் சட்டசபை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பாக ஜெகன் 175 இடங்களிலும் வேட்பாளர்களை களமிறக்கினார்.
சந்திர பாபுவின் தெலுங்கு தேசம் - பாஜக - பவனின் ஜன சேனா கூட்டணியில் ஜன சேனா 21 இடங்களில் நின்றது. காங்கிரஸ் தனியாக சிபிஐ - சிபிஎம் உடன் கூட்டணி வைத்துள்ளது. 144 இடங்களில் போட்டியிட்ட தெலுங்கு தேசம் 135 இடங்களில் வென்றுள்ளது. பவனின் ஜன சேனா கூட்டணியில் ஜன சேனா 21 இடங்களில் நின்ற நிலையில் அனைத்து இடங்களிலும் வென்றது. அங்கே பவன் வெற்றிபெற மிகப்பெரிய கூட்டணி காரணம்.
தமிழ்நாடு அரசியல்: அதேபோல் தமிழ்நாடு அரசியலிலும் விஜய் + அதிமுக கூட்டணி உருவாகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே விஜயை செல்லூர் ராஜு மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். தொடர்ந்து இவரை பாராட்டும் விதமாக பேசி வருகின்றனர்.
இவரை கூட்டணிக்கு இழுக்கவே இப்படி அதிமுக தாஜா செய்வதாக செய்திகள் வந்தன. இப்படிப்பட்ட நிலையில்தான் கள்ளக்குறிச்சி விவகாரம் எடப்பாடி - விஜயை ஒரு குடைக்கு கீழ் கொண்டு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications