Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரிய திமிங்கலம்.. பாஜக வலையில் விழுந்தாச்சு.. யார் தெரியுமா? அண்ணாமலைக்கு குஷி.. வியந்த திருப்பூர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2 பாஜக எம்எல்ஏக்கள் அதிமுகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகி வரும்நிலையில், பெரிய தலைவர்கள், விரைவில் பாஜகவில் இணைய போவதாக இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. இப்படி ஒரு தகவலை சொல்லியிருப்பது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்பதால், அரசியல் களமே அனலடித்து கொண்டிருக்கிறது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், கோயம்புத்தூரில் முக்கியமான நபர்கள் பாஜகவில் இணைய உள்ளதாகவும், தேதி, நேரம், இடத்துடன் 26ம் தேதி (நேற்று) சொல்கிறேன் என்றும் கூறியிருந்தார்.
அண்ணாமலை இப்படி சொன்னதுமே, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எப்படியும் அதிமுகவை சேர்ந்த புள்ளிகள்தான், பாஜகவில் இணைய போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

Are big political personalities going to join Tamil Nadu BJP and what did Annamalai say about AIADMK in Tiruppur

அறிவிப்பு: அதன்படியே, அறிவிக்கப்பட்டிருந்த இடத்துக்கு நேற்று சாயங்காலம் செய்தியாளர்கள் சென்றார்கள்.. ஆனால் கிட்டத்தட்ட 7 மணியாகியும் பாஜகவினர் யாருமே அங்கு வரவில்லை... தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், எம்எல்ஏ வானதி சீனிவாசன், துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் வந்தனரே தவிர, அண்ணாமலை வரவில்லை.

அப்போது கே.பி.ராமலிங்கமும், எல்.முருகனும் பேசும்போது,"அனைத்து கட்சியில் இருந்தும் பாஜகவுக்கு வர தயாராக உள்ளனர்... கோவையில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கால அவகாசம், பாதுகாப்பு தேவைப்பட்டதால், அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, பாதுகாப்பு அம்சம் உள்ளிட்ட காரணங்களால் இணைப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினர்.

திடீர் ரத்து: சில முக்கிய தலைகள் வருவார்கள் என பாஜக தரப்பு காத்திருந்த நிலையில், அவர்களும் கடைசி நேரத்தில் வராததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும், இதனால் அண்ணாமலை அப்செட்டில் உள்ளதாகவும் தகவல்கள் வலம்வந்தன.

இப்படிப்பட்ட சூழலில், திருப்பூரில் தன்னுடைய யாத்திரையை நிறைவு செய்துள்ள அண்ணாமலை, மாற்று கட்சியினர் இணையும் விழா குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அத்துடன், பாஜகவுக்கு வரப்போகும் பெரிய பிரபலங்கள் குறித்தும் சில தகவல்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியதன் சுருக்கம் இதுதான்:

திருப்பூர் யாத்திரை: "1932-ல் நம்முடைய கொடிகாத்த குமரன், தான் பிடித்திருந்த கொடியை விடாமல், ஆங்கிலேயர் அடக்குமுறையால் எங்கு வீழ்த்தப்பட்டாரோ, அதே இடத்தில், இந்த யாத்திரை நிறைவுபெற்றுள்ளது. புத்துணர்ச்சியாக, தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றத்தை தரக்கூடிய யாத்திரையாக வீறுகொண்டு எழுந்துள்ளது. 234 தொகுதிகளில் வெற்றிகரமாக, தமிழக மக்களின் அன்போடும், ஆதரவோடும் இந்த யாத்திரை முடிந்துள்ளது.
வரும் 2024 பாராளுமன்ற தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தும். 400 எம்பிக்களையும் தாண்டி மோடி மீண்டும் பிரதமராக அமர்வார்.. அப்போது தமிழகத்தில் 39 எம்பிக்களையும் பாஜக பெறும். 20 சதவிதம் ஓட்டு சதவீதத்தை, தமிழக பாஜக தாண்டி விட்டதாக பத்திரிகைகளில் கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதனால் நாங்கள் சமாதானம் ஆகவில்லை. தனிப்பெரும் கட்சியாக தமிழக பாஜக மாறி கொண்டிருக்கிறது.

மக்கள் இயக்கம்: ஆரம்பித்து என்னவோ பாஜக யாத்திரையாக இருக்கலாம். ஆனால், முடிக்கும்போது இது ஒரு மக்கள் இயக்கமாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சியை தருவோம்.. நடைபயணத்தின்போது, மோடிஜியின் இந்த 10 ஆண்டு கால சாதனையை மக்களிடம் கொண்டு சென்றோம். மோடிஜியின் பயனாளிகள், மோடியின் நல்லாட்சியை விரும்புகிறவர்கள், 50 சதவீதமுள்ள நடுநிலை வாக்காளர்கள், இந்த தேர்தல் மோடிக்கான தேர்தல் என்கிறார்கள்..

உலகத்திலேயே இந்தியாவை முதன்மை நாடாக மாற்ற அடித்தளமிடப்போகிற தேர்தல் இது என்று அவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். இந்த 6 மாத நடைபயணத்தில் நடந்த, மிகப்பெரிய மாற்றமாக இதைதான் நாங்கள் பார்க்கிறோம்.

பெரிய புள்ளிகள்: எங்கள் கட்சியில் பெரிய புள்ளிகள் நிச்சயம் இணைவார்கள்.. நாங்கள் சொல்கிற இடத்தில்தான் அவர்கள் இணைய வேண்டும் என்று கிடையாது.. சில புள்ளிகளுக்கு டெல்லி சென்று இணைவதற்கு ஆசை உள்ளது.

பிற கட்சியிலிருந்து பெரிய புள்ளிகள், பாஜகவுக்கு வரும்போது, எங்கள் கட்சியிலுக்கும் பெரிய புள்ளிகளையும் சமாதானப்படுத்த வேண்டியிருக்கிறது. காரணம், இத்தனை காலமாக பாஜகவுக்காக அவர்கள் உழைத்திருக்கிறார்கள். வெளியிலிருந்து பல பெரிய புள்ளிகள் வருவதால், அவர்களை சமாதானப்படுத்த வேண்டி உள்ளது.

எங்கள் கட்சிக்கு வரப்போகிறவர்கள் ரொம்ப பெரிய புள்ளிகள்.. சட்டமன்ற உறுப்பினர்களாகவும் அவர்கள் இருக்கலாம்.. இதற்கு முன்பு சட்டமன்ற உறுப்பினராகவும் அவர்கள் இருந்திருக்கலாம்...

விஜயதாரணி: இப்போ அக்கா விஜயதாரணி வந்திருக்காங்க.. கன்னியாகுமரியை பொறுத்தவரை, பாஜக ரொம்ப ஸ்ட்ராங்காக இருக்கக்கூடிய தொகுதியாகும்.. நிறைய தலைவர்கள் பெற்றிருக்கக்கூடிய தொகுதியாகும்.. ஒரு எம்எல்ஏ, இன்னும் இரண்டரை ஆண்டுகள் பொறுப்பு இருக்கும்போதே அதை உதறி தள்ளிவிட்டு, பதவியை ரிசைன் பண்ணிட்டு பாஜகவுக்கு வர்றாங்க..
அப்படி பெரிய பதவிகளை தூக்கி எறிந்துவிட்டு வரும்போது, கட்சியிலிருக்கும் தலைவர்களையும் சமாதானப்படுத்தி, வெளியிலிருந்து வரும் விஜயதாரணி போன்றோர்களையும் கட்சியின் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது.

பாஜக சாதனை: சுருக்கமாக சொல்லப்போனால், பிற கட்சியிலிருந்து வரக்கூடியவர்கள், தேர்தலில் நிற்ககூடிய அளவுக்கு வல்லமையாக வருகிறார்கள். அதனால் அவர்களுக்கான இடத்தை நாங்கள் ஒதுக்க வேண்டியிருக்கிறது. இதுதான் இந்த 10 ஆண்டு கால பாஜகவின் சாதனையாக பார்க்கிறோம்.

அதுமட்டுமல்ல, எங்கள் கட்சிக்கு மிகப்பெரிய நபர்கள் வரப்போவதால், அவர்களை அன்போடும் ஆத்மார்த்தமாகவும் வரவேற்கிறோம்.. அவர்களை எங்கள் தொண்டர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். 2 பாஜக எம்எல்ஏக்கள் அதிமுகவில் இணைய போவதாக, கோவை அதிமுக பிரமுகர் அம்மன் அர்ச்சுனன் சொல்லிக் கொண்டு இருக்கிறார்... அவர்கள் யார் என்று அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்.

முணுமுணுப்பு: "பாஜகவை நாங்கள் மதிப்பதே கிடையாது" என்று சொல்லி கொண்டிருந்தவர்களெல்லாம், இன்று எப்ப பார்த்தாலும் பாஜகவையே முணுமுணுத்து கொண்டிருக்கிறார்கள்.. தூங்கும்போதும் பாஜக.. தூங்கி எழுந்தாலும் பாஜக என்று கத்திக்கொண்டேயிருக்கிறார்கள்.. இதையும் பாஜகவின் வளர்ச்சியாகவே நாங்கள் பார்க்கிறோம்" என்றார் அண்ணாமலை

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+