Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அமித்ஷாயிசம்".. மெயின் டார்கெட் ஸ்டாலின்.. அதிமுக அஸ்திரத்தில் வீழுமா திமுக.. திராவிடம் Vs காவி = ?

அதிமுக விவகாரத்தில் பாஜக மேலிடம் என்ன நினைக்கிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் விவகாரம் முற்றி உள்ள நிலையில், பாஜக ஏன் அமைதியாக இருக்கிறது? இருவரில் யாருக்கு ஆதரவு தரப்போகிறது? எம்பி தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மேலிடம் எடுக்கப்போகும் மூவ் என்ன என்பது பற்றின யூகங்கள் கிளம்பி உள்ளன.

அதிமுக விவகாரம் 3 மாத காலமாக நடந்து, இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை.. இருவரில் ஒருவர்கூட, விட்டுத்தருவது போலவும் தெரியவில்லை.

அரசியல் கட்சியின் உட்பிரச்சனைகளை, ஒரு நீதிமன்றம் தீர்த்து வைப்பது என்பது அந்த அளவுக்கு சுலபமில்லை.. அரசியல் கட்சி பிரச்சனைகளுக்கான தீர்வை, அரசியல் கட்சிக்குள்ளேதான் தேட முடியும் என்பதை நம்மால் மறுக்க முடியாது.

 ஏடாகூடம்

ஏடாகூடம்

எனினும் அப்பீலுக்கு சென்றுள்ளதால், அங்கு வரும் தீர்ப்பு மட்டுமே எடப்பாடி & ஓபிஎஸ் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்யக்கூடியதாக உள்ளது.. பொதுக்குழுவில், அவசரப்பட்டு ஏடாகூடமான தீர்மானங்களை நிறைவேற்றி, எக்கச்சக்கமான சட்ட சிக்கலில் எடப்பாடி மாட்டிக் கொண்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே அவர் பதற்றத்துடன் இருப்பதாக தெரிகிறது.. கடந்த முறை செய்தியாளர்கள் சந்திப்பிலும் அந்த பதற்றத்தை காண முடிந்தது.. இதுபோலவேதான், சட்டசபையில் அன்று வெளிநடப்பு செய்துவிட்டு, "கொடநாடு விஷயத்தில் என்னை தொடர்புபடுத்தி பேசுகிறார்கள்" சட்டசபைக்கு வெளியே பதற்றத்துடன் பேசினார் எடப்பாடி பழனிசாமி.

 டவுட் + தீர்வு

டவுட் + தீர்வு

பொதுக்குழுவில் சட்டவிதிகளை சரியாக பின்பற்றாமல் இருந்ததால், அந்த சட்டவிதிகளை காரணம் காட்டி, ஹைகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.. அதனால், இது ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவான உத்தரவாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாஜகவின் ரோல் என்ன? அதிமுக விவகாரத்தை பாஜக எப்படி பார்க்கிறது? என்ன செய்ய போகிறது? என்ற பல்வேறு சந்தேகங்கள், 3 மாதங்களாகவே வலம் வருகின்றன.. அந்த வகையில் 2 விதமான கருத்துக்கள் பாஜக குறித்து கூறப்படுகின்றன.

 டிடிவி சசிகலா ஓபிஎஸ்

டிடிவி சசிகலா ஓபிஎஸ்

முதலாவதாக, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பாஜக செயல்படுவதாக கூறப்படுகிறது.. அதாவது, எடப்பாடியின் ஆளுமை + மெஜாரிட்டி ஆதரவு + வலுவான தலைவர் இப்படி எதையுமே பாஜக விரும்பாத நிலையில், எடப்பாடி டீமின் தலையில் கொட்டி, தங்கள் கன்ட்ரோலில் இழுத்து பிடித்து வைக்கவே பாஜகவின் அரசியல் என்றும் சொல்கிறார்கள்.. ஒருவேளை இதற்கு எடப்பாடி டீம் ஒத்துவராத பட்சத்தில், அவரை கழட்டிவிட்டு, டிடிவி தினகரன் + சசிகலா + ஓபிஎஸ்ஸுடன் புது கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்திக்கவும் மேலிடம் நினைப்பதாக கூறப்படுகிறது.

 1- காரணம்

1- காரணம்

சுருக்கமாக சொன்னால், ஓபிஎஸ்ஸிடம் அதிமுகவை ஒப்படைத்துவிட வேண்டும்.. அதில், சசிகலா, தினகரனை உள்ளே கொண்டு வர வேண்டும்.. இதை வைத்து, எடப்பாடியை தனிமைப்படுத்த வேண்டும் என்பதே.. காரணம், 2024 எம்பி தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக இருந்தால், பாஜகவுக்கு, போதுமான சீட் கிடைக்காது என்பதுடன், அதிமுக ஓட்டுக்களும் தங்களுக்கு வராமல் செய்துவிடுவார் எடப்பாடி என்று பாஜக நினைக்கிறதாம்.. அதனால், எடப்பாடிக்கு பதிலாக ஓபிஎஸ் தலைமையில் கட்சி செயல்படவே மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கிறது என்கிறார்கள் ஒரு தரப்பினர்.

 2 - காரணம்

2 - காரணம்

இரண்டாவதாக, இதற்கு நேர் எதிரான கருத்துக்கள் கூறப்படுகின்றன.. அதிமுகவின் 66 எம்எல்ஏக்களில் 63 எம்எல்ஏக்கள் எடப்பாடி பக்கமே உள்ளனர்.. எம்பிக்களை எடுத்துக் கொண்டாலும், 5 பேரில் 4 பேர் எடப்பாடி பக்கமே உள்ளனர்.. 2,600 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,562 உறுப்பினர்கள் எடப்பாடி பக்கமே உள்ளனர்.. மாவட்ட செயலாளடர்களில் 99 சதவீதம் எடப்பாடி பக்கமே உள்ளனர்.. இவ்வளவு இருந்தும், இதன்மூலம் வரும் வாக்கு வங்கியை பாஜக நிச்சயம் கைவிடாது என்றே சொல்கிறார்கள்..

 இலை + மூல வேர்

இலை + மூல வேர்

அதாவது, அதிமுக பலவீனப்பட்டு இருப்பதை, தற்சமயம் பாஜக விரும்பவில்லை.. கட்சி ஒன்றாக இருக்க வேண்டும், அதேசமயம், வலுவில்லாமலும் இருக்க வேண்டும்.. காரணம், திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால், அது அதிமுகவால் மட்டுமே முடியும் என்பதை பாஜக ஆணித்தரமாக நம்புகிறது. எனவே, திமுகவை எதிர்க்க அதிமுகவின் பலம் மொத்தமாக தேவைப்படுகிறது.. மேலும், இவர்கள் 2 பேரும் பிரிந்து விட்டால் இலை முடங்கும் அபாயம் உள்ளது.. இலை தான் கட்சியின் மூலவேர் என்பதால், அதை முடக்கும் அளவுக்கு போய்விடக்கூடாது என்பதே பாஜகவின் விருப்பமாம்..

 பெரியண்ணன்

பெரியண்ணன்

ஆனால், எதிர்பாராத வகையில், இந்த 3 மாதமாக, இவர்களின் பஞ்சாயத்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டது.. கட்சி ஆபீசில் நடந்த வன்முறை சம்பவம், மேலிடத்தை நிறையவே அதிர செய்துவிட்டதாம்.. அதனால், கட்சியை பிரிக்கவும் நினைக்கவில்லை, அதற்காக யாருக்கும் பாஜக தூண்டுகோலாகவும் இருக்கவில்லை.. தங்களுக்கு கட்டுப்பட்டு, 2 பேருமே இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் அதன் எண்ணமாக இருப்பதாக கூறுகிறார்கள்.. ஒருவேளை தேர்தலுக்கு பிறகு, இதே பாஜகவின் எண்ணம், வேறு மாதிரியாகவும் மாறலாம்.. இப்போதைக்கு அதிமுகவில் பிளவை விரும்பவில்லை என்பதுதான் பாஜகவின் விருப்பம்..

சைலண்ட்மோடு

சைலண்ட்மோடு

தமிழகத்திலும் பாஜக ஆட்சி நடக்கும் என்று அமித்ஷா சொல்லியிருந்ததன் பின்னால் ஆயிரம் கணக்கு இருக்கிறது.. அரசியல் சாணக்கியரான அமித்ஷா, கூட்டணியில் உள்ள அதிமுகவை நலிவடைய விட்டுவிட மாட்டார்.. இந்த முறை தமிழக மக்களிடம், பாஜக மீதான நல்ல மாற்றம் தென்பட்டுள்ளது என்று மோடியும் தன்னுடைய கருத்துக்களை தமிழக பாஜக தலைவர்களிடம் பூரித்து சொல்லியிருந்த நிலையில், அதிமுக ஒன்று சேரவே தலைவர்கள் விரும்புகிறார்கள்" என்கிறார்கள். இப்படி இருவித கருத்துக்கள் வலம்வரும் நிலையில், திமுகவோ, சைலண்ட்டாக அனைத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+