பழனி + பழனி.. கிளைமாக்ஸ்ஸை தொடும் எடப்பாடி டீம்?.. காரணமே திமுகதான்.. சம்பவம் செய்ய போகும் தர்மபுரி
எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கும் வகையில் திமுக வியூகத்தை கையில் எடுத்துள்ளது
சென்னை: திமுக தரப்பில் இருந்து 2 விஷயங்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.. இது எடப்பாடி தரப்புக்கு செக் வைக்கும் வகையில் உள்ளதுதான் ஹைலைட்டே..!
உச்சக்கட்டத்தில் அதிமுக விவகாரம் ஓடிக் கொண்டிருக்கிறது.. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, எடப்பாடி பழனிசாமி தர்மபுரி வந்திருந்தார்..
அப்போது அவர் தொண்டர்களிடம் பேசும்போது, ஓபிஎஸ்ஸை வழக்கம்போல் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

ஈரம் - இரக்கம்
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு உடன் இருந்த துரோகிகள் தான் காரணம்.. வழக்கு மூலம் எங்களை முடக்க நினைக்கின்றனர்... அது ஒருபோதும் முடியாது... நெஞ்சிலேயே ஈரம், இரக்கம் இல்லாதவரிடம் கட்சித்தலைமை பொறுப்பை கொடுக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். ஓபிஎஸ்ஸை விமர்சிக்கும்போதெல்லாம் மறக்காமல் திமுகவையும் விமர்சித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.. கொங்குமண்டலத்தின் பெரும்பகுதியை தன் கையில் வைத்திருக்கும் எடப்பாடி, அதிலும் சொந்த தொகுதிக்கு பக்கத்திலேயே உள்ள இந்த தர்மபுரி தொகுதியில் திமுகவை விமர்சிக்க வேறு காரணம் இருக்கிறது என்கிறார்கள் அரசியல்நோக்கர்கள்.

கோட்டை
வரப்போகும் எம்பி தேர்தலுக்கு தேசியகட்சிகள் தயாராகி வருகின்றன.. அந்தவகையில் திமுகவும் தன் வேகத்தை அதிகப்படுத்தி உள்ளது.. கடந்த முறை சட்டசபை தேர்தலைபொறுத்தவரை, சொதப்பிவிட்டதே இந்த கொங்கு மண்டலம்தான்.. 2016 தேர்தலிலேயே திமுக கோட்டை விட்டது.. ஆனால் ரொம்ப குறைவான வித்தியாசத்தில்தான் தோற்றது.. இதற்கு திமுக நிர்வாகிகளும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.. இதற்கு பிறகும்கூட, 2021-ல் இதே நிலைமைதான் நீடித்தது.. ஸ்டாலின் தலைமை பொறுப்புக்கு வந்தபிறகுதான் அதிரடிகள் கையில் எடுக்கப்பட்டன..

அசைன்மென்ட்
கொங்கு தலைகளை இழுக்க செந்தில்பாலாஜிக்கு அசைன்மென்ட் தரப்பட, அவரும் தன்னுடைய குறியை தர்மபுரியில்தான் வீசினார்.. அதில் சிக்கிய பெரிய திமிங்கலம்தான், அமமுகவின் தூணாக கருதப்பட்ட பழனியப்பன்.. அமமுகவின் துணை பொதுச் செயலாளராக இருந்த பழனியப்பனை திமுகவுக்கு கொண்டு வருவதற்கு நிறைய காரணங்கள் அப்போது சொல்லப்பட்டன.. குறிப்பாக, தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கட்சியில் முக்கிய தலைவர்கள் இல்லை என்பதாலும், பழனியப்பன் திமுக பக்கம் வந்தால், இந்த இரு மாவட்டங்கள் மட்டுமல்லாமல், கொங்கு மண்டலத்துக்கே ஒரு பலமாக இருக்கும் என்றும் நம்பப்பட்டது..

பழனியப்பன்
ஆனால், பழனியப்பன் திமுகவில் இணைந்த உடனே அவருக்கு முக்கியப் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை.. என்றாலும், கட்சிக் கூட்டங்கள், பொதுக்கூட்டம் உள்ளிட்டவற்றில் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.. தனக்கான பலத்தையும் விடாமலை நிரூபித்து வருகிறார்... அனல் பறக்கும் பேச்சால் அதிமுக, பாஜகவை கடுமையாக சாடி, திமுகவையே ஆச்சரியப்பட வைத்தும் வருகிறார்.. பழனியப்பனின் ஒவ்வொரு செயல்பாடுகளும், தலைமைக்கு பறந்து கொண்டே இருந்த நிலையில், எந்நேரமும் இவருக்கு புரமோஷன் கிடைக்கலாம் என்றும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

ரிப்போர்ட்
இந்நிலையில்தான், 2 முக்கியமான விஷயங்கள் திமுக தரப்பில் சொல்லப்பட்டு வருகின்றன.. கடந்த சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில், சில மாவட்ட செயலாளர்கள் உள்ளடி வேலை பார்த்ததாக, திமுக தலைமைக்கு ரிப்போர்ட் போயுள்ளது.. அதில், தருமபுரி தொகுதியை சேர்ந்தவர்களும் அடக்கமாம்.. இவர்களில் ஒருசிலரின் செயல்பாடுகளால் தலைமைக்கு திருப்தி இல்லை என்பதால், எந்நேரமும் அவர்களின் மீது நடவடிக்கை பாயலாம் என்கிறார்கள்.. இதில், கிழக்கு மாவட்டத்துக்கு மிக முக்கிய பொறுப்பாளரை நியமிக்கவும் தலைமை முடிவு செய்துள்ளதாம்.

தர்மசங்கடம்
அந்தவகையில், 2 பேரின் பெயர்கள் அடிபட்டுள்ளன.. ஒருவர் தருமபுரி எம்பி செந்தில்குமார், இன்னொருவர் பழனியப்பன்.. ஆனால், செந்தில்குமாரின் சமீபத்திய சில செயல்பாடுகள், திமுக தலைமையை நெளிய வைத்து வருவதாலும், தர்மசங்கடங்களை சந்தித்து வருவதாலும், செந்தில்குமாருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது என்றும் சொல்கிறார்கள்.. எனவே, பழனியப்பனுக்கே அந்த சான்ஸ் அடிக்க போகிறது, அதுவும், தருமபுரி கிழக்கு திமுகவின் அடுத்த மாவட்டச் செயலாளராக புரமோஷன் கிடைக்க போகிறது என்றும் கூறுகிறார்கள்.

மாஸ் பிளான்
கட்சியில் சேருவதற்கு முன்னமேயே, தனக்கான போஸ்டிங் இதுதான் வேண்டும் என்று அடம்பிடிக்காமல், கட்சியில் சேர்ந்தும்கூட, எந்தவித போஸ்டிங்கும் கேட்காமல் அமைதி காத்து வருவதுடன், தர்மபுரி திமுகவின் வளர்ச்சிக்கும் சத்தமில்லாமல் பழனியப்பன் உதவி வருவதையும் மேலிடம் கவனித்து வந்துள்ளது.. அமமுகவிலிருந்து வந்த செந்தில்பாலாஜி எப்படி அதிரடியாக செயல்பட்டு திமுகவுக்கு பலம் சேர்க்கிறாரோ அதே ரூட்டில், பழனியப்பனும் களமிறங்க போகிறாராம்.

பழனி + பழனி
எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை, ஓபிஎஸ்ஸை டார்கெட் செய்து அரசியல் செய்து வருவதால், இதே கொங்குவில் பழனியப்பன் விஸ்வரூவமெடுக்க போவது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.. அதுமட்டுமல்ல, பாமகவுக்கு செக் வைக்கும் வகையில், திமுக பழனியப்பன் சில அதிரடிகளை கையில் எடுக்க போகிறாராம்.. சீனில் பழனியப்பன் வரப்போவதால், பழனிசாமியின் செல்வாக்கு ஏறப்போகிறதா? அல்லது இறங்க போகிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications