இரவோடு இரவாக பறந்த "எடப்பாடி".. அதிகாலையில் அடுத்தடுத்து போன "கார்கள்"! நெடுஞ்சாலையில் என்ன நடந்தது?
சென்னை: அதிமுகவில் பொதுக்குழு வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவோடு இரவாக சேலம் சென்றார். அவரின் இந்த சேலம் பயணத்திற்கு பின் வேறு சில காரணங்கள் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒற்றை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற இரட்டை நீதிபதி அமர்வில் எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்து இருந்தார்.
இந்த வழக்கு நாளையே விசாரணைக்கு வர உள்ளது. நாளை இரட்டை நீதிபதி அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது.

வழக்கு கோரிக்கை
இதற்காக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு சட்ட வல்லுநர்கள் ஆலோசனை செய்து வருகிறார்கள். எடப்பாடி தரப்பு இந்த வழக்கில் சில முக்கியமான கோரிக்கைகளை வைத்துள்ளது. முதல் கோரிக்கை இந்த வழக்கில் மறுவிசாரணை. பொதுக்குழு செல்லாது என்று அறிவித்ததற்கு எதிராக மறுவிசாரணை நடத்த வேண்டும். இது போக மேலும் சில கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமி தனது மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார். அதன்படி தனி நீதிபதி கொடுத்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

என்ன நடக்கும்
இந்த நிலையில் நாளை வழக்கு விசாரணையில் இடைக்கால ஸ்டே போடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டால் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தொடர முடியும். இந்த நிலையில்தான் நாளை விசாரணை நடக்க உள்ள நிலையில் நேற்று இரவு எடப்பாடி பழனிசாமி திடீரென சேலம் சென்றார். சேலம் நெடுஞ்சாலையில் உள்ள தனது வீட்டிற்கு எடப்பாடி நேற்று சென்றார்.

நேற்று இரவு காரில் சென்றார்
நேற்று இரவு காரில் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்திற்கு திடீரென சென்றார். இரவு 10 மணிக்கு மேல்தான் எடப்பாடி பழனிசாமி தனது வீட்டிற்கு சென்றார். அப்போது முன்னாள் அமைச்சர் செம்மலை எடப்பாடியை அவரின் வீட்டிற்கு சென்று வரவேற்றார். எம்எல்ஏக்கள் ராஜமுத்து, சுத்தர்ராஜ், மணி, பல சுப்பிரமணியன் ஆகியோர் வந்து இருந்தனர். எடப்பாடியை இரவு காத்து இருந்து அவர்கள் வரவேற்றனர்.

என்ன நடந்தது?
இவர்களில் சிலரிடம் எடப்பாடி பழனிசாமி இரவோடு இரவாக ஆலோசனை செய்தார். அதிமுக பொதுக்குழு வழக்கு பற்றி இவர்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் கார் நேற்று இரவு அவரின் வீட்டிற்கு சென்ற நிலையில் இன்று காலை சில கார்கள் அவரின் வீட்டிற்கு சென்றனர். இதில் சில முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பிக்கள் இருந்தனர். இவர்கள் காலை 7 மணி வாக்கில் எடப்பாடி வீட்டிற்கு சென்றனர்.

ஆலோசனை
அங்கு இன்று காலையும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை வீடு இதன் காரணமாக கோலாகலமாக காணப்படுகிறது. நாளை வழக்கு குறித்து அங்கு ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இன்று எடப்பாடி பழனிசாமி தனது குல தெய்வத்தை வழிபடுவார். வீட்டில் சில முக்கியமான ஆன்மீக ஆலோசனைகளில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications