"விட்ற முடியாது".. உதயநிதியை நெருங்குதா "மேலிடம்".. யார் அந்த திருக்குமரன்? விழுகிறதா "ரெட்" சிக்னல்
சென்னை: திமுக அமைச்சர் உதயநிதி "டார்கெட்" செய்யப்படுகிறாரா? என்ற சந்தேகம் கிளம்பி உள்ளது.. இதற்கு காரணம் என்ன? பின்னணியில் என்ன நடக்கிறது?
சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக, சினிமா படங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள, 'லைக்கா' நிறுவன அலுவலகங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சில தினங்களுக்கு முன்பு சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அமைச்சர் உதயநிதியின் "ரெட் ஜெயன்ட்" பட தயாரிப்பு நிறுவனத்துடன், கோடிக்கணக்கில் பண பரிமாற்றம் நடந்திருப்பதற்கான ஆவணங்கள் சிக்கியதாகவும், அதன் அடிப்படையில், சென்னை வேளச்சேரியிலுள்ள உதயநிதியின் நெருங்கிய நண்பர் ஒருவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
திடீர் சோதனை: அதேபோல, எழும்பூர் எத்திராஜ் சாலையில், வழக்கறிஞர் பாபு என்பவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.. சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தொண்டு அறக்கட்டளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது... இந்த அறக்கட்டளையின் வரவு செலவு கணக்குகள் உட்பட அனைத்தையும் பாபு கவனித்து வருகின்றார்.. இவர் உதயநிதி ரசிகர் மன்ற செயலாளரும்கூட.. அதேபோல, அறக்கட்டளை அலுவலகமும் நடத்தி வருகிறார்.
எனவே, பாபுவின் அலுவலகத்திலும், அமலாக்கத் துறை அதிகாரிகள் 12 மணி நேரம் சோதனை நடத்தினர்.. தொண்டு அறக்கட்டளையின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்தனர்..
ஆனால், அதிகாரிகள் போகும்போது, பாபு அப்போது அலுவலகத்தில் இல்லை என்பதால், நேரில் ஆஜராக உத்தரவிட்டு சென்றனர்.. அதன்படியே, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, அமலாக்கத் துறை அலுவலகத்தில், பாபு ஆஜரானார்.. 2 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், மறுநாள் ஆஜராக சொல்லவும், அதன்படியே பாபுவும் ஆஜராகி விளக்கம் தந்தார். மேலும் இன்று காலை அனைத்து ஆவணங்களையும் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற செயலாளர் பாபு இன்று காலை 10 மணியளவில் அமலாக்கத்துறை அலுவலத்தில் ஆஜராகி அறக்கட்டளை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்தார்.
யார் இந்த பாபு: ஆனால், செய்தியாளர்களிடம் பேசிய பாபு, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த சோதனை நடத்தப்பட்டது.. அறத்துடன் உதயநிதியின் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. அதிகாரிகள் சொல்லும் தேதியில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க உள்ளேன்" என்று கூறியிருந்தார்.. ஒருவேளை இது லைகா நிறுவனம் தொடர்புடைய சோதனையா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.. அதற்கு பாபு, அதனுடன் தொடர்புடையதா என்பது தனக்கு தெரியவில்லை என்று பதிலளித்திருந்தார்.
பொன்னியின் செல்வன் படத்தை லைக்கா தயாரித்திருந்தது.. அதன் தமிழக விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றிருந்தது. ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் உரிமையாளராக இருந்தவர் உதயநிதி ஸ்டாலின். அமைச்சராக பொறுப்பேற்கவிருந்ததால் சில மாதங்களுக்கு முன்பு ரெட் ஜெயன்ட் நிறுவணத்திலிருந்து வெளியேறிவிட்டார் உதயநிதி. ஆனாலும், அந்த நிறுவணம் உதயநிதியின் சொல்படியே இன்னமும் இயங்கி வருவதாக சொல்கிறார்கள்..
UN OFFICIAL : புதிய படங்களை விநியோகிக்கும் உரிமையைப்பெற, உதயநிதிதான் அன் அஃபிசியலாக பேசி வருகிறாராம்.. அதன்பிறகு நிர்வாகத்தினர் சம்மந்தப்பட்ட பட தயாரிப்பாளர்களிடம் பேசி ஒப்பந்தம் போட்டுக் கொள்வார்களாம்.
இந்த நிலையில், பொன்னியின் செல்வன் பட விவகாரத்தில், வரி ஏய்ப்பு இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், லைக்கா நிறுவணத்தில் சோதனை நடந்தது. ஆனால், இந்த ரெய்டு, லைக்காவுக்கானதல்ல என்றும், ரெட்ஜெயன்ட்டை குறி வைத்தே நடந்துள்ளது என்றும் சலசலப்புகள் கிளம்பி உள்ளன.. லைக்கா நிறுவனத்தில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், லைக்கா நிறுவணத்தின் தலைமை செயல் அதிகாரி திருக்குமரனிடம் நீண்ட நேரம் விசாரித்த வருமானவரித்துறை அதிகாரிகள், திருக்குமரனிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றிருக்கிறார்கள்.
குறி வைக்கப்படுகிறாரா?: அதில், ரெட் ஜெயன்டு நிறுவனம் மற்றும் உதயநிதி பற்றி நீண்ட வாக்குமூலம் கொடுத்திருக்கிறாராம் திருக்குமரன். இதையடுத்து, ரெட்ஜெயன்ட் நிறுவனத்துக்குள் சோதனை நடத்த வருமானவரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துவருகிறது.. இதற்கான அனுமதியை டெல்லியிடம் கேட்டுள்ளதாக தெரிகிறது.. அப்படியானால், உதயநிதி நேரடியாகவே டார்கெட் செய்யப்படுகிறாரா? என்ற கேள்வியை திமுகவினர் அதிர்ச்சியுடன் எழுப்பி வருகிறார்கள்..
எனினும், யார் வந்தாலென்ன? மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம்? உரிய ஆதாரங்களுடன் கூடிய முறையான பதில்களை, எப்போதும் தர தாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்று நம்பிக்கையுடன் சொல்கிறது உதயநிதி தரப்பு... ..!!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications