இதுவரை இப்படி அவமானப்பட்டதில்லை.. அமெரிக்க அகதி கேம்பில் கொடுமைப்படுத்தப்படும் இந்தியர்கள்.. ஷாக்
சென்னை: அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இப்படி வெளியேற்றப்படும் இந்தியர்கள்.. அதற்கு முன்பாக கைது செய்யப்பட்டு அகதிகள் முகாம், நாடு கடத்தப்படுவதற்காக வைக்கப்படும் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். இந்த முகாம்களில் இவர்கள் கடுமையான கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.
உதாரணமாக பஞ்சாபின் ஹோஷியார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான டேவிந்தர் சிங், சட்டவிரோதமாக அமெரிக்க எல்லையைத் தாண்டியதற்காக அங்கே உள்ள முகாமில் அடைக்கப்பட்டார்.
இவர்கள் அங்கே அகதிகள் முகாமில் கடுமையாக சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார் வைத்துள்ளார்.

கடுமையான குளிரில் போர்வை கூட இல்லாமல் நான் வைக்கப்பட்டு இருந்தேன். அடிப்படை மனித உரிமைகள் கூட இல்லை. குடிப்பதற்கு போதிய அளவு தண்ணீர் கூட இல்லை. உணவு வழங்கப்படவில்லை. சமயங்களில் ஒருவேளை மட்டுமே உணவு வழங்கப்பட்டது.
18 நாட்கள் என்னை தடுப்பு காவலில் வைத்து இருந்தனர். நான் சீக்கியர். என்னுடைய மதத்தை அவமதிக்கும் விதமாக பேசினார்கள். என்னுடைய தலைப்பாகையை கூட தூக்கி வீசி கொடுமை செய்தனர். என்னுடைய மதத்தை அவமதிக்கும் விதமான செயல்களை செய்தனர். என்னுடைய தலைப்பாகையை அவர்கள் குப்பை தொட்டியில் வீசினார்கள்.
எங்களுக்கு உடைகள் கூட வழங்கப்படவில்லை. நாங்கள் கொண்டு சென்ற உடைகளை கூட பறிமுதல் செய்துவிட்டனர். கடும் குளிரில் மெல்லிசான உடையை அணிந்து கடுமையாக பாதிக்கப்பட்டோம்.
வேகாத ரொட்டி, வேகாத அரிசி, சோளம் , வெள்ளரி, மாட்டிறைச்சி வழங்கப்பட்டது, ஆனால் நான் சைவ உணவு உண்பவர் என்பதால், எங்களுக்கு தனியாக உணவு வழங்கப்படவில்லை. 18 நாடுகள் நரகம் போன்ற கொடுமைகளை அனுபவித்தோம், என்று டேவிந்தர் சிங் தெரிவித்துள்ளார். இந்த முகாம்களில் இவர்கள் கடுமையான கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.
இந்தியர்கள் நாடு கடத்தல்
10 நாட்களில் 322 இந்தியர்கள் நாடு அமெரிக்க அரசால் நாடு கடத்தப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்து, அங்கிருந்து வெளியேற்றப்பட்ட 112 இந்தியர்களுடன் மூன்றாவது விமானம், பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் நேற்றிரவு தரையிறங்கியது
இவர்களில் 44 பேர் ஹரியானா, 33 பேர் குஜராத் மற்றும் 31 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். விமான நிலையத்தில் இருந்து தங்கள் மாநிலத்தவர்களை வால்வோ பேருந்தில் ஹரியானா பாஜக அரசு, அழைத்துச் சென்றுள்ளது. இதுவரை நாடு கடத்தப்பட்டவர்களில் குஜராத்திகள், ஹரியானாவை சேர்ந்தவர்கள்தான் அதிகம்.
குஜராத்திகள் நாடு கடத்தல்
முதல் கட்டமாக நாடு கடத்தப்பட்டவர்களில்,
ஹரியானா - 35
குஜராத் - 33
பஞ்சாப் - 31
உத்தரப்பிரதேசம் - 3
மகாராஷ்டிரா - 2
குஜராத்திகள் பலர் கடந்த சில மாதங்களாக 1 கோடி ரூபாய் எல்லாம் தந்து அமெரிக்காவிற்கு ஆவணங்கள் இன்றி செல்லும் நிலையில்தான் இப்படி நாடு கடத்தப்பட்டு உள்ளனர். இனியும் பல விமானங்கள் இந்தியாவிற்கு இப்படி வரலாம்.
வட இந்தியர்கள்தான் அதிகம்
இரண்டாம் கட்டமாக நாடு கடத்தப்பட்ட 199 பேரில் 67 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள், 33 பேர் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள், 8 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், 3 பேர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், கோவா, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேர், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இப்படி நாடு கடத்தப்பட்டவர்களில் தென்னிந்தியர்கள் யாரும் கிடையாது. வடஇந்தியர்கள் மட்டுமே இதுவரை நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications