"ஸ்ட்ராங்கா" இருக்கு வந்துடுங்க! ஓபிஎஸ் போட்ட போடு! வாய்ப்பே இல்லை! 2 பேரிடம் எடப்பாடி சொன்னது என்ன?
Are O Panneerselvam and his supporters wants to compromise with Edappadi Palanisamy? அதிமுக பொதுக்குழு வழக்கில் மேல்முறையீட்டு விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் மேல்முறையீட்டு விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழு வழக்கிற்கு இடையில் அதிமுகவில் நடக்கும் சில சுவாரசிய சம்பவங்கள் பற்றிய தகவல்கள் சுட சுட வெளியாகி உள்ளன.
அதிமுக பொதுக்குழு வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது. இதில் தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்களை வைத்து வருகிறது.
இந்த வாதம் முடிந்த பின் ஓ பன்னீர்செல்வம் தரப்பு 1 மணி நேரம் தங்கள் தரப்பு வாதங்களை வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க கடந்த சில நாட்களாக அதிமுகவில் முக்கியமான சில மாற்றங்கள் நடைபெற்றதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில பறவைகள் இந்த கேம்பில் இருந்து எதிர் கேம்பிற்கு கடந்த சில நாட்களாக பறந்து வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

என்ன நடந்தது?
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் ஓ பன்னீர்செல்வம் நீடிக்கும் நிலையில்.. எடப்பாடி பழனிசாமிக்கு அவர் சமீபத்தில் தூதுவிட்டதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர்கள் இருவர் மூலம் எடப்பாடிக்கு ஓ பன்னீர்செல்வம் தூது விட்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது..அதில்.. சட்டப்படி எனக்கு சாதகமாக சூழ்நிலை இருக்கிறது. எனக்கு ஆதரவாகவே வழக்கில் தீர்ப்புகள் வரும். இதனால் சட்ட போராட்டம் செய்வது தவறு.

கட்சி பெயர்
சட்ட போராட்டம் காரணமாக கட்சி எதிர்காலம்தான் பாதிக்கப்படும். அதற்கு அனுமதிக்க முடியாது. கோர்டில் எனது பக்கம் வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன. அதனால் நாம் சேர்ந்து செயல்படுவோம் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு எடப்பாடிக்கு தூதுவிட்டதாக கூறப்படுகிறது. இதில் ஓ பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமான இரண்டு மாஜி அமைச்சர்கள் போக இரண்டு கொங்கு மண்டல அமைச்சகர்களும் எடப்பாடியிடம் சமாதானம் பேசியதாக கூறப்படுகிறது.

சமாதானம்
எடப்பாடிக்கு நெருக்கமாக இருக்கும் இரண்டு தலைகள் அவரிடம்.. சமாதானமாக சென்றுவிடலாம் என்று கூறியதாக தெரிகிறது. பாஜக, திமுகதான் இதனால் பலன் அடையும். நாம் மீண்டும் சேருவதே சரியாக இருக்கும் என்று இரண்டு பேரும் எடப்பாடியிடம் தூது பேசி இருக்கிறார்கள். ஆனால் எடப்பாடியோ மீண்டும் நாங்கள் சேர்ந்து செயல்பட வாய்ப்பே இல்லை என்று கூறிவிட்டதாக தெரிகிறது. அவருடன் சேரவே முடியாது. அவருடன் இப்போது சேர்ந்தால் தேர்தல் நேரத்தில் தனது ஆதரவாளர்கள் பலருக்கு இடம் கேட்பார்.

பொறுப்பு
கட்சி பொறுப்புகளில் பாதிக்கு பாதி கேட்பார். எனக்கு சிக்கல் இல்லை. உங்களுக்குத்தான் அதனால் சிக்கல். எனவே அவருடன் சமாதானம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று எடப்பாடி கூறியதாக தெரிகிறது. அதோடு தென் மண்டல மாஜி ஒருவரும், சட்டம் படித்த மாஜி ஒருவருடம் ஓபிஎஸ்ஸை மீண்டும் சேர்த்துக்கொள்ளவே கூடாது. அவருக்கு இடம் தரவே கூடாது என்று எடப்பாடிக்கு "கொம்பு" சீவிட்டதாகவும் கூறப்படுகிறது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications