ஆணுறையை இப்பவே வாங்க ஆரம்பிச்சிட்டாங்க.. 30% உயர்வு எப்படி? தட்டுப்பாடு வரப்போகுதா? ஈரான் போர் விளைவு
சென்னை: ஆணுறை தட்டுப்பாடு அபாயம் மீண்டும் எழுந்துள்ளது.. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்து வரும் போர், கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் விலையைத் தாண்டி, இப்போது ஆணுறை சந்தையையும் நேரடியாகப் பாதித்துள்ளது. போரினால் ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளால், உலகின் மிகப்பெரிய ஆணுறை தயாரிப்பு நிறுவனமான மலேசியாவின் கரெக்ஸ் (Karex), தனது தயாரிப்புகளின் விலையை 30 சதவீதம் வரை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு உலகெங்கிலும் உள்ள பொது சுகாதார அமைப்புகளுக்கு கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.
உலகின் மொத்த ஆணுறை தேவையில் 5-ல் ஒரு பங்கை உற்பத்தி செய்யும் கரெக்ஸ் நிறுவனம், ஆண்டுக்கு சுமார் 500 கோடி ஆணுறைகளைத் தயாரித்து வருகிறது.

இந்த நிறுவனம் டியூரெக்ஸ் மற்றும் ட்ரோஜன் போன்ற முன்னணி பிராண்டுகளுக்குப் பொருட்களை வழங்குவது மட்டுமின்றி, ஒன் (ONE) என்ற தனது சொந்த பிராண்டையும் விற்பனை செய்கிறது. உதாரணமாக, மலேசியாவில் 3 ஆணுறைகள் கொண்ட ஒரு பேக்கின் விலை சுமார் 2 டாலருக்கும் (9 ரிங்கிட்) அதிகமாக உள்ளது.
ஆணுறை தயாரிப்பு செலவு
இப்போது போர் சூழலால் ரப்பர் மற்றும் நைட்ரைல் போன்ற மூலப்பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், ஆணுறை தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி மருத்துவக் கையுறை தயாரிக்கும் நிறுவனங்களும் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனவாம்.
இதுகுறித்து கரெக்ஸ் நிறுவன சிஇஓ கோ மியா கியாட் சொல்லும்போது, போர் தொடங்கிய பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே உற்பத்திச் செலவுகள் கடுமையாக உயர்ந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக பேக்கேஜிங் செய்ய தேவையான அலுமினியம் தகடுகள் மற்றும் சிலிக்கான் ஆயில் போன்றவற்றின் விலை சில நேரங்களில் 100 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
ஆணுறைகளுக்கான தேவை 30% உயர்வு
சரக்கு விநியோக முறையில் ஏற்பட்டுள்ள சிக்கலால் கப்பல்கள் வந்து சேருவதில் கடும் தாமதம் ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் ஒரு மாதத்தில் செல்ல வேண்டிய இடங்களுக்கு, இப்போது 2 மாதங்கள் ஆகின்றதாம். இதனால், பல நாடுகளுக்கு சென்று சேர வேண்டிய சரக்குகள் கப்பல்களிலேயே தேங்கிக் கிடப்பதாக கோ மியா கியாட் கவலை தெரிவித்துள்ளார்.
ஒரு பக்கம் விநியோகம் தாமதமாவதால், இன்னொருபக்கம் மார்க்கெட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டு ஆணுறைகளுக்கான தேவை திடீரென 30% அதிகரித்துள்ளது. கடைகளில் ஸ்டாக் தீர்ந்து வருவதால் கஸ்டமர்கள், முன்கூட்டியே வாங்கத் தொடங்கியதே இந்த திடீர் தேவைக்குக் காரணமாகும். .
"ஆணுறை தயாரிப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ரசாயனங்கள் தேவைப்படுகின்றன. இதில் முக்கியமான ஒரு பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும், மொத்த தொழிற்சாலையின் உற்பத்தியே நின்றுவிடும்" என்றும் வார்னிங் தருகிறார்.. அப்படி உற்பத்தி பாதிக்கப்பட்டால், சுமார் 3,000 ஊழியர்களின் வேலைவாய்ப்பும் பாதிக்கப்படும்.
எரிபொருள் சந்தை
ஏற்கனவே எய்ட்ஸ் தடுப்பு மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கு அமெரிக்கா போன்ற நாடுகள் நிதியைக் குறைத்துள்ள நிலையில், இந்த போர்ச்சூழல் அந்த திட்டங்களை மேலும் முடக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது....!!!
அதுமட்டுமல்ல, இதனால், எரிபொருள் சந்தையைத் தாண்டி, அன்றாட வாழ்க்கையுடன் நேரடியாக தொடர்புடைய பொருட்கள்கூட போரின் தாக்கத்தில் சிக்கத் தொடங்கியுள்ளன என்பதும் தெளிவாகிறது....!!
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications