Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"2 பேரை தூக்கறோம்".. சரவணன் பின்னாடியே நயினாரா.. அடுத்து அவரா.. வேலையை காட்டுகிறதா திமுக.. சலசல பாஜக

பாஜகவின் நயினார் நாகேந்திரன் திமுகவில் இணைய போகிறாரா என்ற சந்தேகம் கிளம்பி உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: நயினார் நாகேந்திரன், நெல்லையில் பேசிய பேச்சு, திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளிடம் குழப்பத்தை தந்து வருகிறது.. அத்துடன் சோஷியல் மீடியாவில் விவாதத்தையும் கிளப்பி வருகிறது.

பொதுவாக, ஒருவர் அரசியலில் கட்சி மாறுவது இயல்பு.. அதற்கு ராதாரவி முதல் எஸ்வி சேகர், செந்தில்பாலாஜி என எத்தனையோ பேர் உதாரணங்களாக உள்ளனர்.

ஆனால், ஒருவர் ஒரே கட்சிக்கு 3 முறை தாவி, தாவி சென்றார் என்றால் அது டாக்டர் சரவணன்தான்.. அதேசமயம், சரவணனின், கட்சி விலகல் திட்டமிட்ட ஒன்று என்றும் பாஜகவினர் சொல்லி வருகிறார்கள்..

 2 சீனியர்கள்

2 சீனியர்கள்

மற்றொருபக்கம் சரவணனை திமுகவுக்குள் இணைக்க, மதுரையில் சிலர் போர்க்கொடி தூக்கி வருவதாகவும், இது தொடர்பாக தலைமைக்கே கடிதம் எழுதி உள்ளதாகவும் கூறப்படுகிறது.. ஆனால், சரவணன் விவகாரம் அன்று பரபரப்பாக பேசப்பட்டபோதே, பாஜகவில் 2 சீனியர்கள் குறித்த பேச்சும் சேர்ந்து அடிபட்டது.. ஒருவர் திமுகவில் இருந்து பாஜகவுக்கு போன விபி துரைசாமி, மற்றும் அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு போன நயினார் நாகேந்திரன்.

 தர்மசங்கடங்கள்

தர்மசங்கடங்கள்

இவர்கள் இருவரும்கூட, சரவணனை பின்தொடர்ந்து கட்சியை விட்டு வெளியே வரலாம்.. அவர்களும் அதிருப்தியில்தான் இருக்கிறார்கள்.. இதற்கு பாஜகவில் அவர்கள் சந்தித்த சில 'தர்மசங்கடங்களே' என்றும் சில தகவல்கள் மீடியாக்களில் கசிந்தன... இதில் நயினாரை பொறுத்தவரை, அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தவர்.. எடுத்த எடுப்பிலேயே துணைத்தலைவர் பதவியை தந்தது பாஜக.. எம்பி தேர்தலிலும் சீட் கொடுத்தது. ஆனால் நயினாருக்கோ, மாநில தலைமை பதவி காலியாக இருந்தபோது, அதன் மீது ஒரு கண் இருந்ததாகவும், குறிப்பாக, நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு இடையேதான் பலத்த போட்டியே இருந்ததாகவும் அப்போது சலசலக்கப்பட்டது.

 DRAVIDIAN STOCK

DRAVIDIAN STOCK

பிறகு நிர்வாகிகள் மாற்றத்திலாவது தனக்கு பெரிய பொறுப்பு அதாவது பொதுச்செயலாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்.. ஆனால், அதிலும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.. பிறகு பாஜக சட்டமன்ற குழு தலைவர் பதவியை நயினாருக்கு தந்தது என்றாலும், பாஜகவின் கொள்கை, கோட்பாடுகள் நயினாருக்கும் நெருடலை தந்து வருவதாக சொல்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, நீட் விவகாரத்தில்கூட, தமிழக மக்களின் ஆதரவுக்கு குரல் என்றுதான் நயினார் பேசியிருந்தார்.. இப்படி பேசியதுகூட, பாஜக மீதான தன்னுடைய அதிருப்தியின் வெளிப்பாடாகவே பார்க்கப்பட்டது.

 நிறம் மாறும் நயினார்

நிறம் மாறும் நயினார்

இந்நிலையில் நேற்றைய தினம், நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் முன்பு நயினார் பேசிய பேச்சினால், தமிழக அரசியல் கட்சிகள் குழம்பி போயுள்ளன.. தமிழக முதல்வர் நெல்லைக்கு அடிக்கடி வரவேண்டும். முதல்வரின் வருகையால் அனைத்து சாலைகளும் நிச்சயமாக வேலை பார்க்கப்படுகிறது, பழுதுபார்க்கப்படுகிறது. இதனால் எங்களுக்கு எல்லாம் சந்தோஷமாக இருக்கிறது. எனவே முதல்வர் அடிக்கடி வந்து நிறைய நலத்திட்டங்களை எங்களுக்கு தர வேண்டும்" என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசியிருந்தார்.

 2 எம்எல்ஏக்கள்

2 எம்எல்ஏக்கள்

நயினார் நாகேந்திரன் பேச்சை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட மேடையில் இருந்த அனைவரும் கூர்ந்து கவனித்தனர் என்றாலும், முதல்வரை பார்த்து உங்கள் வருகையால் தான் சாலைகள் போடப்படுகிறது என்று கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.. அத்துடன், திமுகவுக்கு நயினார் தலைமையில் ஆதரவுகள் தரப்போகிறார்களா என்ற சந்தேகமும் கிளம்பி விட்டது. ஏற்கனவே, சில மாதங்களுக்கு முன்பு தர்மபுரி எம்பி டாக்டர் செந்தில்குமார், பாஜக எம்எல்ஏக்கள் 2 பேரை தூக்க போறோம் என்று ட்விட் பதிவிட்டிருந்தது, மிகப்பெரிய சலசலப்பை அப்போது ஏற்படுத்தியது..

 விபி துரைசாமி

விபி துரைசாமி

யார் அந்த 2 பேர் என்ற குழப்பம் ஏற்பட்ட நிலையில், முதல் பெயரே நயினாராக இருக்குமோ? என்ற சந்தேகம்தான் அதிகமானது.. ஆனால், அப்படி ஒரு நிகழ்வு எதுவுமே நடக்கவில்லை.. அதேபோல, டாக்டர் சரவணன் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தபோதும், பின்னாடியே நயினார் போக போகிறார் என்று மீண்டும் சந்தேகம் உலா வந்தது.. அந்த அளவுக்கு, ஒவ்வொருமுறையும் நயினாரின் அரசியல் நிலைப்பாடு என்ன என்பது குறித்த எதிர்பார்ப்புகள் அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.

 யூகங்கள் + வியூகங்கள்

யூகங்கள் + வியூகங்கள்

நேற்றுமுன்தினம்கூட, அதிமுகவை சேர்ந்த 50 எம்எல்ஏக்கள் திமுகவுடன் லிங்கில் இருப்பதாக ஆர்எஸ் பாரதி பேசியிருந்தார்.. திமுகவுக்கு பல தரப்பிலும் ஆதரவுகள் கூடி வரும்நிலையில், ஆறுக்குட்டி போன்றோர்களும் இணைந்து வரும் நிலையில், ஒருவேளை பாஜகவில் இருந்தும் எம்எல்ஏக்கள் தாவக்கூடுமோ என்ற சந்தேகம் மறுபடியும் எழுகிறது.. அந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில், நயினார் பேச்சு இருந்ததால், இது தொடர்பான விவாதங்களும், யூகங்களும் இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன. "என்ன இருந்தாலும் விபி துரைசாமியை திமுக கைநழுவ விட்டிருக்கக்கூடாது" என்ற பேச்சுக்களும் சேர்ந்தே இணையத்தில் ஒலித்து வருகின்றன.

கொங்கு

கொங்கு

கடந்த ஒரு வார காலமாகவே, கொங்கு மண்டலத்தில் இருந்து 2, 3 புள்ளிகள் திமுகவுக்கு தாவி வரப்போகிறார்கள் என்றும், அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து கொண்டிருப்பதாகவுடம் கூறப்படுகிறது.. எடப்பாடியின் பிடியில் உள்ள கொங்குவில் இருந்து அந்த தலைவர்கள் விரைவில் திமுகவில் இணையலாம் என்று யூகமான தகவல்கள் வட்டமடிக்கும் நிலையில், இதே கொங்குவில் பாஜகவும் ஓரளவு செல்வாக்கை பெற்றுள்ளதை மறுக்க முடியாது. அந்தவகையில், அதிமுக தரப்பில் இருந்து யார் திமுகவுக்கு வந்தாலும், அது பாஜகவுக்கும் பெருத்த அடியாகவே இருக்கும் என்கிறார்கள்.

 பிளான்கள்

பிளான்கள்

முன்னதாக முதல்வர் முன்பு நயினார் பேசும்போது இன்னொன்றையும் குறிப்பிட்டார்.. "சட்டமன்றத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களையும் அவர், சமமாக நடத்துகிறார். எதிர்க்கட்சி, மாற்றுக்கட்சி என்று பாராமல் திட்டங்களை அள்ளித் தருகிறார்" என்று ஒருபடிமேலே சென்று புகழ்ந்துள்ளார்.. ஏற்கனவே இப்படி ஓபிஎஸ் புகழ்ந்ததற்குதான், அவரை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்து வருகிறார்.. இப்போது பாஜக எம்எல்ஏவே இப்படி பேசியிருப்பது, கூடுதல் கடுப்பை தருகிறது.

 பிசிராந்தையார்

பிசிராந்தையார்

இதில் இன்னொன்றையும் சொல்கிறார்கள்.. திமுகவை நயினார் புகழ்வது என்பது இது முதல் முறை கிடையாது.. அன்று நீட் விஷயத்தில் அரசுக்கு ஆதரவாக நயினார் பேசினாலும், எப்போதுமே சட்டசபையில் திமுகவை நயினார் காட்டமாக விமர்சித்தது கிடையாது.. ஜெய்ஹிந்த் விவகாரம் அன்று சட்டசபையில் எழுந்தபோதும், திமுகவுக்கு ஆதரவாக நயினார் கருத்து கூறியிருந்தது, பாஜகவுக்கு கடுப்பை தந்தது.. அதுமட்டுமல்ல, ஒருமுறை, "பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனும் போல நானும் முதல்வரும்" "எனக்கு கூடுதல் நேரம் வேண்டும்" என்று சொல்லி நயினார் அன்று கலகலக்க வைத்ததையும் நினைவுகூர வேண்டி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+