"கண் சிவந்த" மேலிடம்.. மோப்பம் பிடித்த உளவுத்துறை.. ஸ்டாலினின் மாஸ்டர் மைண்ட்.. 4 "திமிங்கிலம்" யார்
அதிமுக மாஜி அமைச்சர்கள் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
சென்னை: அதிமுக மாஜி அமைச்சர்களுக்கு எதிரான வேலைகளில் திமுக தரப்பு மும்முரமாகி உள்ளதாகவும், இது தொடர்பான முக்கிய அசைன்மென்ட் ஒன்று அதிகாரிகளுக்கு தரப்பட்டுள்ளதாகவும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
கடந்த முறை சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் பிரச்சாரம் சற்று காட்டமாகவே இருந்தது.. அதற்கு முன்பு அந்த அளவுக்கு கோபமாகவும், காரமாகவும் ஸ்டாலின் பேசியது கிடையாது.
மென்மைத்தன்மையை எந்நேரமும் கடைப்பிடிக்கும் ஸ்டாலின் தன்னுடைய பிரச்சாரங்களில், குறிப்பாக 3 தொகுதிகளில் டென்ஷனாகவே பேசியிருந்தார்...
அப்போது அந்த 3 அதிமுக அமைச்சர்களின் பெயர்களையும் சுட்டிக்காட்டி பேசியிருந்தார்.. ஒருவர் எஸ்பி வேலுமணி, இன்னொருவர் ராஜேந்திர பாலாஜி.. மற்றொருவர் சி.விஜயபாஸ்கர் ஆவர்..

குறி 1
இந்த 3 பேரின்மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை எடுத்துரைத்து, திமுக ஆட்சிக்கு வந்ததும், இவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி கூறியிருந்தார்.. தேர்தல் வாக்குறுதிகளில் இந்த கைது நடவடிக்கையானது மிகப்பெரிய அளவுக்கு அப்போது பேசுபொருளானது.. திமுக ஆட்சி அமைந்ததும் கைது செய்வோம் என்று ஸ்டாலின் சொல்லவில்லை, மாறாக, உரிய விசாரணை நடத்தி, மக்கள் முன்பு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, அதற்கு பிறகு குற்றச்சாட்டுகள் உறுதியானதும், கைது செய்வோம் என்று சட்டரீதியாகவே குறிப்பிட்டு ஸ்டாலின் பேசியதையும் இங்கு நினைவுப்படுத்த வேண்டி உள்ளது.

குறி 2
ஆனால், அன்று ஸ்டாலின் பேசியது, இன்று திமுக அரசு மீதான விமர்சனங்களாக எழுந்துள்ளது.. ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடமாகியும் ஏன் இதுவரை, ஊழல் மாஜிக்களை கைதுசெய்யவில்லை? எதற்காக ரெய்டு நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்பட்டு வருகிறது.. இதெல்லாம் ஒரு கண்துடைப்பா? திமுகவின் காலதாமதத்துக்கு காரணம் என்ன? உள்நோக்க அரசியல் உள்ளதா? லஞ்ச ஒழிப்புத்துறை மெத்தனமாக உள்ளதே? என்றெல்லாம் கேள்விகள் எழ ஆரம்பித்துவிட்டன.. இப்படியான பேச்சுகள் திமுக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த துவங்கிவிட்டதாகவும், முதல்வர் காதுக்கு ஒரு டீம் கொண்டு சென்றுள்ளனர்.

PLAN A
அனைத்தையும் கவனித்து கேட்ட முதல்வர், இந்த விஷயத்தில் பொறுமை காக்க வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறாராம்.. இதற்கு சில காரணங்களையும் சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. அதாவது, "சட்டப்படியாக இந்த விஷயத்தில் நீதிமன்றம் தான் கைது ஆர்டரை தர வேண்டும் என்று நினைக்கிறதாம் திமுக மேலிடம்.. அதுவரை அவர்கள் எந்தவகையிலும் தப்பிக்கவே முடியாத வலுவான ஆதாரங்களை திரட்ட வேண்டும் என்று மேலிடம் உத்தரவிட்டுள்ளதாம்...

PLAN B
இந்த விஷயத்தில் மாஜிக்களை பாஜக மேலிடம் காப்பாற்ற முனையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. அப்படி காப்பாற்ற முனைந்தாலோ அல்லது இந்த வழக்கையே எடுக்க விடாமல் தடுத்துவிட்டாலோ, அவைகளையும் முறியடிக்கும் வகையில் ஆதாரங்களை வலுவாக்க வேண்டும் என்று திமுக தரப்பு பிடிவாதமாக உள்ளதாம். ஒருவேளை, தேர்தல் சமயத்தில் அதிமுகவிடம் "காரியங்களை" சாதித்து கொள்ள, பாஜக இந்த வழக்குகளை கொண்டு அந்த மாஜிக்களுக்கு நெருக்கடி தரலாம்.. அப்படியே தந்தாலும் அதுவும் திமுகவுக்குதான் பிளஸ்ஸாகவே அமையக்கூடும் என்று கணக்கு போடுகிறதாம் திமுக..

PLAN C
இப்படி பொறுமையாக காய்நகர்த்தலில் திமுக ஈடுபட்டு வந்தாலும், எஸ்பி வேலுமணி, தங்கமணி, விஜயபாஸகர், எடப்பாடி பழனிசாமி இவர்கள் 4 பேர் விஷயத்தில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளதாம்.. இதற்கு காரணம், இந்த 4 பேர்களிடம் மட்டுமே பணப்புழக்கம் அதிகமாக உள்ளதால், தேர்தல் சமயத்தில் தாராளங்களை காட்ட போகிறவர்கள் என்பதாலேயே இந்த குறியை திமுக வைத்துள்ளதாக தெரிகிறது... அதுமட்டுமல்ல, இந்த 4 பேரின் பணபலம்தான், இன்று வரை மேற்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக இருக்கவும் காரணம் என்பதை திமுக அறியாமல் இல்லை.. அதனால், 4 பேருக்கு குறி என்றாலும், ஆதாரங்கள்தான் மிக முக்கியம் என்று கண்டிஷன் போட்டுள்ளதாம் திமுக மேலிடம்..!
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications