Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாமலையை விடுங்க.. பாஜக லிஸ்ட்டை கவனிச்சீங்களா? இறங்கி வர்றாரா எடப்பாடி பழனிசாமி? தாமரை வெயிட்டிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் லிஸ்ட் வெளியாகி உள்ள நிலையில், இது சில சந்தேகங்களை கிளப்பி விட்டு சென்றிருக்கிறது.

அநேகமாக இந்த மாதம் 2வது வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதில், பாஜகவை பொறுத்தவரை கடந்த 2 வருடங்களுக்கு முன்பேயே தேர்தல் களப்பணிகளில் இறங்கிவிட்டது.

Are there any chances for AIADMK BJP alliance and Major Point of preliminary Candidate list in Tamil Nadu

தமிழகம்: தமிழகத்தில்கூட, மதுரையில் இதற்கான பிள்ளையார் சுழியை போட்டு, பணிகளை துவக்கினார் மாநில தலைவர் அண்ணாமலை.. தற்போது, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் பல மாநிலங்களுக்கும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்..

தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே வேட்பாளர் பட்டியலை வெளியிட பாஜக முடிவு செய்திருந்து, அதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வந்தது.. 2 நாளைக்கு முன்புகூட, பிரதமர் மோடியின் இல்லத்தில் தேசியத் தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்கள் பிரதமருடன் இது குறித்து ஆலோசனைகள் நடத்தியிருந்தார்கள்.

லிஸ்ட் ரெடி: முதல் கட்டமாக முக்கியமான வேட்பாளர்கள் 150 பேர் போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்களின் பெயர்கள் இன்றைய தினம் வெளியாகும் என்று நேற்றே தகவல்கள் பரபரத்தன.

இதில், தமிழ்நாட்டை பொறுத்தவரை, நெல்லை, கோவை, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. நெல்லையில் நயினார் நாகேந்திரன் உட்பட பலரும் வேட்பாளராக அறிவிக்கப்படக்கூடும் என்று பாஜகவினர் எதிர்பார்த்தபடியே இருந்தனர்.. அதேபோல. எப்போதும்போல, கோவை தொகுதியை குறி வைத்து பலரும் காய் நகர்த்தி வரும் நிலையில் அது யாருக்கு என்பதிலும் எதிர்பார்ப்பு எகிறியது.

என்ன காரணம்: அந்தவகையில், இன்று மாலை பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.. ஆனால், தமிழகம் சார்பாக வேட்பாளர்கள் யார் பெயரும் அதில் இடம்பெறவில்லை.. அதுவும் அண்ணாமலையின் பெயர்கூட இடம்பெறவில்லை.. இதுதான் மிகப்பெரிய குழப்பத்தை தந்து வருகிறது.

காரணம், அண்ணாமலை தலைமையில் பாஜக தமிழகத்தில் மிகச்சிறந்த முறையில் வளர்ந்துள்ளதாக மேலிடமே புகழ்ந்து கூறுகிறது. அண்ணாமலையின் நடைபயணத்துக்காகவும் பிரதமர் மோடி, தமிழகத்துக்கு வந்து சென்றுள்ளார்.

மக்கள் நம்பிக்கை: இதைத்தவிர, "நமது கட்சியின் கடின உழைப்பு களத்தில் தெரிகிறது. தமிழ்நாடே மிகுந்த நம்பிக்கையோடு பாஜகவை எதிர்பார்க்கிறது. பாஜகவால் மட்டுமே அவர்களின் கனவுகளை நனவாக்க முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள்" என்று அண்ணாமலையை டேக் செய்து, பிரதமர் மோடி தமிழில் இந்த ட்வீட்டை பதிவிட்டிருந்தார்.

இவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தபோதிலும்கூட ஏன் தமிழக வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை என்பது குழப்பத்தை தந்துள்ளது. இதற்கு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன..

பாஜக தலைமையில் 3வது அணியை அமைக்கும் முயற்சி நடந்து வருகிறது. பிரதமர் மோடி தமிழகம் வருவதற்குள் கூட்டணி எப்படியாவது முடிந்துவிட வேண்டும் என்றும், பிரதமரின் பொதுக்கூட்ட மேடையில், கூட்டணி கட்சி தலைவர்களை ஒன்றாக மேடையேற்றி விட வேண்டும் என்றும் தமிழக பாஜக பெரிதும் முயன்றது.. ஆனால், பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டதால், கூட்டணியிலும் உடன்பாடு எட்டவில்லை.

முடிவாகவில்லை : பிரதமர் மோடி தமிழகம் வந்துசென்ற நிலையில், இன்றையதினம்கூட கூட்டணி முடிவாகவில்லை என்பதே உண்மை. எனவே, தமிழக வேட்பாளர்கள் அறிவிக்காமல் போக இதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

ஆனால், இதை ஒன்றும் பிரதான காரணமாக பார்க்க முடியாது.. காரணம், பாஜகவில் இடம்பெறப்போவது அனைத்துமே சிறுசிறு கட்சிகள்தான்.. இந்த கட்சிகளை ஒன்றிணைத்தாலும், திமுகவுக்கு இணையான ஓட்டுக்களை பெற முடியாது.. மேலும், குறிப்பிட்ட வாக்கு வங்கியையும் பாஜகவால் பெறவும் முடியாது.

கூட்டணி: அதனால்தான், அதிமுகவின் கூட்டணி வருகைக்காக பாஜக தொடர்ந்து காத்திருப்பதாகவும் தெரிகிறது. கடந்த 6 மாத காலமாகவே, அதிமுகவை மீண்டும் கூட்டணிக்கு கொண்டு வர பாஜக தரப்பில் எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளும் தோல்வியடைந்துவிட்டதாகவே தெரிகிறது..

முக்கியமாக, பாஜக தரப்பில் 4 மத்திய அமைச்சர்கள் அதிமுக தலைமையுடன் பேசி வந்தும்கூட, சாதகமான பலன்கள் பாஜகவுக்கு கிடைக்கவில்லையாம்.. அதனால்தான், கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் எடுக்கப்பட்ட முயற்சிகள் எல்லாமே தோல்வியடைந்துவிட்டதால், அனைத்து பேச்சுவார்த்தையையும் நொந்துபோய் பாஜக நிறுத்திக் கொண்டுவிட்டதாக கடந்த வாரம் செய்திகளும் கசிந்தன.

கிலியில் கட்சிகள்: ஆனால், பிரதமர் மோடியின் திருப்பூர் பேச்சானது, மேலும் சில குழப்பங்களை கிளப்பிவிட்டுவிட்டது. திடீரென, மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவை புகழ்ந்து பேசி, மொத்த தமிழக கட்சிகளுக்கும் கிலியை தந்துவிட்டார்.

அதிமுகவை காட்டிலும், எடப்பாடியை காட்டிலும், எதற்காக எம்ஜிஆர், ஜெயலலிதாவை மோடி புகழ வேண்டும்? அதிமுக ஓட்டுக்களை பாஜக பக்கம் இழுக்கும் முயற்சியா? அல்லது அதிமுகவை மறைமுகமாக சமாதானப்படுத்தி அதிமுகவுக்கு இழுக்கும் முயற்சியா? என்ற இரட்டிப்பு குழப்பம் ஏற்பட்டது,

கள்ள உறவு: அதுமட்டுமல்ல, பாஜக-அதிமுகவுக்குள்ளேயே "கள்ள உறவு" இருந்து வருகிறது என்று தொடர்ந்து திமுக கூட்டணி விமர்சித்து வரும்நிலையில், பிரதமரின் "அதிமுக புகழ்ச்சி" பேச்சானது, திமுகவின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்திவிட்டு சென்றது.

அந்தவகையில், அதிமுகவை இழக்க பாஜகவுக்கு மனசில்லை என்கிறார்கள்.. எப்படியாவது அதிமுக கூட்டணிக்குள் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் பாஜக தொடர்ந்து காத்திருப்பதாகவும், அதற்காகவே, இன்றைய தினம், பாஜகவின் முதல்கட்ட லிஸ்ட்டில், தமிழக வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

பிடிவாதம்: மாநில தலைவர் அண்ணாமலையின் பெயரை கூட அறிவிக்காமல், பாஜக லிஸ்ட்டை வெளியிட்டிருப்பது, அதிமுகவுக்கான இன்னொரு சிக்னலாகவும் பார்க்கப்படுகிறதாம்.. எனினும், இந்த காரணம் உண்மையா என்று தெரியவில்லை.. ஒருவேளை உண்மையாக இருக்கும்பட்சத்தில், மீண்டும் பாஜக கூட்டணிக்கு அதிமுக பரிசீலிக்குமா?? எடப்பாடி பழனிசாமியின் மனம் மாறுமா?? பிடிவாதம் தளருமா?? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+