கோட்டையில் கிசுகிசு.. வாய்விட்டே கேட்ட தலைவர்.. பிடி கொடுக்காத ஸ்டாலின்.. கூட்டணி சொதப்பலாகிருச்சோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாமக யாருடன் கூட்டணி வைக்க போகிறது? என்று தெரியவில்லை.. ஆனால், இதுகுறித்து ஒரு பிரத்யேகமான தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை, தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கக்கூடிய இடத்தில் பாமக திகழ்ந்து வருகிறது. தனக்கான வாக்குகளையும் தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. எனவே, பாமகவின் "டிமாண்டும்" இந்த முறை அதிகமாகவே இருக்கும் என்று தெரிகிறது.

Are there any chances of PMK alliance with DMK and What is happening in the DMK

கூட்டணி: கடந்த ஒரு வருட காலமாகவே, திமுகவுடன் பாமக கூட்டணி வைக்கலாம் என்ற பேச்சு வலம்வருகிறது. இந்த பேச்சு எப்போதெல்லாம் மீடியாவில் கசிகிறதோ, அப்போதெல்லாம், திமுகவுடனான தன்னுடைய கூட்டணியை உறுதி செய்து வருகிறார் விசிக தலைவர் திருமாவளவன்.

அதேபோல, பாஜகவை முன்னிறுத்தி, அதிமுகவுக்கு திருமாவளவன் அடிக்கடி அட்வைஸ்களை, தரும்போதெல்லாம், ஒருவேளை, திமுக கூட்டணியிலிருந்து விசிக விலக போகிறதா? என்ற சந்தேகமும் இணையத்தில் கிளம்பும். இப்போதுகூட, விசிகவுடன் அதிமுக தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது..

பாமக தலைவர்: அதேபோல, லோக்சபா தேர்தலில், ஒரு தொகுதி ஒதுக்காவிட்டால், மாற்றி முடிவெடுக்க வேண்டியிருக்கும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனும் சொல்லிவிட்டார்.. இப்படிப்பட்ட சூழலில்தான், 2 நாட்களுக்கு முன்பு, பாமக தலைவர் அன்புமணியை, ஸ்டாலின் சந்தித்துள்ளார்.. எதற்கும் திமுக தயாராக இருப்பதை, கூட்டணி கட்சிகளுக்கு சொல்வதற்காகவே, இந்த சந்திப்பு நடந்துள்ளதாக சொல்கிறார்கள்..

தலைமை செயலகம் வந்திருந்த பாமக தலைவர் அன்புமணி, முதல்வர் ஸ்டாலினை அவரது அறையில் சந்தித்தார்.. கிட்டத்தட்ட 25 நிமிடங்களுக்கு மேல் இந்த சந்திப்பு நீடித்துள்ளது. அப்போது, அன்புமணிக்கு முதல்வர் ஸ்டாலின், பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லியிருக்கிறார். வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கை தொடர்பாக இரு தரப்பிலும் பேசப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி: அதுமட்டுமல்ல, அரசியல் ரீதியாகவும் பேசப்பட்டதாம்... திமுக கூட்டணிக்குள் பாமக வருவது பற்றியும் பேசியிருக்கிறார் அன்புமணி. இதற்கும் பிடிகொடுக்காத ஸ்டாலின், "திமுக கூட்டணியில் நிறைய கட்சிகள் இருக்கின்றன.. அவர்களுக்கான சீட்டுகளை பகிர்வதில் நிறைய சிக்கல் இருக்கிறது... அதனால், தேர்தல் நெருக்கத்தில் கவனத்தில் கொள்கிறேன்" என்று மட்டும் பட்டும்படாமல் சொல்லிவிட்டாராம் ஸ்டாலின்.

சந்திப்பின்போது நடந்ததை டாக்டர் ராமதாஸிடம், மூத்த தலைவர் ஜி.கே.மணி விவரித்திருக்கிறார். அதைக்கேட்டு எரிச்சலடைந்த டாக்டர் ஐயா, இப்படித்தான் நடக்கும்ன்னு எனக்கு தெரியும்.. அது தெரிந்துதான், சந்திக்க போக வேண்டாம் என்று சொன்னேன். அன்புமணிதான் கேட்கலை" என்று சொல்லியதுடன், திமுகவையும் ஸ்டாலினையும் பற்றி சில கமெண்ட்களை செய்தாராம் டாக்டர் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+