"பலிகடா".. அதுல எடப்பாடி பேரையே காணோமே.. ஓபிஎஸ் எங்கே.. "வேஸ்ட் கமிஷன்".. சீறிய ஆர்.கே. ராதாகிருஷ்ணன்
ஆறுமுகசாமி அறிக்கை குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்கே ராதாகிருஷ்ணன் பேட்டி தந்துள்ளார்
சென்னை: ஜெயலலிதா மரணத்தில் எந்தவிதமான மர்மமும் கிடையாது, ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை நாம் கடந்து போக வேண்டியதுதான் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை நேற்று முன்தினம் சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
ஜெயலலிதா சுய நினைவுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை என்றும், மயக்கமடைந்த பிறகு, அனைத்து நிகழ்வுகளும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்றும் அறிக்கை பகீரை கிளப்பிவிட்டுள்ளது.

சுடசுட விவாதம்
ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையே அளிக்கவில்லை, ஜெயலலிதா இறந்த நேரத்திலும் முரண்பாடு இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ள நிலையில், இதையடுத்து, சசிகலா, சசிகலாவின் உறவினரான டாக்டர் கே.எஸ். சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையானது பல்வேறு விவாதங்களை கிளப்பி விட்டு வருகிறது..

வேஸ்ட் ரிப்போர்ட்
அந்தவகையில், நம் "ஒன் இந்தியா" தமிழுக்கு, மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவர் கூறியுள்ள கருத்துக்கள் இதுதான்: "டாக்டர் ரிச்சார்ட் பீலே என்பவர் தாஜ் ஓட்டலில் அந்த சமயத்தில் தங்கியிருந்தார்.. ரூ.2987.81 பைசாவுக்கு ஒரு டிரிங்க்ஸ் குடிச்சிருக்கார்.. மறுநாள் ரூ.1554.87 பைசாவுக்கு ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.. இந்த விஷயத்தைதான், நான் முக்கியமானதாக பார்க்கிறேன்.. இதில் ஆறுமுசாமி கமிஷன் தீவிரமாக இறங்கி விசாரித்திருந்தால், அவர் என்ன டிரிங்க்ஸ் அன்று சாப்பிட்டிருப்பார் என்று கண்டுபிடித்திருக்கலாம்.. மற்றபடி இந்த ஆறுமுகசாமி ஆணைய ரிப்போர்ட்டானது, குப்பையில் போட வேண்டிய ரிப்போர்ட்தான்..

சமரசம்
காரணம், இதன் முகாந்திரம் என்ன? நோக்கம் என்பது ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை கண்டுபிடிப்பது கிடையாது.. ஓபிஎஸ் + எடப்பாடி இருவருக்கும் நடுவில் நடந்த சமரசத்தின் பாகமாக வந்த கமிஷன் இது.. அம்மா மரணத்தில், எடப்பாடிக்கு டவுட்டே கிடையாது.. அதிமுகவில் பெரும்பாலான தொண்டர்களுக்கும் இதுசம்பந்தமான எந்த டவுட்டும் இல்லை.. ஒருகுறிப்பிட்ட பேருக்கு மட்டும்தான் டவுட் இருந்தது.. அப்படி அவர்களுக்கெல்லாம் மரணத்தில் சந்தேகம் இருந்திருக்கும் என்று சொன்னால், எய்ம்ஸ், அமெரிக்கா, சிங்கப்பூர், ஐரோப்பியாவிலிருந்தோ டாக்டர்களை வரவழைத்திருக்க மாட்டார்கள்..

எம்ஜிஆர்
அதனால், இந்த விஷயத்தில் கமிஷனே தேவையில்லை.. இந்த கமிஷன்படி 2 ரிப்போர்ட்கள் எடுக்கப்படுகின்றன.. ஆஸ்பத்திரிக்கு வருவதற்கு முன்பு இருக்கக்கூடிய உடல்நிலை, ஆஸ்பத்திரிக்கு வந்தபிறகு அவரது உடல்நிலை பற்றி குறிப்பிட்டு சொல்கிறார்கள்.. ஆனால், இந்த அறிக்கையில் தேவையில்லாத விஷயங்களைதான் நிறைய சொல்லி உள்ளார்கள்.. ஜெ.ராதாகிருஷ்ணன் கால்நடை டாக்டரா? இல்லையா? என்று அழுத்தமாக அதையே பேச காரணம் என்ன? உங்களுக்கென்ன அதில் அவ்வளவு பெரிய ஆனந்தம்?

பேஷண்ட்
ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்ட நேரத்திற்கும் சாட்சியங்கள் சொன்ன நேரத்துக்கும் வித்தியாசம் உள்ளதாக எப்படி சொல்கிறார்கள்? ஒரு முதல்வர் இறந்ததை, 30 மணி நேரம் மறைத்து வைத்திருக்க முடியுமா? ஒருநபர் இறந்துவிட்டார் அல்லது இறக்கவில்லை என்பதை யார் முடிவு செய்வது? நீதிபதியா முடிவு செய்வார்? டாக்டர்தானே முடிவு செய்ய வேண்டும்... ஒரு முதல்வரோ, அமைச்சரோ, ஒரு முக்கிய பிரமுகரோ அட்மிட் ஆகிறார் என்றால், அவர் இறந்துவிடக்கூடாது என்ற குறைந்தபட்ச அறிவாவது ஆறுமுகசாமி கமிஷனுக்கு இருக்கிறதா? ஆஞ்சியோ செய்ய வேண்டுமா? வேண்டாமா? அதை பேஷண்ட் தாங்குவார்களா? இல்லையா? என்பதை யார் முடிவு செய்ய வேண்டும்?

ஜானகியம்மா
சிகிச்சைக்கு வெளிநாடு கொண்டு செல்வது முதல் எதுவானாலும், சட்டப்பூர்வமாக சசிகலாவால் எதிலுமே முடிவெடுக்க முடியாது.. அது தொடர்பாக கையெழுத்தும் போட முடியாது.. எம்ஜிஆரை வெளிநாட்டுக்கு அழைத்து சென்றபோது, ஹண்டேவிடம் சிறப்பு அதிகாரம் தரப்பட்டு, எம்ஜிஆர் சம்பந்தப்பட்ட விஷயங்களை கவனித்து கொள்வது முதல் கையெழுத்து போடுவது வரை அத்தனையும் அன்று கேபினெட்டில் பேசி முடிவு செய்தார்கள்.. ஜானகியம்மா கூடவே இருந்தாலும்கூட, முடிவெடுத்தது என்னவோ கேபினட்தான். ஆனால், கேபினெட் எடுத்த முடிவுக்கு ஜானகியம்மா ஒப்புக் கொண்டார்.. அந்த மாதிரி இந்த விஷயத்தில் ஏதாவது நடந்ததா?

வேடிக்கை
ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது, எனக்கு தெரிந்து 6 முறை கேபினெட் வந்துபோயுள்ளார்கள்.. அப்போதுகூட சிகிச்சை உட்பட இந்த விவகாரத்தில் யார் முடிவெடுப்பது என்பது தீர்மானமாகவில்லை.. சிகிச்சை தொடர்பாக சசிகலா முடிவெடுக்கட்டும் என்று கேபினெட்டே சொல்லியிருக்கலாமே? ஏன் சொல்லவில்லை? எனவே, இங்கு வந்து போன அனைத்து அமைச்சர்களுக்கும் இதில் பொறுப்புள்ளது.. காரணம் 6 முறை கூடியிருக்கிறார்கள்.. அப்பறம் எப்படி விஜயபாஸ்கர் மட்டும் பொறுப்பில் வருகிறார்? ஆறுமுகசாமி ஆணையம்தானே இதையெல்லாம் கேட்டிருக்க வேண்டும்.. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் ராம்மோகன்ராவ் என்ற அதிகாரியை இதில் சேர்த்துவிட்டுள்ளார்..

கூச்சம்
மாநில முதல்வர் தொடர்பாக, அதிகாரிதான் முடிவெடுப்பாரா? மேல்சிகிச்சைக்கு கொண்டு செல்வதற்கு சட்ட விதிகள் நிறைய உள்ளன.. ஒரு சட்டரீதியான விஷயங்களைகூட அளிக்காத அப்போதைய முதல்வர் ஓபிஎஸ்ஸை பார்த்து, ஏன் ஆறுமுகசாமி கேள்வி எழுப்பவில்லை? அப்படி என்ன உள்நோக்கம்? ஏனென்றால் ஓபிஎஸ்ஸால்தானே இவருக்கு இந்த வேலையே கிடைத்திருக்கிறது.. கமிஷன் நியமனத்துக்காக நாலரை கோடி ரூபாய் செலவுசெய்தவரை பார்த்து கேள்வி எழுப்பமுடியாத கூச்சம் இருந்திருக்கும்.

அமித் ஷா + டெண்ட்
யாரை ஓங்கி அடிக்க முடியாதோ அவர்களை பலிஆடு ஆக்கிவிடுவதுதான் கமிஷனின் வேலை.. ராதாகிருஷ்ணன், ராம்மோகன்ராவ், அப்போலா 3 டாக்டர்கள், அதிகார பலம் இல்லாத சசிகலா, விஜயபாஸ்கர் இப்படி கோர்த்துவிட்டுள்ளார்.. இன்னைக்கு அதிகாரத்தில் உள்ள யாரையாவது பார்த்து கமிஷனில் சேர்த்துள்ளார்களா? அதிகாரத்தில் உள்ளவர்களை ஏதாவது கேள்வி கேட்டிருக்கிறார்களா? ஏன், அன்னைக்கு டெல்லியில் இருந்து அமித்ஷா வந்து போகலையா? மோடி வந்து போனாரே? அமைச்சர்கள் வந்து போனார்களே? வெங்கய்யா நாயுடு இங்கேயேதான் டென்ட் போட்டு உட்கார்ந்துட்டு இருந்தாரு.. யாரையுமே இவங்க எதையுமே விசாரிக்கவில்லை.

ராதாகிருஷ்ணன்
யார் மீதெல்லாம் காழ்ப்புணர்ச்சி உள்ளதோ, அவர்கள் மீதெல்லாம் ஆறுமுகசாமி புழுதி வாரி இறைத்துள்ளார்.. அப்பல்லோ மருத்துவமனை மீது இவருக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி உண்டு.. அப்போலா மருத்துவமனை டாக்டர்களை அடிக்கடி விசாரணை என்று கூப்பிட்டுக் கொண்டே இருப்பாராம்.. ராதாகிருஷ்ணன் மீதும் தனிப்பட்ட பகை இருக்கிறது. அதையெல்லாம் இங்கே பேச முடியாது.. ஏன் இந்த விவகாரத்தில் எடப்பாடி பெயர் வரமாட்டேங்குது? ஏன் ஓபிஎஸ் பெயர் இதில் வரவில்லை? எனவே, என்னை பொறுத்தவரை ஜெ.மரணத்தில் மர்மம் கிடையாது.. இது வேஸ்ட் கமிஷன்.. இதை நாம் கடந்து போக வேண்டும்..

பலி ஆடு
திமுக இதில் நிச்சயம் அரசியல் நோக்கம் இருக்கிறதா என்றுதான் பார்ப்பார்கள்.. அதை தவறு என்று சொல்லவில்லை.. மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடிப்போம் என்று ஸ்டாலின் வாக்குறுதியில் சொன்னார்.. சட்டசபையில் ஆறுமுகசாமியை கிட்டத்தட்ட சப்போர்ட் செய்வதுபோலதான் பேசிக் கொண்டிருந்தார்கள்.. இப்படி அறிக்கையை தாக்கல் செய்து, இன்னொரு வாக்குறுதியையும் நிறைவேற்றிவிட்டோம் என்று அரசியல் செய்துவிட்டார்கள்..வேறெதும் இதில் இல்லை" என்றார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications