15 சீட்டுகள் கிளீன் ஸ்வீப்! அப்படியே வழுக்கிகிட்டு போக போகுது.. எடப்பாடியை அலற விட்ட கணிப்பு! திடுக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமியை கட்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது. ஆனால் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று எண்ணம் இல்லை. அவர்களுக்கு தொண்டர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை, என்று ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதிமுக - பாஜக மோதல் இப்போதைக்கு முடிவாதாக தெரியவில்லை. ஆனாலும் இவர்கள் மோதலில் ஒரு சிறிய வெளிச்சம்.. சின்ன மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி முறிவு என்னுடைய முடிவு அல்ல. அது தொண்டர்களின் முடிவு .

Are these 15 seats going against Edappadi Palanisamy AIADMK in the Lok Sabha election 2024?

தொண்டர்கள் எடுத்த முடிவு இது. அவர்கள் சொன்னதை கேட்டு.. அவர்களின் பேச்சுக்கு மதிப்பளித்து கூட்டணியை முறித்து உள்ளோம். இஸ்லாமியர்களே நீங்கள் எதிர்பார்த்தது போல கூட்டணியை முறித்து இருக்கிறோம். இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை. 2024 லோக்சபா தேர்தலில் பாஜக உடன் கூட்டணி இல்லை. 2026 சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை. இனி நாம் கூட்டணி வைக்கவே மாட்டோம். அதிமுக தனியாக கூட்டணி அமைக்கும்., என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் நிலைப்பாடு தொடர்பாக, ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார் . அதில், எடப்பாடி பழனிசாமியை கட்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது. ஆனால் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று எண்ணம் இல்லை. அவர்களுக்கு தொண்டர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. 40 தொகுதிகளில் 15 தொகுதிகள் தென் மண்டலத்தில் இருக்கிறது. தென் மண்டலத்தில் மொத்தமாக இந்த 15 தொகுதிகளை எடப்பாடி பழனிசாமி இழக்க போகிறார். அவர் மொத்தமாக சிதற போகிறார். ஓ பன்னீர்செல்வம் மட்டுமே தொண்டர்களை காத்து வருகிறார்.

தொண்டர்களை காப்பதே ஓ பன்னீர்செல்வம்தான். இத்தனை காலம் எடப்பாடி பழனிசாமியை காத்தது டெல்லிதான். தீர்ப்பு வாங்கி கொடுத்தது கூட டெல்லிதான். ஆனால் அவர்களை எடப்பாடி கைவிட்டுவிட்டுள்ளார். அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று கேட்டுள்ளனர். அடமண்டாக கேட்டுள்ளனர். அதை டெல்லி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கூட்டணியை முறித்துவிட்டார். இத்தனை காலம் நெருக்கமாக இருந்த கூட்டணியை முறித்து உள்ளனர்.

Are these 15 seats going against Edappadi Palanisamy AIADMK in the Lok Sabha election 2024?

அவரை பாதுக்காததே டெல்லிதான். அவர்களை போய் எடப்பாடி பழனிசாமி தூக்கி வீசி உள்ளார். இது என்ன கொடுமை. ரொம்ப மோசமான நடவடிக்கை இது. அவர் வந்த பின் அதிமுக எந்த தேர்தலில் வென்றுள்ளது. அதிமுகவால் ஒரு தேர்தலில் கூட வெற்றிபெற முடியவில்லை. இவர் தோல்வி அடைந்ததை எல்லாம் பெருசாக பேசுவது இல்லையே யாரும். அதை யாரும் பெரிதாக்கி பேசமாட்டேங்கிறார்கள். லோக்சபா தேர்தலில் கூட்டணி இல்லை என்றால்.. அவர் எங்கே செல்வார். இந்தியா கூட்டணிக்கு செல்கிறாரோ?

ராகுல் காந்தி சோனியா காந்தியை பெருமையாக பேசுகிறாரே எடப்பாடி? அவரிடம் என்ன எதிர்பார்க்க முடியும். அவர் யார் பெயரை சொல்லி வாக்கு கேட்பார். லோக்சபா தேர்தலில் அவர்களின் பிரதமர் முகம் யார்? யார் பெயரை சொல்லி எடப்பாடி வெல்ல முடியும். அவருக்கு என்ன ஆதரவு இருக்கிறது. அவருக்கு எங்கே தொண்டர்கள் ஆதரவு இருகிறது. எடப்பாடி கூட மணியான சிலர் சொல்வதைதான் கேட்பார். சிவி சண்முகம் எங்கே போனார்? அவர் சமீபத்தில் காணவில்லையே? கவனித்தீர்களா? அவர் எங்கே இருக்கிறார் என்று சொல்ல முடியுமா?

கட்சிக்கு உள்ளே பல பிரச்சனைகள் இருக்கு. அது எல்லாம் வெளியே வரும். நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைப்போமா என்று சொல்வோம். கூட்டணி குறித்து விரைவில் முடிவு எடுப்போம், என்று ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+