3 குட்நியூஸ்.. தங்கம் தென்னரசின் "கோல்டன் அறிவிப்பு".. இபி பில்.. இனிமே மகிழ்ச்சிதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதவி ஏற்றதில் இருந்து முக்கியமான 3 நல்ல செய்திகளை சொல்லி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் முதலில் சோதனை முயற்சியாக தி நகரில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி சுமார் 1.10 லட்சம் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டது. இந்த சோதனை முயற்சி வெற்றிபெற்றுள்ளது.

 Are these 3 major good news from Tamil Nadu EB minister Thangam Thennarasu for people?

இதை அடுத்து சென்னையின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர். அதன்பின் தமிழ்நாடு முழுக்கவும் நடைமுறை படுத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக ஸ்மார்ட் மீட்டர் வாங்கும் டெண்டர் பணிகள் நடந்து வருகின்றன. 3 கட்டமாக தமிழ்நாடு முழுக்க ஸ்மார்ட் மீட்டர்களை பொறுத்த முடிவு செய்துள்ளனர்.

ஸ்மார்ட் மீட்டர்கள் பொதுவாக துல்லியமாக மின்சாரத்தை கணக்கிட உதவும். தற்போது மின்சாரத்தை கணக்கிட அதற்காக மின்வாரிய ஊழியர்கள் வீட்டுக்கு நேரில் வந்து அளவீடு செய்வார்கள் . அவர்கள் கொடுக்கும் குறிப்பை வைத்தே மின்சாரம் கணக்கிடப்படும்.

ஆனால் ஸ்மார்ட் மீட்டர் அப்படி அல்ல. ஸ்மார்ட் மீட்டர் வந்துவிட்டால் நாம் பயன்படுத்தும் மின்சாரம் தொடர்பான ரீடிங் நமக்கு காட்டுவது மட்டுமின்றி மின்சார துறை அலுவலகத்திற்கும் காட்டும். ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு இது துல்லியமாக அப்டேட் செய்யப்படும். இதனால் மின்சார ஊழியர்கள் வீட்டிற்கு வராமலே அளவு எடுக்க முடியும்.

மேலும் யூனிட் விவரங்கள் மிக மிக துல்லியமாக இருக்கும். இதனால் மின்சாரத்தை துல்லியமாக கணக்கிட்டு, மக்களுக்கு துல்லியமாக கட்டணம் நிர்ணயம் செய்ய 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வர உள்ளது. தி நகரில் நிறைவேற்றப்பட்ட திட்டம் தமிழ்நாடு முழுக்க அடுத்து கொண்டு வரப்பட உள்ளது.

நல்ல செய்தி 2 - ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது தொடர்பாக அபராதம் எதுவும் அறிவிக்கப்படவில்லை . அதனால் பொருத்த முடியாமல் போகும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது.

நல்ல செய்தி 1 - ஸ்மார்ட் மீட்டர் விரைவில் பொருத்தப்படும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பின் மாதம் மாதம் மின் கட்டணம் வசூலிக்கப்படும். 2 மாத நடைமுறை கைவிடப்படும்.

நல்ல செய்தி 2 - ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது தொடர்பாக அபராதம் எதுவும் அறிவிக்கப்படவில்லை . அதனால் பொறுத்த முடியாமல் போகும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது.

நல்ல செய்தி 3 - இரவு நேரங்களில் 20 சதவிகிதம் கூடுதல் மின்சார கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசு திட்டத்திற்கு தமிழ்நாட்டில் அனுமதி கிடையாது என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதவி ஏற்றதில் இருந்து அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை அவர் இப்படி வெளியிட்டு வருகிறார்.

மின்சார கட்டணம்: இந்த நிலையில்தான் மின்சார கட்டணம் ரூபாய் 1000 அல்லது 2000 மேல் வந்தால் ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணத்தை கட்டும் முறையை கொண்டு வர தமிழ்நாடு மின்சார வாரியம் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதில் 1000 ரூபாயா அல்லது 2000 ரூபாயா என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை., தற்போது 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் இருந்தால் அதை மின்சார நிலையங்களில் செலுத்த முடியாது. ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும்.

இனிமேல் மின்சார கட்டணம் ரூபாய் 2000க்கு மேல் வந்தால் அதை ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டும் முறையை கொண்டு வர தமிழ்நாடு மின்சார வாரியம் பரிசீலனை செய்து வருகின்றதாம்.

மின்சார நிலையங்களில் கூடுதல் பணம் கையாள்வதை தவிர்க்கவும், மக்கள் வரிசையில் நிற்பதை தவிர்க்கவும் இந்த முறையை கொண்டு வர மின்சார வாரியம் திட்டமிட்டு உள்ளதாம்.ஆனால் இன்னும் இந்த புதிய விதி நடைமுறைக்கு வரவில்லை. முறையான ஆலோசனைக்கு பின்பே இந்த விதி நடைமுறைக்கு வருவது பற்றி முடிவு எடுக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+