சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அக்கு அக்கா உடையுதே "அச்சாணி".. எடப்பாடிக்கு விழுந்த "அடி".. இவ்ளோ இருக்கா.. திரும்புதா அதே ஹிஸ்டரி

இரட்டை இலையை முடக்கும் நிலைமைக்கு கொண்டு வந்துட்டாங்களே என ரத்தத்தின் ரத்தங்கள் வருந்துகிறார்களாம்

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதால், எடப்பாடிக்கு மட்டுமல்லாமல், ஓபிஎஸ்ஸுக்கும் சேர்த்து இலை கிடைக்குமா? முடக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வரப்போகும் இடைத்தேர்தலுக்கு எடப்பாடி டீமும், ஓபிஎஸ் டீமும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.. ஓபிஎஸ் + எடப்பாடி 2 பேருமே கட்சியை சொந்தம் கொண்டாடி வருகிறார்கள்.

ஒருவர் தான்தான் "இடைக்கால பொதுச்செயலாளர்" என்கிறார்.. இன்னொருவர், தான்தான் "ஒருங்கிணைப்பாளர்" என்கிறார்.. இதன்காரணமாக 2 பேருமே, இரட்டை இலை சின்னத்தை கேட்டு வருகிறார்கள்...

எடப்பாடியை கூப்பிட்டீங்களா? சட்டென முகத்தை பார்த்து கேட்ட ஓபிஎஸ்! ஜெ.தீபா தந்த ரியாக்சன்! என்னாச்சு எடப்பாடியை கூப்பிட்டீங்களா? சட்டென முகத்தை பார்த்து கேட்ட ஓபிஎஸ்! ஜெ.தீபா தந்த ரியாக்சன்! என்னாச்சு

 அங்கீகாரம்

அங்கீகாரம்

இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்துக்காக இடைக்கால பொதுச்செயலாளரான தன்னுடைய கையெழுத்தை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டிருந்தார்.. இதுதொடர்பாக ஓபிஎஸ்ஸூம் பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.. அதன்படி, எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது என்று ஓபிஎஸ் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது..

 பயங்கர ஷாக்

பயங்கர ஷாக்

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் நேற்று மாலை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. அதில், "அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க முடியாது. அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார்" என்று சொல்லி கைவிரித்துவிட்டது.. இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்க முடியாது என்று தேர்தல் ஆணையம் சொல்லிவிட்டதால், கடுமையான அதிர்ச்சியில் எடப்பாடி உள்ளதாக தெரிகிறது..

 இடியாப்ப சிக்கல்கள்

இடியாப்ப சிக்கல்கள்

இதில் 3 விதமான சிக்கல்கள் அலசப்பட்டு வருகின்றன.. அதாவது, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரே ஏற்கப்படுவார்கள் என்பதைதான் தேர்தல் ஆணையம் மறைமுகமாக கூறியுள்ளதாக கருதப்படுகிறது.. இதுதான் எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.. ஏற்கனவே, இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்து, தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி கடிதமும் அனுப்பியிருக்கிறார்.. அப்படி இருக்கும்போது, அவரால் "பி" பார்மில் கையெழுத்திட முடியுமா? என்பதே கேள்வியாக எழுந்துள்ளது.. அதனால் இரட்டை சிலை சின்னம் எடப்பாடி டீமுக்கு கிடைக்க வாய்ப்பு குறைவு என்றும் சொல்கிறார்கள்.

 B பார்ம்

B பார்ம்

அப்படியானால் ஓபிஎஸ்ஸுக்கு இலை சின்னம் வழங்கப்படுமா என்பதும் உறுதியாக தெரியவில்லை.. காரணம், ஓபிஎஸ் மட்டும் கையெழுத்திட்டால் இரட்டை இலை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் உறுதி தரவில்லை, அதை தெளிவுபடுத்தவுமில்லை.. அந்தவகையில், ஓபிஎஸ்ஸுக்கும் இப்போது சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஓபிஎஸ் அணி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், எடப்பாடி டீம் பிப்ரவரி 7-ல் தாக்கல் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.. அநேகமாக வருகிற 8ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடக்கும்போதுதான், "பி" பார்ம் வழங்கலாம் என்று திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரே ஏற்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

நிராகரிப்புகள்

நிராகரிப்புகள்

இதில் இன்னொரு விஷயமும் சொல்லப்படுகிறது.. பொதுவாக, தேர்தல் அதிகாரி என்பவர் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கக்கூடியவர் இல்லை.. ஒரு வேட்பு மனுவை ஏற்பது, நிராகரிப்பது, சின்னத்தை ஒதுக்குவது, இப்படிப்பட்ட உத்தரவுகள் யாவுமே, தேர்தல் அதிகாரியின் அதிகாரத்துக்குட்பட்டே பார்க்கப்படுகின்றன.. அதேசமயம், எந்த ஒரு கட்சிக்கும் விதிமுறைகள் உள்ள நிலையில், அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டே, கையொப்பமிட்டு சம்பந்தப்பட்ட ஆவணங்களை அனுப்பி வைக்கும்.. ஆவணங்களையே, தேர்தல் ஆணையமும் பத்திரப்படுத்தி வைக்கும்.. ஒருவேளை, அதில் ஏதாவது மாற்றங்கள் செய்யப்பட்டால், அதை திருத்தி மட்டுமே கொள்வார்கள்.

 புது சின்னம் + சுயேச்சை

புது சின்னம் + சுயேச்சை

அந்தவகையில், ஜூலையில் நடத்தப்பட பொதுக்குழுவில் மாற்றப்பட்ட விதிமுறைகளை, தேர்தல் ஆணையம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், தேர்தல் ஆணையத்திடம் என்ன விதி வரையறைக்கப்பட்டுள்ளதோ, முடிவுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.... இப்போதைக்கு கட்சி 2 ஆக உள்ளதால், 2 தரப்புமே இலையை கோருவதால், யாருக்குமே சின்னம் தரப்பட வாய்ப்பில்லை என்கிறார்கள்.. இருவருமே வேட்பாளர்களை அறிவித்திருப்பதால், சுயேச்சையாகவும் + புது சின்னத்துடனும் அவர்கள் களம் காணவே நிறைய வாய்ப்புகள் உள்ளதாகவும் சொல்கிறார்கள். எதுவாக இருந்தாலும் இன்றைய தினம் முடிவு தெரிந்துவிடும் என்று நம்பப்படுகிறது..

 ரத்தத்தின் ரத்தம்

ரத்தத்தின் ரத்தம்

ஆனால், இரு தரப்பும் சேர்ந்து கடைசியில் இரட்டை இலை சின்னத்தை முடக்கும் அளவுக்கு சென்றுவிட்டார்களே என்று ரத்தத்தின் ரத்தங்கள் வருத்தத்திலும், அதிருப்தியிலும் உள்ளார்களாம்.. இவர்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா? ஆளுக்கு ஒருபக்கம் பிரிந்து சென்றுள்ளது, திமுகவுக்குதானே லாபம்? என்றும் நொந்து போய் சொல்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, 1988ன் வரலாறு இப்போது மறுபடியும் திரும்புவதாக பார்க்கப்பட்டு வருகிறது.. இப்படித்தான், 1987ல் எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு கட்சியில் ஏற்பட்ட பிளவால், 1988 தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அதேபோல, 2017-ல் ஓபிஎஸ்-ன் கலகத்தாலும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது

 சேவல் + புறா

சேவல் + புறா

இதனால், ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும், ஜானகி அணி இரட்டை புறா சின்னத்திலும் தேர்தலை சந்தித்தார்கள்.. அதுபோல கடந்த கால வரலாறு திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.. ஆனால், எப்படி பார்த்தாலும், எடப்பாடி+ ஓபிஎஸ் இருவருமே தனித்தனி சின்னங்களில் போட்டியிட்டால், அது அதிமுகவிற்கு உள்ள வாக்கு வங்கியை பெருமளவில் சிதற வைப்பது உறுதி என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!!

English summary
Are these 3 reasons weak for AIADMK and two leaves unsure for aiadmk, say sources
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X