சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ப்பா ட்விஸ்ட்.. ஸ்டாலின் சொன்னதும்.. பட்டென களத்தில் இறங்கிய வானதி! என்னங்க பண்றது? வெலவெலத்த அதிமுக

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் மாநிலம் முழுக்க உள்ள அனைத்து கட்சி எம்எல்ஏக்களுக்கும் முக்கியமான கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தை ஏற்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வேகமாக செயல்பட தொடங்கி உள்ளார். வானதி சீனிவாசன் இதற்காக எழுதிய கடிதம் ஒன்றுதான் தற்போது அதிமுக வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கை என்ன? வானதி சீனிவாசன் எழுதிய கடிதம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்!

உங்கள் தொகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக தீர்க்க முடியாத திட்டங்கள், முடங்கிக் கிடக்கும் திட்டங்கள் பற்றிய தகவல்களைத் தொகுத்து அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்களை அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக எழுதிய கடிதத்தில், சட்டமன்ற உறுப்பினராகிய நாம் ஒவ்வொருவரும் நமது தொகுதியின் வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் நமது பங்களிப்பினை ஆற்றுவதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம்.

அந்த வகையில், மக்களின் தேவைகளை நன்கு உணர்ந்து அவற்றை நிறைவேற்றும் பெரும் பொறுப்பு அவர்களது பிரதிநிதிகளாக விளங்கும் சட்டமன்ற உறுப்பினர்களாகிய நமக்கு உள்ளது.

அதிமுக 3 முக்கிய புள்ளிகள் திமுகவிற்கு ஜம்ப்? எம்பி ட்வீட்.. பரபரக்கும் அரசியல் அதிமுக 3 முக்கிய புள்ளிகள் திமுகவிற்கு ஜம்ப்? எம்பி ட்வீட்.. பரபரக்கும் அரசியல்

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

குறிப்பாக, சில தேவைகள் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தும், நடைமுறையில் உள்ள திட்டங்களின் மூலம் அவற்றைச் செயல்படுத்திட இயலாத நிலை இருக்கலாம், மக்களின் இன்றியமையாத தேவையின் அடிப்படையிலான அத்தகைய திட்டங்களுக்கான பணிகளை நிறைவேற்றிடத் திட்ட அறிக்கை தயாரித்து அரசு அளவில் ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு பெற வேண்டிய அவசியமும் இருக்கலாம். இதுபோன்ற அத்தியாவசியத் திட்டங்களை அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்தக்கூடிய வாய்ப்பை உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் உருவாக்கும். இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு தொகுதியிலும் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத அவசியப் பணிகள் குறித்து அந்தந்தத் தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளைப் பெற்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து, இவற்றைப் பரிசீலித்து ஒப்புதல் வழங்கப்பட உள்ளது, என்று முதல்வர் ஸ்டாலின் அறிக்கையில் கூறினார்.

கேட்கவில்லை

கேட்கவில்லை

இதற்காக முதல்வர் ஸ்டாலின் 10 நாட்கள் அவகாசம் கொடுத்தார். இதனையடுத்து, தகவல்களை சேகரிக்கும் பணிகளில் எம்.எல்.ஏ.க்கள் ஈடுப்பட்டனர். ஆனால், அந்த தகவல்களை அரசுக்கு எம்.எல்.ஏ.க்கள் அனுப்பி வைத்ததாகத் தெரியவில்லை. இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், கோவை கலெக்டர் சமீரனை நேற்று சந்தித்து, தனது தொகுதியில் தீர்க்கப்படாத பிரச்சனைகள் என ஒரு நீண்ட பட்டியலை தந்திருக்கிறார். அதில் சொல்லப்பட்ட பல விசயங்கள் முந்தைய அதிமுக அரசால் நிறைவேற்றப்படாதவை என பாஜக தரப்பில் சொல்கின்றனர்.

அதிமுக மோதல்?

அதிமுக மோதல்?

கோவையை பொறுத்தவரை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கட்டுப்பாட்டில்தான் அதிமுக இருக்கிறது. மாவட்டத்தில் 10 தொகுதிகளில் 9 தொகுதிகள் அதிமுக வசம் உள்ளது. அந்தளவுக்கு கோவை மக்களிடம் செல்வாக்கு பெற்றவராக இருந்த வேலுமணி, அதிமுகவை வெற்றிபெற வைத்தார். இந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் யாரும் தங்களின் தொகுதியில் தீர்க்கமுடியாத பிரச்சனைகள் என அரசுக்கு எப்படி தெரிவிப்பது ? அப்படி தெரிவித்தால் அதிமுக ஆட்சியில் ஏன் நீங்கள் செய்யவில்லை என திமுக விமர்சிக்குமே என யோசித்து, யாருமே அந்த பணியில் ஈடுபடவில்லை.

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

தற்போது வானதி சீனிவாசன் பட்டியலை கொடுத்துள்ள நிலையில், எஸ்.பி. வேலுமணியிடம், '' நாம் என்ன செய்வது ? '' என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்களாம் கோவை அதிமுக எம்.எல்.ஏ.க்கள். எடப்பாடி பழனிசாமிக்கு இந்த கடிதம் சென்றது. ஆனால் அவரும் இதுவரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை. அவரும் இதுவரை கடிதம் எழுதவில்லை. தமிழகத்தில் உள்ள அதிமுகவின் 66 எம்.எல்.ஏ.க்களும் இதே மனநிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு பின் வேறு ஒரு காரணம் இருப்பதாக கூறப்படுகிறது..

எடப்பாடி

எடப்பாடி

அதாவது, தீர்க்க முடியாத பிரச்சனைகள் என்று புகார் பட்டியலை வாசித்தால், உங்கள் ஆட்சியில் ஏன் செய்யவில்லை ? என்று திமுக அட்டாக் பண்ணலாம் என்பதாலேயே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமைதியாக இருக்கிறார்களாம். இப்படி கையறு நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தடுமாற வேண்டும் என்பதை யோசித்துத்தான், 10 ஆண்டுகளில் தீர்க்க முடியாத உங்கள் தொகுதி பிரச்சனைகளை அரசுக்கு தெரிவிக்கலாம் என்று ஸ்டாலின் அறிவித்தாராம்.

English summary
Are these AIADMK MLAs worried after BJP MLA Vanathi Srinivasan replies to CM Stalin letter? முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் மாநிலம் முழுக்க உள்ள அனைத்து கட்சி எம்எல்ஏக்களுக்கும் முக்கியமான கடிதம் ஒன்றை அனுப்பினார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X