வெளிநாட்டு பயணங்களுக்கு.. புதிய வரியா? பிரதமர் மோடி மறுப்பு! வதந்தி என விளக்கம்!
டெல்லி: மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக, மக்கள் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும், வெளிநாட்டு பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இப்படி இருக்கையில், வெளிநாட்டு பயணங்களுக்கு மத்திய அரசு புதிய வரியை விதிப்பதாக தகவல்கள் பரவின. ஆனால், இது வெறும் வதந்திதான் என்று பிரதமர் விளக்கமளித்துள்ளார்.
வெளிநாட்டுப் பயணங்களுக்கு புதிய வரி விதிக்கும் திட்டம் இல்லை என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் முற்றிலும் பொய்யானவை. துளி அளவும் உண்மையில்லை, அத்தகைய கட்டுப்பாடுகளை விதிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும், மக்கள் மீதான சுமையைக் குறைப்பதில் அரசு கவனம் செலுத்துவதாக அவர் விளக்கமளித்தார்.
விளக்கமளித்த மோடி
கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் மேற்கு ஆசிய மோதலால் ஏற்பட்ட நிதி நெருக்கடியைச் சமாளிக்க, வெளிநாட்டுப் பயணங்களுக்கு தற்காலிக வரி விதிக்க மத்திய அரசு பரிசீலிப்பதாக CNBC-TV18 செய்தி வெளியிட்டது.
அதாவது இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்லும் பயணிகள் வாங்கும் டிக்கெட், விசா கட்டணம் உள்ளிட்டவற்றிற்கு கூடுதல் வரியை விதிக்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் பரவின. கச்சா எண்ணெய் விலை உயரும்போதும், போர் காலங்களிலும் இதுபோன்று வரிகளை உலக நாடுகள் விதிக்கத்தான் செய்கின்றன. இதன் அடிப்படையில்தான் CNBC-TV18 செய்தி ஊடகம் செய்தியை வெளியிட்டிருந்தது. ஆனால், இந்தியாவில் இப்படி வரியை விதிக்க எந்த ஐடியாவும் இல்லை என்று பிரதமர் மறுத்துள்ளார்.
மன்னிப்பு கேட்ட செய்தி ஊடகம்
பிரதமரின் மறுப்பிற்குப் பிறகு, CNBC-TV18 தனது செய்தியைத் திரும்பப் பெற்று, தவறுக்காக வருத்தம் தெரிவித்தது.
பிரதமர் மோடி தனது x பக்கத்தில் அளித்த விளக்கத்தில், "புதிய கட்டுப்பாடுகளுக்குப் பதிலாக, குடிமக்கள் மற்றும் வணிகர்களுக்கான சுமைகளைக் குறைப்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. மேலும், மக்களின் வணிகம் செய்வதை எளிமையாக்கியும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தியும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் நிலை
இந்தியாவை பொறுத்தவரை, நம்முடைய கச்சா எண்ணெய் தேவையில் நாம் 85%க்கும் அதிகமாக இறக்குமதியை தான் சார்ந்திருக்கிறோம். எனவே உலகளாவிய எரிசக்தி விலை உயர்வால் அழுத்தத்தைச் சந்தித்து வருகிறோம்.
இதற்கிடையில், UAE நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபருடன் பெட்ரோலிய இருப்புக்கள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஏற்கனவே அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் இந்தியாவில் கச்சா எண்ணெய் சேமித்து வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications