செதில் செதிலாக சிதறும் அஸ்திரம்!.. "அவங்க" வந்தாங்களா? சீறிய எடப்பாடி! சசிகலா பிடித்த 5 "முதலைகள்"?
சென்னை: திமுகவில் எடப்பாடி பழனிசாமி முழு ஆதரவோடு இருக்கிறார் என்று அவரின் ஆதரவாளர்கள் சொல்லி வந்தாலும் முக்கியமான இரண்டு நிர்வாகிகள் அதிமுகவில் அணி மாற வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் உட்கட்சி மோதல் இன்னும் வரவில்லை. கன்னித்தீவு கதையாக இந்த மோதல் நீண்டு கொண்டே இருக்கிறது. அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது செல்லும் என்று உயர் நீதிமன்றம் இரண்டு நீதிபதி அமர்வு அறிவித்துவிட்டது.
இதையடுத்து அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்து இருக்கிறார். இதையடுத்து 72 நாட்களுக்கு பின் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்தார்.
தொண்டர்கள் வெள்ளம் சூழ, பெரும் வரவேற்பிற்கு இடையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அலுவலகம் வந்தார்.

என்ன நடந்தது?
கிரீன் வேஸ் சாலையில் உள்ள அவரின் அரசு பங்களாவில் இருந்து ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக அலுவலக வரை அவர் வருவதற்கு கிட்டத்தட்ட 2 மணி நேரங்கள் ஆகிவிட்டது. அந்த அளவிற்கு அவருக்கு தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர். இந்த நிகழ்வில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். எம்எல்ஏக்கள் 63 பேர் இருந்தனர். இன்னொரு பக்கம் மாவட்ட செயலாளர்கள் 66 பேர் இருந்தனர். அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் பக்கம் 30-40 எம்எல்ஏக்கள் வர போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வந்தன.

என்ன நடந்தது
எம்எல்ஏக்களை தன் பக்கம் கொண்டு வர ஓ பன்னீர்செல்வம் முயன்றுள்ளார் என்று செய்திகள் வந்தன. ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பெரும்பான்மை எம்எல்ஏக்கள் எடப்பாடியை பார்க்க வந்தனர். சமீபத்தில் அதிமுகவில் உள்ள கோவையை சேர்ந்த 3 எம்எல்ஏக்களை அப்படியே தூக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் கோவை எம்எல்ஏக்கள் எல்லோரும் எடப்பாடியை நேரில் சந்தித்தனர். இதன் மூலம் தனக்கு முழு எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது என்பதை எடப்பாடி நிரூபித்து இருக்கிறார்.

ஆனால் என்ன?
ஆனால் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சிலர் இந்த நிகழ்விற்கு வரவில்லை. இந்த நிகழ்விற்கு சிவி சண்முகம் வரவில்லை. இந்த நிகழ்விற்கு வராதது ஏன் என்று அவர் தலைமையிடம் விளக்கவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னொரு பக்கம் மாஜி அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், ஓ.எஸ்.மணியன், வளர்மதி ஆகியோரும் வரவில்லை. இவர்கள் வராததுதான் அதிமுகவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்புகிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது. காமராஜ், விஜயபாஸ்கர் இருவருமே கடந்த சில நாட்களாக அமைதியாக இருக்கிறார்கள்.

5 முதலைகள்
இவர்கள் இருவரும் எடப்பாடி பற்றி பெரிதாக பேசுவது இல்லை. அதேபோல் ஓ.எஸ்.மணியன், வளர்மதி ஆகியோரும் அமைதி காத்து வருகிறார்கள். இதனால் இவர்கள் எங்கே சசிகலா அணிக்கு தாவுகிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது. சசிகலா பக்கம் இந்த 5 முக்கிய நிர்வாகிகளும் அணி மாறுகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் காமராஜ் ஒரு காலத்தில் சசிகலா குடும்பத்தோடு நெருக்கமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதிமுகவில் நடக்கும் மோதல்களால் இவர்கள் அணி மாறுகிறார்க்ளோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
மதுரை வடக்கு தொகுதி.. தளபதிக்கு குடைச்சல் கொடுக்கும் சரவணன்.. தவெக பிரிக்கப் போகும் வாக்குகள்! -
சென்னை RK நகரில் அதிமுக வேட்பாளருக்கு.. அஜித் ரசிகர்கள் கொடுத்த ஷாக்! இது நல்லா இருக்கே! -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
சோழவந்தான் தொகுதி.. மீண்டும் உதிக்கும் உதயசூரியன்? 30 ஆண்டுகளுக்கு பின் நடக்கப் போகும் சம்பவம்! -
"கவுண்டர்" தான் ஆளப்போகிறார்.. எடப்பாடியின் ஜாதியை சொல்லி வாக்கு கேட்ட திண்டுக்கல் சீனிவாசன்! சர்ச்சை -
"தமிழகத்தில் டெல்லி மாடல்.." அதிமுக பெரும்பான்மை பெற்றாலும் என்டிஏ ஆட்சிதான்.. ராம்தாஸ் அத்வாலே பரபர -
கையில் கறுப்பு-சிவப்பு கயிறு.. பாக்கெட்டில் ஸ்டாலின் படம்! தென்மாவட்டங்களில் அடித்து தூக்கும் ஓபிஎஸ்












Click it and Unblock the Notifications