டாஸ்மாக் சரவெடி.. யாருப்பா அது புதுஸ்ஸா? மதுக்கடைகளில் வெளிநபர்களா? இதோ பறந்து வருகிறது "ஆக்ஷன்"
சென்னை : டாஸ்மாக்குகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளை தடுப்பதில், அரசு மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது. அந்தவகையில், மிக முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்தளவில், டாஸ்மாக்குகள் மூலம் கிடைக்கும் வருவாயே பிரதானமாக கருதப்படுகிறது.. அரசுக்கு கிடைக்கும் மொத்த நிதி ஆதாரத்தில் 3ல் ஒரு பங்கு வருமானம், டாஸ்மாக், மதுக்கடைகள் மூலம் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.

வருமானம்: இப்போதைக்கு மொத்தம் 4829 மதுக்கடைகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் வருடத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானமும் கிடைத்து வருகிறது... அதாவது சராசரியாக தினந்தோறும் 150 கோடி ரூபாய்க்கும், விடுமுறை தினங்களில் அதிகமாகவும் மதுபானங்கள் விற்பனையாகி வருகின்றன.
எனினும், அரசின் நிதிச்சுமையை குறைப்பதற்காகவும், வருவாயை பெருக்குவதற்காகவும், டாஸ்மாக் மதுபானங்கள் விலைகளும் சமீபத்தில் உயர்த்தப்பட்டிருந்தன.
விற்பனைகள்: சில இடங்களில் விற்பனையாளர்களும் ஆங்காங்கே 10 ரூபாயை கூடுதலாக ஒவ்வொரு பாட்டிலுக்கும் வசூலித்து கொண்டேயிருக்கிறார்களாம். அதிலும், குவார்ட்டர் பாட்டிலை மட்டுமே அதிக அளவில் விற்பனை செய்வதாக குடிமகன்கள் கொந்தளிக்கிறார்கள்.. எனவே, டாஸ்மாக் ஊழியர்களுக்கும் அவ்வப்போது அறிவுரைகள் வழங்கபபட்டு வருகின்றன.
தமிழகத்தில், 4,820 மதுக்கடைகளில், 25,000 பேர் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும்நிலையில், வேறு சில சிக்கல்களும் எழுந்துள்ளன.. இதில் சில ஊழியர்கள், வேலைக்கு ஒழுங்காக வருவதில்லையாம்.. டியூட்டி நேரத்தில் இவர்கள், வேறு வேலைகளை கவனிப்பதாகவும், தங்கள் சார்பில், நண்பர்கள், உறவினர்களை கடையில் நியமித்து இருப்பதாகவும் புகார்கள் கிளம்பி உள்ளன.
முறைகேடுகள்: குறிப்பாக, இதுபோன்ற முறைகேடுகள், சென்னை உட்பட பல மாவட்டங்களில் அதிகமாக நடக்கிறதாம். அதுவும், மதுக்கடைகளில், மது பாட்டிலுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலையை விட கூடுதலாக, 30 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக பகீர் கிளம்பியிருக்கிறது. அந்த பணத்தில் இருந்து, தங்களின் பணியை செய்யும் வெளிநபர்களுக்கு தினமும், 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் சம்பளம் தருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கெல்லாம்தான் டாஸ்மாக், இன்னொரு கிடுக்கிப்பிடியை போட தயாராகிவருகிறது. அதாவது, கடைகளில் அதிரடி ஆய்வுகள் மேற்கொண்டு, நிர்வாகத்திற்கு தொடர்பு இல்லாத நபர்கள் யாராவது பணிபுரிந்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படியும், வெளி நபரை நியமித்த ஊழியர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதாம்.
கிடுக்கிப்பிடி: ஒருவேளை இவர்களின் தவறு உறுதியாகும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் முடிவாகி உள்ளதாம். மதுக்கடைகளில் நிர்வாகத்திற்கு தொடர்பில்லாத நபர்கள் பணிபுரிந்தால், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட மேலாளர்களை டாஸ்மாக் அறிவுறுத்தியிருப்பது, நிலவிவரும் முறைகேடுகளை மேலும் தடுக்கும் என்று நம்பப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications