தங்கப் போர் நடத்தும் டிரம்ப் இதை செய்தால் தங்க நகை விலை குறையுமாம்.. தங்கம் கிராமுக்கு ₹30000 ஏறுமா?
சென்னை: உலகளாவிய பொருளாதாரம், அதிபர் டிரம்பின் உறுதியற்ற பேச்சு, புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக, தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. முதலீட்டாளர்கள் தங்களின் பாதுகாப்பான புகலிடமாக தங்கத்தை பார்ப்பதாலும், அதில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுவதாலும்தான் தங்கத்தின் விலை உயர்வதாக நிபுணர் சையத் அபுதாகீர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ET Tamil என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள SEBI பதிவு செய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகர் சையத் அபுதாகீர் தந்துள்ள பேட்டியில், "டாலரின் நிச்சயமற்றத் தன்மையினால், உலக நாடுகள் பயப்படுகின்றன.. அதனால் தங்கள் நாட்டின் இருப்பை அதிகமாக வைத்து கொள்ளவே பார்க்கிறார்கள்..

தங்கத்தில் முதலீடு
ஈரான்-இஸ்ரேல் போர், பாலஸ்தீன்-ஹமாஸ்கானில் நடக்கும் போர், ரஷ்யாவில் லன்ஸ்கி விவகாரம், இதெல்லாம் நடப்பதற்கு காரணம், அங்கே அரிய பொருட்கள் உள்ளதுதான்.. அதற்காக அனைவரும் போட்டி போடுகிறார்கள்.. அதனால்தான் தங்கத்தை இருப்பு வைத்து கொள்ள அனைவருமே முயல்கிறார்கள். இருப்புகளை வைத்து கொள்ளவே அனைத்து நாடுகளும் முயல்கின்றன.. தங்கம் விலை உயர இதுவே பிரதான காரணம்..
மைனிங் நடக்கும் இடங்களில் எல்லாம் தங்கத்தை வாங்கவே பார்ப்பார்கள்.. தங்கத்தில் முதலீடு செய்வது என்பது லாபகரமானது.. ஒரு நாட்டில் திடீரென போர் உள்ளிட்ட நெருக்கடிகள் வரும்பட்சத்தில், இருப்பிலுள்ள தங்கத்தை வைத்து சமாளித்து கொள்ள முடியும்..
தினுசு தினுசான பேச்சு
ஒரு தனி மனிதனாக இருந்தால், நிலம் அல்லது வேறு ஏதாவது சொத்து விவகாரங்களில் எதிர்காலம் கருதி முதலீடு செய்வார்கள்,.. இதுவே நாடாக இருந்தால், டாலர் அல்லது தங்கத்தில் முதலீடு செய்வார்கள்..
தற்சமயம் தங்கத்தில் முதலீடு செய்ய காரணமே டிரம்ப்தான்.. அவரது நிலையற்ற தன்மை, தினமும் தினுசு தினுசாக பேசுவதால்தான், இப்படி தங்கம் விலை ஏறியிருக்கிறது. இப்போதைக்கு 5 முதல் 10 சதவீதம் வரை மட்டுமே நடந்துள்ளது.. இந்த சதவீதம் உயரும் பட்சத்தில், இனி தங்கத்தின் விலை உயரவே உயராது.
ரூபாயில் எண்ணெய் விலை
உலகம் முழுவதுமே வரியை விதிக்கப்பட்டாலும், இந்தியா, சீனாவுக்கு அதிக அளவிலான வரிகள் விதிக்கப்பட்டுள்ளது..
இதற்கு காரணம், இந்திய ரூபாயிலேயே, எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து வாங்குகிறோம். சீனாவும் இதையேதான் செய்கிறது. டாலர்களில் இவைகளை வாங்காததால்தான், இந்தியா மீது டிரம்புக்கு இவ்வளவு கோபம்.. முன்பெல்லாம் அமெரிக்க டாலர்களில் வர்த்தகம் நடந்து கொண்டிருந்த நிலையில், திடீரென அது நின்றுவிட்டதால், அதை டிரம்ப்பால் ஜீரணிக்க முடியவில்லை.
ஆனால் மீடியா முன்பு, India Is A friendship Country என்று பேசிவிட்டு, மறைமுகமாக இந்த காரியத்தை செய்கிறார், இதற்கு Gold War என்றுகூட பெயர் வைத்து கொள்ளலாம்..
கிராம் ரூ.30 ஆயிரம் உயரலாம்
அனைவருமே டாலர்களில்தான் முதலீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வரும்சூழலில், தங்கத்தில் முதலீடு செய்து தங்களுடைய நாட்டை பாதுகாத்து கொள்ளலாம் என்று மற்ற நாடுகள் நினைக்கின்றன., இதனால்தான் தங்கம் விலை உயர்கிறது.. இப்படியே போனால் கிராமுக்கு 30 ஆயிரம்வரை கூட செல்ல வாய்ப்புள்ளது.. அப்படி உயர ஆரம்பித்தால், அது குறையவே குறையாது..
டிரம்ப் பதவியை விட்டு விலகினால் மட்டுமே தங்கம் விலை குறையும்.. அல்லது இரு தரப்பு பேச்சுக்களை நிறுத்த வேண்டும். இது இரண்டுமே நடந்தால் மட்டுமே தங்கம் விலை குறையும்.
காலை ஒரு பேச்சு, மாலை ஒரு பேச்சு
டிரம்புக்கு முன்னாடி ஜோ பிடன் அதிபர் பொறுப்பில் இருந்தார்.. இதுபோல ஏதாவது அவரை பற்றின செய்திகள் மீடியாக்களில் பரபரப்பாக வந்து கொண்டிருந்ததா? எதுவுமே வரல.. டிரம்ப் வந்ததுமே கலகம் வந்தாச்சு.. ஜியோ பாலிடிக்ஸ் ஆரம்பமாகிவிட்டது. பொறுப்புக்கு வருவதற்கு முன்பு, அந்த போரை நிறுத்துவேன், இந்த போரை நிறுத்துவேன் என்று சொன்னவர், பதவிக்கு வந்ததுமே எதுவுமே செய்யவில்லை,.
காலையில் ஒரு பேச்சு, மாலையில் ஒரு பேச்சு என்று டிரம்ப் மாற்றி மாற்றி பேசுவதால், யு.எஸ் டாலரில் முதலீடு செய்ய அனைவருமே பயப்படுகிறார்கள்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications