"நிழல் நிஜமாகிறதா".. படக்குனு "பாய்காட்" பண்ண புள்ளி.. அஸ்திவாரமே அதிருதே.. என்ன நடக்குது பாஜகவில்?
சென்னை: திமுக மீதான ஊழல் புகார்கள் ஒருபுறம் பரபரத்து கொண்டிருக்க, தமிழக பாஜகவுக்குள்ளேயே 2 விதமான புயல்கள் வீசிக்கொண்டிருப்பதாக யூகமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த தகவல்கள் தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கி கொண்டிருக்கின்றன.. நேற்றைய தினம், திமுக மீதான ஊழல்களை லிஸ்ட் போட்டு வெளியிட்டிருந்த நிலையில், அது தொடர்பாக பாஜக தலைவர்கள் அவ்வளவாக கருத்து சொல்லாமல் உள்ளனர்.

ஏற்கனவே, தமிழக பாஜகவில் உள்ள சீனியர்களை மதிப்பது இல்லை, தங்களை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக கருத்துக்களை வெளியிடுவதாக அதிருப்திகள் வெடித்து வருவதாக தெரிகிறது.
ரிப்போர்ட்கள்: இது தொடர்பான சில ரிப்போர்ட்களையும் மேலிட பாஜகவுக்கு தமிழக பாஜக சீனியர்கள் பலமுறை அனுப்பி வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.. இதுஒருபுறம் என்றால், எடப்பாடி பழனிசாமி தரப்பும், அண்ணாமலை மீதான புகார்களை வாசித்தபடியே இருந்துள்ளது.. அத்துடன் ஒருபடி மேலே சென்று, மாநில தலைமையை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் செய்திகள் கசிந்தன.. இப்படிப்பட்ட சூழலில்தான், அதிமுகவுடன் கூட்டணி தேவையில்லை என்ற தன்னுடைய கருத்தை பொதுவெளியில் வைக்கவும், அதன் தாக்கம் இன்னமும் கூட்டணிக்குள் எதிரொலித்து வருகிறது.
நேற்றைய தினம், திமுக மீது புகார்களை அள்ளி வீசியதுடன், இன்னும் இதுபோல 4 சீரிஸ்கள் வரப்போகிறது என்று சொல்லியுள்ளதால், அதிமுக தரப்பும் கடுப்பில் உள்ளதாக சொல்கிறார்கள்.. இப்போது இன்னொரு தகவலும் சலசலக்கப்பட்டு வருகிறது.. டெல்லியில் நேற்று பிரதமர் மோடி கலந்து கொண்ட விழாவில் அண்ணாமலை ஏன் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்வியை சிலர் முன்வைத்து வருகிறார்கள்.. மத்திய அமைச்சர் எல்.முருகன், டெல்லியில் உள்ள தன்னுடைய இல்லத்தில் தமிழ் புத்தாண்டு விழாவை கொண்டாடினார்..

அங்க வஸ்திரம் - பட்டு: இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், ஆளுநர்களான சிபி ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். முதல் முறையாக இந்த விழாவை அவர் கொண்டாடுவதால், சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி, பட்டு வேட்டி, சட்டை, அங்க வஸ்திரம் ஆகியவை அணிந்து வந்திருந்தார். எல்.முருகனும் அதேபோல பட்டு வேட்டியில் வந்திருந்தார்.
ஆளுநர்கள் 2 பேருமே பட்டு உடைகளில் வந்திருந்தார்கள்.. தமிழகத்தில் இருந்து, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.. ஆனால் அழைப்பு விடுத்தும் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை.. இங்கு சென்னைக்கு வந்துவிட்டார்.. இதுதான் ஏன் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளதாம்.. ஒருவேளை, எல்.முருகன் வீட்டு விழா என்பதால் புறக்கணித்தாரா? என்றும் சந்தேகம் கிளம்பி உள்ளது.. விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், எல்.முருகனுக்கான முக்கியத்துவம் டெல்லியில் கூடி வருகிறது.. தமிழகத்தின் சில பொறுப்புகளும் அவருக்கு தரப்படுவதாக தெரிகிறது..
9 தொகுதிகள் குறி: அதுமட்டுமல்லாமல், 9 தொகுதிகளை குறிவைத்து அதற்கான பணிகளை தீவிரப்படுத்தும்படி எல்.முருகனுக்கு தலைமை உத்தரவிட்டிருக்கிறது.. அதனால்தான், அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்று அண்ணாமலை அறிவித்திருந்த போதிலும்கூட, இதற்கு எதிராக எல்.முருகன் பேட்டி தந்திருந்தார்.. அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று கூறி, அதிமுக மேலிடத்தையும் கூல் செய்திருந்தார்.. இப்படி, முருகனின் முக்கியத்துவம் கூடிவரும்நிலையில், அவரதுஇல்ல விழாவை அண்ணாமலை புறக்கணித்தாரா? என்று சந்தேகம் வலம்வருகிறது.
கடந்த 8ம் தேதி பிரதமர் மோடியை சென்னையில் வரவேற்க விமான டிக்கெட் போட்டும் வரமுடியவில்லை.. அந்த பயணத்தை டெல்லி தலைவர்கள் கேன்சல் செய்துவிடும்படி சொன்னதாக தெரிகிறது.. சென்னைக்கு வந்த மோடியை வரவேற்க வேண்டாம் என்று டெல்லி தலைமை கூறிவிட்டதால், டெல்லியில் நடக்கும் விழாவை வேண்டுமென்றே அவர் புறக்கணித்து விட்டாரா? என்று அடுத்த சந்தேகமும் கிளப்பி விடப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற அண்ணாமலை, மோடியை கண்டுகொள்ளாமல், அந்த முக்கிய நபர் ஆதரவு கொடுக்கும் தைரியத்தில் தனித்து செயல்பட துவங்கிவிட்டாரா? என்று இன்னொரு சந்தேகத்தையும் கிளப்பி விட்டுள்ளனர்.
அசைக்க முடியாது: இப்படி பல்வேறு யூகங்கள் கிளம்பி கொண்டிருந்தாலும், இதற்கு நேர்மாறான தகவல்களும் அண்ணாமலை குறித்து வரவே செய்கின்றன.. அதன்படி, அண்ணாமலை மீது அசைக்க முடியாத நம்பிக்கையை பாஜக மேலிடம் வைத்திருக்கறதாம்.. அதிலும் கர்நாடக தேர்தல் பொறுப்பில் பங்கேற்று வரும்நிலையில், மிகப்பெரிய செயல்பாட்டினை அண்ணாமலை புரிந்து வருகிறாராம்.. இந்த பணிகள் மேலிடத்துக்கு திருப்தியை தந்து வருகிறதாம்.. அதுமட்டுமல்ல, பிரதமர் சென்னை வந்தபோது, அண்ணாமலை இங்கு இல்லாததால்தான், கூட்டணி தலைவர்களைகூட மோடி சந்திக்க விரும்பவில்லை என்கிறார்கள்.
அந்த அளவுக்கு அண்ணாமலை மீதான நம்பிக்கை அமித்ஷா மற்றும் பிரதமருக்கு இருக்கிறதாம். இன்னொன்றையும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.. அண்ணாமலை என்ன பேசினாலும், அது அவரது தனிப்பட்ட கருத்து கிடையாது என்றும், பாஜக தலைவர்களின் கண்ணசைவு இல்லாமல் இவ்வாறு பேசமுடியாது என்றும் சொல்கிறார்கள்.. மேலிடம் எந்த அளவுக்கு அண்ணாமலையை நம்புகிறதோ, அதே அளவுக்கு அண்ணாமலையும், பாஜக தலைவர்களிடம் மிகுந்த விசுவாசமாக இருக்கிறாராம்..
இதன்காரணமாக, அண்ணாமலை மீது, தவறான தகவல்களை சிலர் காழ்ப்புணர்ச்சியில் வேண்டுமென்றே பரப்பப்பட்டு வருவதாகவும் கூறுகிறார்கள். இப்படி, இருவிதமான செய்திகள் இணையதளங்களில் பரபரபத்து கொண்டிருக்கும்நிலையில், தமிழக பாஜகவோ, அடுத்தடுத்த தேர்தல் வேலைகளில் மும்முரமாகி கொண்டிருக்கிறது..!!
-
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி












Click it and Unblock the Notifications