உயில் யாருக்கெல்லாம் எழுதலாம்? உயில் இல்லாமல் சொத்து பிரிக்க முடியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
சென்னை: பத்திரப்பதிவு, நிலம், வீடு, சொத்து விவகாரங்களில் அடிக்கடி பயன்படுத்தும் சொல் உயில்.. இதற்கான அர்த்தம் தெரியுமா? உயில் எழுத வேண்டுமானால் அதற்கான வழிமுறைகள் என்னென்ன தெரியுமா?
ஒருவர் தன்னுடைய சொத்துக்களை தன் வாழ்நாளுக்கு பிறகு, தன்னுடைய உறவினர்களுக்கு சேரும்படி எழுதி வைக்கும் பத்திரமே "உயில் பத்திரம்" ஆகும்.. இது முழுக்க முழுக்க சுயநினைவுடன் மட்டுமே எழுத முடியும்..

கவனிக்க வேண்டியவை: ஒருவர் தான் சுயமாக சொந்தமாக சம்பாதித்ததை, சொத்துக்களை மட்டுமே உயிலாக எழுதி வைக்க முடியும்.. பூர்வீக சொத்தாக இருந்தாலும் அதை யாருக்கும் உயிலாக எழுத முடியாது, பிரித்து எழுதி வைக்கவும் முடியாது..
உயில் எழுதும்போது, சொத்தை, யாருக்கு, எவ்வளவு தருவது என்று யோசித்து எழுத வேண்டும். இதில் 2 சாட்சி கையெழுத்துக்கள் முக்கியம். ஆனால் சாட்சி கையெழுத்து போடுபவர்கள், உயிலுக்கு சம்பந்தம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். அதேபோல, உயிலில் டாக்டர் மற்றும் வக்கீல்களின் சாட்சி கையெழுத்துக்களும் அவசியம்.
உயில்கள்: நீங்கள் எழுதிய உயிலை ரத்து செய்யலாம், திருத்தம் செய்யலாம்.. இதற்கு முத்திரைத்தாள் தேவைப்படாது.. சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து, பதிவு செய்துகொள்ளலாம்.. அரசு நிர்ணயம் செய்துள்ள பதிவு தொகையை மட்டும் செலுத்தி, பதிவு செய்துகொள்ளலாம்.
ஒருவர், உயிலை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்... ஆனால், கடைசியாக எழுதும் உயில் மட்டுமேதான் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.. அதேபோல, உயில் எழுதிய பிறகும்கூட அந்த சொத்தை அவரால் விற்க முடியும்... ஒருவேளை, உயில் எழுதியவர் இறந்தபின்னர், உயிலில் குறிப்பிட்ட சொத்து விற்கப்பட்டிருந்தால் சொத்து வாங்கியவரிடம் உயிலின் பேரில் கேட்க முடியாது.
வாரிசுகள்: ஒருவேளை வாரிசு இருந்தும், அவர்களை தவிர்த்து பிறருக்கும் உயில் எழுதி வைக்கலாம். அப்படி எழுதி வைத்தால் வாரிசுகளால் அதை கேள்வி கேட்கவோ, எதிர்க்கவோ முடியாது.
அதுக்காக, வாரிசுகளுக்கு எழுதி வைத்தால், அந்த சொத்து மனைவிக்கு கிடைக்கும் என்றும் அர்த்தம் கிடையாது... வாரிசுக்கு எழுதி வைக்கும்போது, மனைவியையும் ஒரு பங்குதாரராக சேர்த்து உயில் எழுதினால் சிறந்தது.. அல்லது வாரிசுதாரரையே நாமினியாக நியமித்துவிட்டால், இன்னும் சிறப்பு.
விருப்பம்: உயில்களை வாரிசுகளுக்கு மட்டுமே எழுதி வைக்க வேண்டும் என்பதில்லை.. தனக்கு விருப்பமானவர்கள் அல்லது டிரஸ்ட்களுக்கும் எழுதி வைக்கலாம்.. ஒருவேளை, 18 வயது நிரம்பாத நபருக்கு உயில் எழுதப்பட்டால், அதற்கு (கார்டியன்) காப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.. இன்னும் பிறக்காத குழந்தையின் பேரில்கூட, உயில் எழுதலாம்., பிறக்கப்போகும் பேரக்குழந்தையின் மீதும் உயில் எழுதலாம்.
உயில் எழுதியவர் இறந்ததுமே, அந்த உயிலை கோர்ட்டில் மெய்ப்பிக்க வேண்டும்.. 3 வருடத்துக்குள் உயிலை மெய்ப்பிக்காவிட்டால், தாமதத்துக்கான காரணங்களை கோர்ட்டில் சொல்ல வேண்டியிருக்கும்.
பிரிக்க முடியுமா: அதேபோல, உயில் இல்லாமல் சொத்துக்களை பிரிக்க முடியுமா? எப்படி பிரிப்பது? இந்து வாரிசுரிமை சட்டம் 1956-ன்படி, சொத்தின் உரிமையாளர் உயில் எழுதாமல் இறந்துவிட்டால், அந்த சொத்தை முதல் வாரிசுகள் என்று சொல்ல கூடிய மனைவி, மகன், மகள் அல்லது தாய் போன்றவர்களுக்கு பிரித்து கொடுக்கலாம்.
அதுவே முதல் வாரிசுகள் இல்லாத பட்சத்தில், அதாவது உரிமையாளரின் மனைவி, குழந்தைகள் இல்லாத பட்சத்தில், அந்த சொத்தை 2-ம் வாரிசுகளுக்கு, அதாவது மகனின் மகள் அல்லது மகன், மகளின் மகள் அல்லது மகள், சகோதரன், சகோதரி போன்றவர்களுக்கு அச்சொத்தை பிரித்து தரலாம் என்கிறார்கள்.. எனவே, உயில் எழுதுவது குறித்த சந்தேங்களை வழக்கறிஞர்களிடம் கேட்டு தெளிவு பெற்றுக்கொள்ளலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications