Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஒரே நாடு ஒரே தேர்தல்" வருதா.. ஏதோ நடக்க போகுதா.. மாநில சுயாட்சிக்கு எதிரானதா? முளைத்த மேட்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'ஒரு நாடு ஒரே தேர்தல்' என்ற விவகாரம் மீண்டும் முளைத்துள்ளது.. இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் என இரு தரப்பிலான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

5 வருடத்துக்கு ஒருமுறை, ஒரே நேரத்தில் வாக்காளர்கள் மூலம் மத்திய/மாநில அரசுகளை தேர்வு செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம்.. இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் சுஷில் சந்திரா, இது தொடர்பாக வெளியிட்டிருந்த அறிக்கையில், "ஒரே நாடு ஒரே தேர்தல் முறை" பற்றி கூறியிருந்தார்.. இது அப்போதே அரசியல் ஆர்வலர்களிடையே மீண்டும் விவாதத்தை கிளப்பிவிட்டது.

Are these the possibilities in one country and one election, What are the opposition parties going to do

சட்டமன்றங்கள்: 1967 வரை சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒன்றாகவே தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு, 1968களில் சில மாநில சட்டமன்றங்கள் கலைக்கப்பட்ட பிறகு, சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தனித்தனியே நடத்தப்பட்டு வருகிறது.. குறிப்பாக, 1968ல் சில மாநில சட்டப்பேரவை முன்கூட்டியே கலைக்கப்பட்டதன் விளைவாகவே, இந்த முறை புகுத்தப்பட வேண்டியதாயிற்று..

அந்தவகையில், கடந்த 1952,1957, 1962,1967 ஆண்டுகளிலேயே தேர்தல் ஒரே சமயத்தில் நடைபெற்றதை மறுக்க முடியாது. ஆனால், மத்திய பாஜக அரசு இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை முன்னெடுத்தால், தேர்தல் செலவு குறையும் என்று காரணம் சொல்லப்படுகிறது.. அத்துடன், ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையானது வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்றும் பாஜக தரப்பில் சொல்லப்படுகிறது.

மற்றொருபுறம் இதற்கு எதிர்ப்பு எழுகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டுவந்தால், மக்களால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைப்பதாகிவிடும்.. தேர்தலுக்காக செலவுசெய்யப்பட்ட மக்களின் வரிப்பணமும் வீணாகும் என்பதால், இதை கைவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சொல்கிறார்கள்.

மக்களவை தேர்தல்: எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு, 5 வருடங்கள் என்பதற்கான உத்தரவாதம் இருக்குமா? மக்களவையிலும், மாநில சட்டமன்றங்களிலும், ஒரு கட்சி தன்னுடைய மெஜாரிட்டியை இழந்துவிட்டால், அடுத்த 5 ஆண்டு, தேர்தல் சுழற்சி வரும் வரை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தும் சூழலை உருவாக்கிடுவது சரியா? என்றெல்லாம் விவாதங்கள் வலுத்து வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு, அரசியல் ஆலோசகர் கலை, நம்முடைய ஒன் இந்தியா சேனலுக்கு ஒரு பிரத்யேக பேட்டியை தந்திருந்தார்.. அப்போது, ஒரே நாடு ஒரே தேர்தல் முறை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினோம்.. அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள், இன்றும் பலரது கவனத்தை திரும்பி பார்க்க வைத்து வருகிறது. அத்துடன், இதுகுறித்து விவாதங்களில் எடுத்துக்கொள்ளப்பட்டு அலசப்படுகின்றன. அரசியல் ஆலோசகர் கலை சொன்ன கருத்துக்கள் இவைதான்:

ரிப்போர்ட்கள்: "நம் நாட்டில் அடிக்கடி தேர்தல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.. அதிலும் எங்காவது, இடைத்தேர்தல்கள், 6 மாசத்துக்கு ஒருமுறை குரூப் பண்ணி நடத்தறாங்க. இப்படி 7, 8 மாநிலங்களில் நடக்கின்றன.. அடிக்கடி தேர்தல் நடத்துவதால், செலவினங்கள் அதிகமாகுது. 2024 நாடாளுமன்ற தேர்தல் வந்தால், அதில் தமிழ்நாடு சட்டமன்றத்தை கலைத்துவிட்டு, அதோடு இணைப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், டிராப்ட் ரிப்போர்ட் பார்க்கும்போது அப்படியில்லை.

5 மாநில தேர்தல் வரப்போகிறதென்றால், அந்த தேர்தலை நாடாளுமன்ற தேர்தலை இணைக்க முயற்சி செய்யலாம். இப்படி ஒவ்வொன்றாக இணைத்து செயல்படலாம். அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் நீக்கப்பட்டு அங்கே வரும் எண்ணம் இல்லை.

உதாரணமாக, ஒரு அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து, ஆட்சி கலைக்கப்பட நேர்ந்தால், என்ன முடிவெடுக்கப்படும்? அந்த டிராப்ட் ரிப்போர்ட்டில், தேர்தல் ஆணையம் என்ன செய்யணும்னு சொல்கிறார்கள் என்றால், அந்த நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளையும் கூப்பிட்டு, ஒருமித்த ஆட்சி முடியுமா என்கிறதை ஆராய வேண்டும்.

சாத்தியக்கூறுகள்: சாத்தியம் இருந்தால் அதை செய்ய வேண்டும். சாத்தியம் அமையாவிட்டால் தேர்தலை நடத்திதான் ஆக வேண்டும். அந்த தேர்தலை அடுத்துவரக்கூடிய ஏதாவது ஒரு தேர்தலுடன் இணைத்து நடத்த முடியுமா? என்று பார்க்க வேண்டும். அதுக்கும் வாய்ப்புஇல்லை என்றால் தனியாக நடத்திதான் ஆக வேண்டும்.

ஆனால், 3 ஆண்டுகள் முடிந்து, திடீரென சட்டமன்றம் கலைந்துவிடுகிறது என்று வைத்து கொள்வோம். அடுத்த தேர்தலை, தடுக்க முயற்சி செய்வார்கள். மீறி நடந்தால், புதிதாக தேர்ந்தெடுக்கப்படக்கூடிய அரசுக்கு, அதுக்கான காலகட்டம் என்பது 2 ஆண்டுகள்தான். ஏனென்றால், 2 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பவும் நாடாளுமன்ற தேர்தல் வந்துவிடும்.

இடைத்தேர்தல்: இப்போது ஒரு இடைத்தேர்தல் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு எம்எல்ஏ அல்லது எம்பி யாராவது இறந்துவிட்டால், அங்கு இடைத்தேர்தல் தேவையில்லை என்கிறார்கள்.

Are these the possibilities in one country and one election, What are the opposition parties going to do

எந்த கட்சியின் உறுப்பினர் இறந்துவிட்டாரோ, அந்த கட்சி இன்னொரு எம்பி, எம்எல்ஏவை அவர்களே தேர்ந்தெடுத்து கொள்ளலாம். அவர்களுக்கே அந்த பொறுப்பை தந்துவிட வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் தேவையேயில்லை. காங்கிரஸ் கட்சியே தங்களில் ஒருவரை எம்எல்ஏவாக தேர்வு செய்துவிடலாம்.

இப்படி தேர்ந்தெடுக்கப்படுவது மக்களாட்சி தத்துவத்திற்கு மாற்றாக பார்க்கப்படாது. காரணம், பிரதானமாக ஒரு வேட்பாளருக்கு மக்கள் வாக்களிப்பதில்லை.. அந்த கட்சி அல்லது கூட்டணி கட்சிகள் இதற்குதானே மக்கள் வாக்களிக்கிறார்கள். அதனால், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டதால், திரும்ப அந்த கட்சியிலேயே ஒருவரை தேர்வு செய்வதால் பிரச்சனை இல்லை. மாநில சுயாட்சிக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை.

தேர்தல்: தேர்தலையே நடத்தாமல் தள்ளிப் போடுகிறார்கள் அல்லது மத்திய அரசே தேர்தலை தீர்மானிக்கிறது என்றால், அதை மாநில சுயாட்சிக்கு எதிரானது என்று கூறலாம். ஆனால், தேர்தல் எப்போது என்பதை முடிவு செய்வது தேர்தல் ஆணையம் தான். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது ஒன்றுதான் இதில் சிறிய மாற்றமே தவிர, மாநில சுயாட்சிக்கு எதிரானது இது கிடையாது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+