"உதயசூரியன்" வேலிய தாண்டிடுச்சு.. அறிவாலயத்தில் விழுந்த அம்பு.. "சின்ன சறுக்கல்".. பதறும் பெரம்பலூர்
சென்னை: அமைச்சர் உதயநிதி உட்பட அவரது குடும்பத்தினர், கிறிஸ்தவ மதத்தில் இருக்கிறார்கள்.. மதம் மாறிய பிறகு, மற்ற மதத்தை ஒழிப்பதாக சொல்வது சரியானது கிடையாது என்று ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் விமர்சித்திருக்கிறார்.

உதயசூரியன் சின்னத்தில் எம்பியாக இருந்துகொண்டே, திமுகவை சரமாரி விமர்சித்து வருபவர் ஐஜேகே பாரிவேந்தர்.. "குடும்ப ஆட்சி, குடும்ப அரசியல் கூடாது.. பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களில் குடும்ப ஆட்சி அகற்றப்பட்டது போல் தமிழகத்திலும் குடும்ப அரசியல் ஒழிக்கப்படும்" என்று கடந்த வருடம் இவர் பேட்டி தந்திருந்தார்.
ஒருவேளை கருத்து வேறுபாடு காரணமாக இப்படி பேசுகிறாரா? அல்லது கூட்டணி மாற போகிறாரா? என்ற யூகங்களும் சந்தேகங்களும் கிளம்பின..
ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே, ரவி பச்சமுத்துவின் பிறந்தநாள் விழாவில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். திமுக எம்பி வீட்டில், அண்ணாமலையா? என்று அப்போதே பலர் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்..
அண்ணாமலை: சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர், "அண்ணாமலை சின்ன வயசில் பெரிய பதவிக்கு வந்திருக்கிறார்.. அவர் மிகப்பெரிய அறிவாளி.. அவர் இல்லேன்னா, இன்னைக்கு எதிர்க்கட்சியே இல்லாமல் போயிருக்கும்.. கையில் அத்தனை டேட்டாவும் வைத்திருக்கிறார்.. தமிழகத்துக்கு தேவையான சிறந்த தலைவர் பாஜகவில் இப்போது இருக்கிறார்" என்று பாராட்டியிருந்தது, நிலவிவந்த கூட்டணி யூகத்துக்கு ஒரு முடிவை கட்டிவிட்டுப்போனது.
ஒருமுறை செய்தியாளர்கள் பாரிவேந்தரிடம், "எந்தக் கூட்டணியில் இருக்கிறீர்கள்" என்று கேட்டார்கள்.. அதற்கு அவர், "நாங்கள் பாஜகவுடன் தோழமையில் இருக்கிறோம்.. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியிலேயே நிற்க போகிறோம்" என்று ஓபனாகவே சொல்லிவிட்டார்.
நேற்றுகூட திமுகவை சரமாரியாக விமர்சித்திருக்கிறார் பாரிவேந்தர்.. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தில் ஐஜேகே விழாவின்போது, செய்தியாளர்களிடம் பேசினார்.
ரெய்டு: அப்போது, "2014 முதல், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளோம். இடையில் சின்ன சறுக்கல் இருந்தது. உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்தபோது, மின்சாரத்தை "கட்" செய்த பிறகு, திமுக மீது ரெய்டு அதிகரித்துள்ளது. கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசியது கண்டிக்கத்தக்கது. திமுக ஆட்சிக்கு வந்த, இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
சனாதனத்தை எதிர்க்கும் திமுக அமைச்சர் உதயநிதி தலைமையில் நடக்கும் இளைஞர் அணி மாநாட்டு பந்தல் அமைக்கும் கால்கோள் விழாவில், அர்ச்சகர்களை வைத்து பூஜை செய்திருக்கிறார்கள்.. அமைச்சர் உதயநிதி உட்பட அவரது குடும்பத்தினர், கிறிஸ்தவ மதத்தில் உள்ளனர். மதம் மாறிய பிறகு, மற்ற மதத்தை ஒழிப்பதாக சொல்வது சரியானது இல்லை. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுமைக்குமே, மோடிக்கு எதிர்ப்பு என்பதே கிடையாது" என்றார் பாரிவேந்தர்.
பாஜக தோழமை: கடந்த எம்பி தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றிபெற்ற பாரிவேந்தர், இன்னமும் திமுக உறுப்பினராகவே நாடாளுமன்றத்தில் தொடர்கிறார் என்றாலும், பாஜகவுடனான தோழமையை தொடர்ந்து பாராட்டி வருகிறார்..
கடந்த ஒருவருட காலமாகவே, பெரம்பலூர் தொகுதியை பாரிவேந்தர், பாஜகவிடமே நேரடியாக கேட்டு வாங்கியதாக கூறப்பட்டது. அதுமட்டுமல்ல, உடல்நலக்குறைவால் இந்த முறை போட்டியிட போவதில்லை என்றும், தனக்கு பதிலாக ரவி பச்சமுத்துவை போட்டியிட முன்னிறுத்தலாம் என்றும் பாரிவேந்தர் யோசிப்பதாகவும் செய்திகள் கசிந்தன... அதேசமயம், இப்படி திடீர் கூட்டணி மாற்றத்திற்கு சில காரணங்களும் வட்டமடித்தன.
கள்ளக்குறிச்சி: இந்தியாவின் பல மாநிலங்களிலும் உள்ள தங்களது கல்லூரிகளை சிக்கலின்றி நடத்தி செல்வதற்கு, பாஜகவின் தயவு மட்டுமே தேவையாக உள்ளதாம்.. எனவேதான், தமிழக அரசியலையும் தாண்டி, மத்திய பாஜகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளதாம் பாரிவேந்தர் தரப்பு..
உள்ளாட்சித் தேர்தலிலேயே இந்திய ஜனநாயக கட்சி, திமுகவின் தயவில்லாமல் தனித்துப் போட்டியிட்டதற்கு காரணமும் இதுதான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.. ஆக இந்த முறை, பெரம்பலூர் அலலது கள்ளக்குறிச்சி கன்பார்ம்டு போல??












Click it and Unblock the Notifications