Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அக்கு அக்கா போச்சு.. விலகிய விரிசல்.. யாரந்த "வெள்ளைக்கொடி" வேந்தர்.. சபாஷ் கொங்கு.. கவனிக்கும் திமுக

அதிமுக பாஜக இடையே நிலவிவந்த பூசல்கள், சலசலப்புகள், முணுமுணுப்புகள் முடிவுக்கு வந்துள்ளன

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி முறிந்துவிடப்போகிறது.. பாஜகவை அதிமுக கூட்டணியில் இருந்து கழட்டிவிட போகிறது என்பன போன்ற பேச்சுக்களுக்கள் எல்லாம் ஒரே நாளில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.. அப்படி என்ன நடந்தது ஒரேநாளில்?

கடந்த சில தினங்களாகவே, பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு எதிரான கருத்துக்கள் தொடர்ந்து வெளிப்படையாக முன்வைக்கப்பட்டன.. அதேபோல, அதிமுக தரப்பில் இருந்தும் எதிர்வினையாற்றப்பட்டது.

மற்றொருபக்கம், அதிருப்தியாளர்கள் தொடர்ந்து பாஜகவில் இருந்து அதிமுக நோக்கி கிளம்பி சென்றனர்.. இந்த இணைப்பு இனி தொடரும் என்று அதிமுக தலைவர்கள் அறிவித்தும் இருந்தனர்..

 டீம் டீம் டீம்

டீம் டீம் டீம்

பாஜகவினரை அதிமுகவில் சேர்க்க எடப்பாடி பழனிச்சாமி தனியாக ஒரு டீம் அமைத்திருப்பதாகவும், அண்ணாமலையால் பாதிக்கப்பட்டு அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை அதிமுகவுக்கு கொண்டுவருவதே இந்த டீம்தான் என்றும் தகவல்கள் வெளியாகின.. இதைத்தொடர்ந்தே பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் அம்மு (எ)ஜோதி, திருச்சி புறநகர் மாவட்ட துணை தலைவர் டி.விஜய் ஆகியோர் அதிமுகவில் இணைந்ததாகவும் சொன்னார்கள்.. தொடர்ந்து இரு கட்சி நிர்வாகிகளும், கூட்டணி உறவை மறந்து, ஒருவரை ஒருவர் வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார்கள்..

 ஆஹா அச்சாரம்

ஆஹா அச்சாரம்

இந்த திடீர் மோதல்களையடுத்து, அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த கூட்டணி முடிவுக்கு வரப்போவதாகவும், இரு தரப்புமே தனித்தனியாக நின்று தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் யூகங்கள் கிளம்பின. இதற்கு நடுவில் விசிக தலைவர் திருமாவளவன், பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று மறுபடியும் அதிமுகவுக்கு எச்சரிக்கையை தந்துவிட்டு போனார்.. இந்த எச்சரிக்கை, அடுத்த கூட்டணிக்கான "அச்சாரம்" என்று அரசியல் விமர்சகர்களும் கருத்தும் சொன்னார்கள்..

தவிடுபொடிகள்

தவிடுபொடிகள்

ஆனால், நேற்று ஒரே நாளில் எல்லாமே தவிடுபொடியாகிவிட்டது.. அதிமுக - பாஜக இடையே கூட்டணி தொடரும் என்ற அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகின.. இதற்கு என்ன காரணம்? திடீரென இந்த அதிருப்திகள் விலகி, சமாதானம் ஆக என்ன காரணம்? வெள்ளைக்கொடியுடன் வந்தது யார்? என்பது போன்ற சந்தேகங்களுக்கு சில விடைகளும் கிடைத்துள்ளன. வரிசையாக செல்லும் அதிருப்தியாளர்களை அதிமுக வாரிஅணைக்கவும், இதனால் ஆத்திரமடைந்து, எடப்பாடி பழனிசாமியின் கொடும்பாவியை எரிக்கும் அளவுக்கு பாஜக தரப்பும் செல்லவும், விஷயம் மேலிடம்வரை பறந்துள்ளது.

 தாறுமாறு பேச்சு

தாறுமாறு பேச்சு

அதிமுக - பாஜக இடையே என்ன நடக்கிறது என்பது குறித்து தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ் விசாரித்தாராம்.. இதையடுத்து, பாஜக நிர்வாகிகள் யார் யார் அதிமுகவுக்கு தாவினார்கள். அப்படி செல்லும்போது, என்னென்ன வார்த்தைகளால் பாஜகவை விமர்சித்துவிட்டு போனார்கள் என்பது குறித்தும், மாநில தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோரும் இதுகுறித்து விளக்கமாக எடுத்து சொன்னார்களாம்.

 உச்சப்பட்ச கவலை

உச்சப்பட்ச கவலை

இதையடுத்து, உடனடியாக இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டதாம்.. உண்மையை சொல்லப்போனால், கடந்த சில தினங்களாக நடந்து வந்த மோதலை கண்டு, இரு கட்சியின் மேலிட தலைவர்களும் அதிர்ந்து போனார்களாம்.. இரு கட்சி உறவை விரும்பும் இந்த தலைவர்கள் கவலையும் அடைந்துள்ளனர்.. இந்த கூட்டணி மோதலும், பிளவும், இனியும் அதிகமானால், அதனால் லாபம் அடைய போவது திமுகதான் என்பதையும் அறிந்து, அலர்ட் ஆகியுள்ளனர்.. இதற்கு பிறகே சமாதான முயற்சி 2 தரப்பிலும் துவக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.

 சபாஷ் சீனியர்கள்

சபாஷ் சீனியர்கள்

கொங்கு மண்டலத்தின் இரு கட்சிகளின் சீனியர்களும் இதுவிஷயத்தை பேசி சமாதானம் பேச்சை நடத்தியதாகவும் கூறுகிறார்கள்..
எக்காரணம் கொண்டும், நடந்து வரும் சலசலப்புகள் திமுகவுக்கு பலமாகி போய்விடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கும் நிலையில், கூட்டணியின் நலன் கருதியும், இரு கட்சிகளின் நலன் கருதியும் சுமூக முடிவை இந்த சீனியர் தலைவர்கள் எடுத்துள்ளனர்.. அதற்கு பிறகே இரு தரப்பிலும் தலைவர்கள் தனித்தனியாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டி தந்துள்ளனர்..

 அறிவாலயம்

அறிவாலயம்

அந்தவகையில், வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "பல்வேறு விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய பலமான கூட்டணியாகவே உள்ளோம்.. வரும் தேர்தல்களிலும் தொடர்வோம். கடந்த சில நாட்களாகவே விரும்பத்தகாத சில நிகழ்வுகள் நடந்து வருகின்றன. பாஜக தேசிய தலைமை விரைவில் இதற்கு தீர்வு காணும்.. வரும் எம்பி தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தி, அதிக இடங்களில் வெற்றி பெறுவதே எங்களின் இலக்கு. அதற்காக வரும் இடையூறுகளை இரு கட்சிகளிலும் பெரும்பான்மையோனார் விரும்பவில்லை என்றார். அதேபோல, எடப்பாடி பழனிசாமியும் நேற்றைய தினம் நடந்த அதிமுகவின் ஆலோசனை கூட்டத்தில் இதே வார்த்தைகளை கூறியிருக்கிறார்..

 ஏகப்பட்ட ஓட்டைகள்

ஏகப்பட்ட ஓட்டைகள்

இத்தனைக்கும், அதிமுக தலைமையை பாஜக தரப்பு கடுமையாக விமர்சித்து வருவதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று பலரும் ஆவேசமாக சொன்னார்களாம்.. ஆனாலும், எடப்பாடி பழனிசாமி இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லையாம். மாறாக, "திமுக மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்....எம்பி தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டும், வரும் தேர்தலிலும் பாஜக கூட்டணியில் அதிமுக இணைந்து தேர்தலில் போட்டியிடும்.. தமிழக பாஜக தலைவர்கள் பேச்சுக்கு, அதிமுக மூத்த நிர்வாகிகள் யாரும் உணர்ச்சி வசப்பட்டு பதிலடி கொடுக்க வேண்டாம். அப்படி பதிலடி கொடுத்தால் அதிமுக தலைவர்களுக்குதான் பிரச்சனை வரும்.. அதனால் பாஜக தலைவர்களை விமர்சித்து யாரும் பேசக்கூடாது. பொறுமை காக்க வேண்டும் என்று கடிவாளம் போட்டாராம் எடப்பாடி பழனிசாமி.

 COOL ப்ளான்

COOL ப்ளான்

இதற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமாரும், "பாஜகவுடன் எந்த மோதலும் இல்லை... ஐடி விங் தரப்பில் சில பக்குவப்படாத கருத்துகள் பகிரப்பட்டது. அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்தே வருகிறது" என்றார். பின்னர் பேசிய கேபி முனுசாமியும், "கூட்டணியில் சிறு சிறு சலசலப்பு இருந்தாலும் தேசிய நலன்கருதி, இக்கூட்டணி எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து பழனிசாமிக்கு தெரியும்" என்று தெரிவித்தார்.. அதிமுக கூட்டணியில் பாஜக இப்போதைக்கு இல்லை என்று நேற்று முன்தினம் மூத்த தலைவர் செம்மலை பேட்டி தந்திருந்த நிலையில், நேற்று அனைத்து அதிமுக தலைவர்களும் வேறு மாதிரியான பேட்டிகளை தந்துள்ளனர்.

 கமலாலயம் + அறிவாலயம்

கமலாலயம் + அறிவாலயம்

ஆக, இந்த ஒரு வார காலமாகவே நிலவி வந்த பூசல்கள் அத்தனையும், இரு தரப்பு தலைவர்களும், தங்களின் பக்குவப்பட்ட அரசியலாலும், முதிர்ச்சி நிறைந்த செயல்பாடுகளாலும், ஒரே நாளில் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது, வரவேற்கப்பட விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது.. அதேசமயம், இந்த இரு கட்சிகளின் இந்த இணக்கத்திற்கும், நெருக்கத்திற்கும் காரணம் "ஒரே எதிரியான திமுகதான்" என்பதையும் நாம் இங்கே அழுத்தமாக பதிவு செய்ய வேண்டி உள்ளது.. ஆரோக்கியமான அரசியலின் நகர்வாகவே இவை யாவும் கணிக்கப்பட்டும் வருகிறது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+