சின்ன வெங்காயம் சர்னு போயிருச்சு.. கோயம்பேட்டை மலைத்து பார்த்த விவசாயிகள்.. உடனே கோட்டைக்கு கோரிக்கை
சென்னை: நாளுக்கு நாள் பூண்டு விலை உயர்ந்து வரும்நிலையில், சின்ன வெங்காயம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதுகுறித்த முக்கிய கோரிக்கை ஒன்றை விவசாயிகள் தமிழக அரசுக்கு எழுப்பி வருகிறார்கள்.
சமீபநாட்களாகவே, நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்து வந்தது.. தமிழகத்திலும் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 150 ரூபாய் வரையிலும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய் வரையிலும் விற்பனையானது.

வெங்காய விலை: எனவேதான், மத்திய அரசு தரப்பில் திடீரென ஒரு உத்தரவு வெளியானது.. அந்தவகையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், மக்களுக்கு வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கவும், சாமானிய மக்கள் வெங்காய விலை உயர்வால் பாதிக்கப்படாமல் தடுக்கும் நடவடிக்கையாக 2024 மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்து உத்தரவிட்டது.
வெங்காயத்தின் விலை கணிசமாக அதிகரித்ததன் காரணமாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருப்பதாக விளக்கமும் தரப்பட்டிருந்தது.. அதுமட்டுமல்ல, மேலும் பிற நாடுகளிடமிருந்து வரும் கோரிக்கையின் அடிப்படையில் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என்றும் மத்திய அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
புதிய கோரிக்கை: இந்நிலையில், சின்ன வெங்காயம் விலை சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.. இப்படிப்பட்ட சூழலில், ஏற்றுமதியை மீண்டும் துவங்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அரியலுார், பெரம்பலுார், திருச்சி, ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், சிறிய வெங்காயம் சாகுபடி நடந்து வருகிறது. இங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேஷியா, அரபு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.. எனவே, வட மாநிலங்களில் பெரிய வெங்காயம் சாகுபடி, 2023ம் ஆண்டு பாதித்தது.
தடை: இந்த விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக, வெளிநாடுகளுக்கு அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால், பெரிய வெங்காயம் விலையும் கட்டுக்குள்ளேயே இருக்கிறது..
இன்றைக்கு கிலோ 30 ரூபாய்க்கு கீழ் விற்பனையாகி வருகிறது. ஏற்றுமதியை கட்டுப்படுத்தாவிட்டால், கிலோ 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்திருக்கும்.. பெரிய வெங்காயத்துடன் சிறிய வெங்காயம் ஏற்றுமதிக்கும் தடை நீடிக்கிறது. எனவேதான் விலை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில், சின்ன வெங்காயம் 1 கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தடை விதிப்பதற்கு முன், 100 முதல் 150 ரூபாய்க்கு விற்பனையானது. ஏற்றுமதி தடையால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை.. மேலும், விலை வீழ்ச்சியால், விவசாயிகள் கடுமையான அவதிக்கும், அதிருப்திக்கும் ஆளாகி உள்ளனர்.
பிரதமர மோடி: இதன்காரணமாக, ஏற்றுமதிக்கான அனுமதியை மத்திய அரசு மறுபடியும் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்... இது தொடர்பாக, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுத வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications