எடப்பாடிக்கு கிளம்பின "கிலி".. திடீர்னு கிடைச்ச மேட்டர்.. வேலையை காட்டிய திமுக.. அவசரமா போன உத்தரவு
சென்னை: அதிமுக வழக்கு, கூட்டணி முடிவு உள்ளிட்ட விவகாரங்கள் ஒருபக்கம் நடந்துவந்தாலும், அதிமுகவை தொடர்ந்து பலப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
தமிழகத்தில் திமுக மட்டுமே பலம்வாய்ந்த கூட்டணியாக உள்ளது.. மற்ற கட்சிகள் இதுவரை கூட்டணியை உறுதி செய்யவில்லை.. அதற்கான முயற்சிகளிலும் மறைமுகமாக ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

அதிமுகவை பொறுத்தவரை, திமுகவுக்கு பலமான கூட்டணியை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.. மெகா கூட்டணி என்று அறிவித்து ஒரு வருடமாகிவிட்ட நிலையில், இதுவரை அதற்கான அறிகுறிகள் அதிமுக கூடாரத்தில் தென்படவில்லை. அதேசமயம், கடந்த 2 வருடங்களாகவே அதிமுக பிரிந்துள்ள நிலையில், இதையும் சரிக்கட்ட வேண்டிய நெருக்கடி எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளது.
கூட்டணி: ஒருங்கிணைந்த அதிமுகவாக இருந்தபோதே, திமுகவை சமாளிக்க முடியாமல், கடந்த தேர்தலில் தோல்வியை தழுவ நேர்ந்தது. ஆனால், இப்போது நிலைமை இன்னும் மோசம் என்பதால், கடந்த தேர்தலில் கிடைத்த ஓட்டு சதவீதம் இந்த முறை கிடைக்குமா என்று தெரியவில்லை.. அதனால்தான், கட்சியை பலப்படுத்தும் பணிகளை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து செய்து வருகிறார்.
அந்தவகையில் பூத் கமிட்டி வேலைகளும் துரிதமாகி உள்ளன.. எந்த ஒவ்வொரு கட்சிக்குமே, தேர்தல் களத்தில் அடிப்படையாக இருப்பது பூத் கமிட்டிகள்தான்.. இந்த பூத் கமிட்டிகளை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்று ஏற்கனவே மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி சில ஆலோசனைகளை தந்திருந்தார்.
பூத் கமிட்டி: குறிப்பாக, தமிழகத்தில் மொத்தம் 65 ஆயிரம் பூத்கள் இருக்கும்போது, ஒவ்வொரு பூத்திலும் 800 முதல் 1000 ஓட்டுகள்தான் இருக்கும்.. இந்த பூத்துகள் ஒவ்வொன்றுக்கும் 20 ஆண்கள் கொண்ட ஒரு கமிட்டி, 20 பெண்கள் கொண்ட ஒரு கமிட்டி, 25 பேர் கொண்ட இளைஞர்கள், இளம்பெண்கள் கமிட்டியை உருவாக்க வேண்டும்..
ஒவ்வொரு கமிட்டிக்கும் தனித்தனி பதிவேடு இருக்க வேண்டும். அந்த பதிவேட்டில் கமிட்டியில் இடம் பெற்றுள்ள 20 பேரின் பெயர், முகவரி, ஆதார் எண், செல்போன் நம்பர், அவர்களது போட்டோ போன்றவை இடம்பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பூத்திலும் இந்த கமிட்டிகள் பற்றிய முழு விவரத்தையும் பென் டிரைவில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்.. ஆனால், கமிட்டியில் இடம் பெறுபவர்களில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது.
திடீர் போன்: பல குடும்பங்களை சேர்ந்தவர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். இதை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருப்பவர்கள் சரி பார்க்க வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல, திடீர் திடீரென, ஏதாவது ஒரு பூத் கமிட்டியினருக்கு போனை போட்டு, அவர்களிடம் உண்மை தன்மையை கண்டறிய எடப்பாடி பழனிசாமி, திட்டமிட்டுள்ளாராம்.
இப்படிப்பட்ட சூழலில், நமக்கு ஒரு பிரத்யேக தகவல் கிடைத்துள்ளது.. அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்திருக்கிறாராம் எடப்பாடி பழனிச்சாமி. அதாவது, நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால், புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, முகவரி மாற்றம், முகவரியில் இல்லாத நபர்களின் பெயர்கள் நீக்கம் உள்ளிட்ட பணிகளை கடந்த 1 மாதங்களாக கவனித்து வருகிறது தேர்தல் ஆணையம்.
டபுள் என்ட்ரி: இந்த நிலையில், முகவரியில் ஆளில்லாத, டபுள் என்ட்ரி உள்ளிட்டவைகளை கண்டறிந்துள்ள தேர்தல் ஆணையம், முதல் கட்டமாக 5 லட்சம் டபுள் என்ட்ரி வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த தகவலை அறிந்து, அதனை அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளிடம் தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி, "டபுள் என்ட்ரி, முகவரியில் ஆள் இல்லை" என்ற காரணங்களைச் சொல்லி அதிமுக வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க திமுக அரசு முயற்சிக்கிறது.. அதனால், பூத் வாரியாக நம்முடைய வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.
அலட்சியம் வேண்டாம்: ஒருவேளை நம்முடைய வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தால் மீண்டும் பட்டியலில் இடம்பெறும் வகையில் தேர்தல் ஆணையத்திடம் காலதாமதமின்றி முறையிட வேண்டும். இந்த பணியில் அலட்சியமாக இருந்து விடாதீர்கள்" என்று அறிவுறுத்தியுள்ளாராம் எடப்பாடி பழனிச்சாமி.
ஆக மொத்தம், திமுகவை சமாளிக்க வேண்டி, ஏகப்பட்ட விஷயங்களை இப்போதே தீவிரப்படுத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் பூத் கமிட்டி வேலைகள் குறித்து, முக்கிய அறிவுறுத்தல்களை நிர்வாகிகளுக்கு வழங்கியிருந்தார்.. முக்கியமாக, "தினமும் ஒரு மணி நேரத்தையாவது, கழகத்திற்காக ஒதுக்குங்கள், ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம், உங்களால் ஒதுக்க முடியுமா? ஒதுக்குவீர்களா? அந்த ஒரு மணி நேரத்தை பூத் வேலைக்காக ஒதுக்குங்கள்" என்று வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், திமுகவில் பூத் கமிட்டி வேலைகள் துரிதமாகி வருகிறது.
குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் திமுகவின் வேகம் அதிகரித்திருக்கிறதாம்.. இதைப்பார்த்ததுமே, அதிமுக தரப்பும் முனைப்பு காட்டி வருவதாக சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, விரைவில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள போவதாக சொல்லப்படுவதால், பூத் கமிட்டிகளில் நேரடி விசிட் இருக்கும் என்கிறார்கள்.
-
"மகளிருக்கு ஜாக்பாட்".. ரூ.8,000 கூப்பன் உள்பட பெண்களுக்கு திமுக தந்த டாப் 14 அறிவிப்புகள் – லிஸ்ட் -
அரசு வேலை.. தாமதம் இருக்காது.. உடனே 1.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.. திமுக தேர்தல் அறிக்கை -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
விவசாயிகளுக்கு திமுகவின் ‘ஜாக்பாட்’! மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்ப்செட் வழங்கப்படும் என வாக்குறுதி -
DMK MANIFESTO: மகளிர் உரிமைத்தொகை டூ முதியோர் பென்ஷன் வரை.. 13 திட்டங்களின் உதவித்தொகைகள் உயர்வு – ஸ்டாலின் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? 26 தொகுதிகளுக்கு வெளியான உத்தேச பட்டியல்! குஷ்பு, அண்ணாமலை மிஸ்ஸிங்! -
Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை.. கைவிரித்த திமுக தலைமை.. இதுதான் காரணமா? -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ







Click it and Unblock the Notifications