Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக மட்டும் புத்திசாலி கட்சியா? தலைமை நீதிபதி கேள்வி! இதிலென்ன டவுட்? எம்பி செந்தில்குமார் பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக மட்டும்தான் புத்திசாலியான கட்சி என்று நினைத்துக்கொள்ள வேண்டாம் என்று தலைமை நீதிபதி ரமணா வைத்த விமர்சனங்களுக்கு திமுக எம்பி செந்தில் குமார் பதில் அளித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளை வழங்க கூடாது. இலவசங்களை வழங்கும் கட்சிகளின் உரிமைகளை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜகவை வழக்கறிஞர் அஸ்வினி குமார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் மனு தாக்கல் செய்த திமுக, ரிட் மனு மூலம் தங்களையும் மனு தாரராக சேர்த்துக்கொண்டது. இலவசங்கள் காரணமாக மக்களின் அடிப்படை பொருளாதாரம் உயரும். இதற்கு பொருளாதார ரீதியாக சான்றுகள் உள்ளன, என்று திமுக தரப்பு இன்று வாதம் வைத்தது.

தலைமை நீதிபதி

தலைமை நீதிபதி

இன்று திமுக வழக்கறிஞர் எம்பி வில்சன் வாதிடும் போது தலைமை நீதிபதி ரமணா குறுக்கிட்டு முக்கிய கருத்து தெரிவித்தார். அதில், உங்கள் கட்சியை பற்றி நான் நிறைய சொல்ல வேண்டும். நீங்கள் மட்டும்தான் புத்திசாலி கட்சி என்று நினைக்கவேண்டாம். நீங்கள் சொல்வதை எல்லாம் நாங்கள் கேட்கவில்லை என்று நினைக்காதீர்கள். நீங்கள் சொல்வதை நாங்கள் கவனிக்காமல் இருக்கிறோம் என்று நினைக்காதீர்கள், என்று குறிப்பிட்டார்.

திமுக கருத்து

திமுக கருத்து

திமுகவினர் பலரும் நீதிமன்றத்தின் இந்த கருத்துக்கு பதில் அளித்து வருகிறார்கள். திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் இதற்கு பதில் அளித்துள்ளார். அதில், ஆம். #சமூக_நீதி ஆட்சி மூலம் இதை சாதித்து,தரவுகள் மூலம் நிரூபித்து காட்டிய கட்சி திமுக மட்டுமே. இதில் என்ன doubt. My UnLords, என்று விமர்சனம் வைத்துள்ளார். லார்ட் என்று குறிப்பிடாமல் அதற்கு எதிர் பதத்தில் அன் லார்ட்ஸ் என்று குறிப்பிட்டு திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் விமர்சனம் வைத்துள்ளார்.

சரவணன் அண்ணாதுரை

சரவணன் அண்ணாதுரை

திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் அண்ணாதுரை இதே விமர்சனத்தை வைத்து உள்ளார். அதில், ஒரு பேட்டி ஏற்படுத்திய தாக்கம். எல்லா மன்றங்களிலும் ஒலிக்கிறது, என்று குறிப்பிட்டு உள்ளார். இன்னும் திமுகவினர் பலர்.. அமைச்சர் பிடிஆர் நீதிமன்றத்தை அவமதிக்கவில்லையே. அவர் பிரதமர் மோடியைத்தானே விமர்சனம் வைத்து பேசினார். கட்சி வாக்குறுதிகளில் நீதிமன்றம் தலையிட கூடாது என்று தானே குறிப்பிட்டார். இதில் தவறாக அவர் என்ன பேசிவிட்டார், என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

இந்த வழக்கில் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், இலவசங்களும், சமூக நலத்திட்டங்களும் வேறு வேறானவை. அவற்றுக்கு இடையில் மெல்லிசான கோடு போட வேண்டும். இலவசங்கள் காரணமாக மாநிலங்களின் பொருளாதாரம் பாதிக்கிறதா என்று பார்க்க வேண்டும் முறையற்ற இலவசங்கள் தொடர்பான அறிவுப்புகள் சரியா என்பதை ஆராய அமைப்பு ஒன்றை வேண்டுமானால் உருவாக்கலாம். இலவச மின்சாரம், இலவச தண்ணீர் ஆகியவை நலத்திட்டங்களா என்று பார்க்க வேண்டும், என்று உச்ச நீதிமன்றம் வாதம் வைத்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+