சசிகலாவை அடக்க முடியாதா? - தலைமை மீது பாய்ந்த மா.செக்கள்
நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் செயல்படுவது, நிர்வாகிகள் மீதான வழக்குகள், அவைத்தலைவர் தேர்வு, சசிகலா செயல்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் இன்று தலைமை அலுவலகத்தில் நடந்து வருகிறது, இதில் சசிகலாவின் செயல்பாடுகள் குறித்தும் பேசப்பட்டதாகவும், அவரை அடக்க முடியாதா? என்றும் வாதம் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரட்டை தலைமை-சசிகலா என்ட்ரி குழப்பத்தில் தொண்டர்கள்
அதிமுக ஆட்சியை இழந்ததிலிருந்து இரட்டைத்தலைமை காரணமாக தொடர்ந்து உள்ளூர் கோஷ்டி மோதல் இருந்துக்கொண்டே இருக்கிறது. மேலுக்கு ஓபிஎஸ்-இபிஎஸ் ஒற்றுமை காட்டினாலும் மோதல் நடப்பது வெளிப்படையாக தெரிவதை காண முடிகிறது. அதிமுகவுக்குள் உள்ள பிரச்சினை போதாது என்று சசிகலாவின் என்ட்ரியும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

துரோகத்தை சந்தித்த சசிகலா
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி, டிடிவியை துணைப்பொதுச் செயலாளராக்கிவிட்டு சிறைச்சென்ற சசிகலாவுக்கு துரோகம் பரிசாக கிடைத்தது. அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். ஓபிஎஸ் கட்சிக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டார். டிடிவி தினகரனும் நீக்கப்பட்டார். சசிகலாவின் கையை விட்டு அதிமுக போன நிலையில் கடந்த பிப்ரவரியில் 4 ஆண்டு சிறைத்தண்டனை முடித்து வெளிவந்தார் சசிகலா.
வரும்போதே பெருத்த எதிர்ப்பார்ப்புடன் வந்தாலும் தேர்தல் களத்திலிருந்து ஒதுங்குவதாக அவர் அறிவித்தார். நிர்பந்தம் காரணமாக அவர் அவ்வாறு அறிவித்தார் என்று கூறப்பட்டது. தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததும் மீண்டும் சசிகலா களத்தில் குதித்தார். ஏற்கெனவே பொதுச் செயலாளர் வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் நான் தான் பொதுச் செயலாளர் என அவர் பேட்டி அளிப்பதும், அறிக்கை அனுப்புவதும், கல்வெட்டு திறப்பதுமாக உள்ளார்.

ஓபிஎஸ் ஆதரவு தோற்றம், விமர்சிக்காத தலைவர்கள்
ஓபிஎஸ் சசிகலாவுக்கு ஆதரவு தருவதுபோன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் தரப்பும் சசிகலாவை கடுமையாக விமர்சிப்பதில்லை. இந்நிலையில் அதிமுகவில் ஒரு பகுதியினர் இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். சசிகலா மீது உறுதியான நடவடிக்கை எதையும் தலைமையும் எடுக்கவில்லை.
Recommended Video

சசிகலா மீது நடவடிக்கை எடுக்காமல் சாஃப்ட் கார்னர் ஏன்? மா.செக்கள் கூட்டத்தில் கேள்வி
இந்நிலையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் எதிரில் மாநில நிர்வாகிகள் மோதிக்கொண்டனர். மாவட்டச் செயலாளர்கள் சிலர் பேசும்போது அதிமுகவின் செயல்பாடு குறைந்து போனது, அதிமுக பொதுச் செயலாளர் என சசிகலா அறிவித்து செயல்பட்டு வருகிறார். சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி தவிர வேறு கட்சி நிர்வாகிகள் இதுகுறித்து பேசுவதே இல்லை.
சசிகலா மீது கட்சி சாஃப்ட் கார்னரில் உள்ளதா? அவர் பொதுச் செயலாளரா? அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில் என்ன தயக்கம் என சிலர் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கட்சிக்குள் ஏற்படும் குழப்பமும், கட்சி அணியினர் சோர்வையும் அடைந்து வருகிறார்கள் அதை தடுக்காமல் தலைமை மவுனமாக இருக்கிறது என குற்றம் சாட்டி பேசியதாக தெரிகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications