நடுவில் ஈபிஎஸ்.. பொதுக்குழு மேடையிலேயே மாஜிக்கள் வாக்குவாதம்! பிரிவுக்குள் பிரிவா? -என்னாச்சு?
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் மேடையிலேயே எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான சி.வி.சண்முகமும் கே.பி.முனுசாமியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்ற உத்தரவுடன் கடந்த 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் கூடியது.
கூட்டத்தில் பேசிய அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், ஜூலை 11-ஆம் தேதி நிச்சயமாக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக வருவார் எனவும் கூறினார். இதனால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பொதுக்குழு முடிவுக்கு வந்தது.

அதிமுக பொதுக்குழு
இதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்தது. இதனை தொடர்ந்து சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது.

இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ்
ஒருபக்கம் அதிமுக தலைமையகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்க மறுபக்கம், பொதுக்குழுவில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மேடையிலேயே மலர் கிரீடம், பூ மாலை, வாள் கொடுத்து தொண்டர்கள் மகிழ்ந்தனர்.

கே.பி.முனுசாமி பேச்சு
இந்த கூட்டத்தில் பேசிய கே.பி.முனுசாமி, "முந்தைய பொதுக்குழு கூட்டத்தின் தேதியை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக்கொண்டார். ஆனால், தடைகோரி நீதிமன்றத்தை நாடினார். பொதுக்குழுவில் கலந்துகொண்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்தும் வன்முறையை செய்திருக்கிறார். அவர் விரக்தியின் உச்சத்தில் உள்ளார். சுயநலனுக்கான கட்சியை அழிக்க முடிவு செய்திருக்கிறார். அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை பொதுச்செயலாளர் கொண்டு வருவார்." என்றார்.

கோபமடைந்த சி.வி.சண்முகம்
கே.பி.முனுசாமி பேசிவிட்டு எடப்பாடி பழனிசாமி அருகேபோய் அமர்ந்தவுடன் அவரை நோக்கி சி.வி.சண்முகம் ஆவேசமாக இருக்கையிலிருந்து எழுந்து சென்றார். கே.பி.முனுசாமியின் உரை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி முன்பாகவே சி.வி.சண்முகம் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட கே.பி.முனுசாமியும் அவேசமடைந்தார். அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் சமாதானம் செய்துவைத்தார்.

என்ன காரணம்?
தென் மாவட்டங்களை சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக அறிவித்து, ஆர்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியனை வைத்து தீர்மானங்களை வாசித்து, நத்தம் விஸ்நாதனை கொண்டு தீர்மானத்தை முன்மொழிய செய்ததைபோல் தென்மாவட்டத்தை சேர்ந்தவரை வைத்தே ஓ.பி.எஸ்.-ஐ நீக்கும் தீர்மானத்தை முன்மொழிய செய்யலாம் என்று திட்டமிட்டிருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியே அதை முன்மொழிவார் என்று கே.பி.முனுசாமி பேசியதாலேயே சி.வி.சண்முகம் ஆவேசமடைந்ததாக கூறப்படுகிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications