நீ நல்லா 'சாப்பிட்டிருக்க'.. நான் இன்னும் சாப்பிடல.. கிளாம்பாக்கத்தில் அமைச்சர் பேசியது ஏன்?
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் ஆய்வு செய்யும் போது பயணி ஒருவர் துறையூர் பகுதிக்கு செல்ல நான் முன்பதிவு செய்து விட்டேன், எனது பேருந்து 10.30 வர வேண்டும், ஆனால் தற்பொழுது 11:45 ஆகியும். பேருந்து குறித்து எந்த ஒரு அறிவிப்பும் எனக்கு வரவில்லை.. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது. முறையாக பதில் அளிக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
அத்துடன் அமைச்சர் தமிழன் பார்த்திபன், பேருந்து உள்ளே இருக்கும் என்ன மழுப்பலாக பதில் அளித்துவிட்டு நீ நன்றாக சாப்பிட்டு இருக்க நீ நல்லா சாப்பிட்டு இருக்க நான் இன்னும் சாப்பிடவில்லை என பதிலளித்தாக கூறப்படுகிறது. இது பயணிகளிடையே முகசுளிப்பை ஏற்படுத்தியது. அந்த காட்சி தற்பொழுது சமூகவலைத்தளத்தில் வெளியாகி அமைச்சருக்கு கண்டனங்கள் எழுந்துள்ளது

இது குறித்து அந்த பயணி கூறுகையில் , "நான் சென்னையில் வேலை செய்கிறேன் தற்போது திருச்சி மாவட்டம் துறையூருக்கு செல்ல பேருந்து முன் பதிவு செய்திருந்தேன். 10.30pm மணிக்கு வரவேண்டிய பேருந்து, தற்பொழுது 11.45pm ஆகியும் பேருந்து குறித்து எந்த ஒரு அறிவிப்பும் எனக்கு வரவில்லை.. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்கவில்லை.
அதேபோல் ஆய்வு செய்ய வந்த அமைச்சரிடம் கேட்டபோது உள்ளே செல்லுங்கள் பேருந்து இருக்கும் என கூறினார். மேலும் நீங்கள் நல்லா சாப்பிட்டு இருக்கீங்க.. நான் இன்னும் சாப்பிட கூட இல்லை என முகசுளிப்பை ஏற்படுத்தும் வகையில் பதில் அளிக்கிறார். அதேபோல் பெரம்பூர் செல்ல வேண்டிய பயணி ஒருவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே பேருந்து முன் பதிவு செய்துவிட்டு தற்பொழுது இதுவரை பேருந்து குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை" என்று மனவருத்தத்தை தெரிவித்தார்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களின் குறைகளைக் கேட்க வருகிறார்களா? அல்லது தங்களின் பசியையும் தனிப்பட்ட விமர்சனங்களையும் பொதுவெளியில் கொட்டி பயணிகளை அவமதிக்க வருகிறார்களா? என்ற பலத்த கேள்வி தற்பொழுது எழுந்திருக்கிறது. அதேபோல் நீங்க நல்லா சாப்பிட்டு இருக்கீங்க நான் இன்னும் சாப்பிடக்கூட இல்லை என்று அமைச்சர் தமிழன் பார்த்திபன் திரும்பத் திரும்ப அழுத்தம் கொடுத்துப் பேசிய விதம் தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தன் சொந்த ஊருக்குச் செல்ல பேருந்து வராமல் நள்ளிரவில் தவித்துக் கொண்டிருந்த அந்தப் பயணி மது அருந்தியிருந்ததாக சொல்லப்படுகிறது. அதனை மறைமுகமாக கூறும் வண்ணம், புகாரை மழுப்ப அமைச்சர் முயன்றாதாக காரசாரமான விவாதங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன
-
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் அமைச்சர் தமிழன் பார்த்திபனை கேள்விகளால் துளைத்த மக்கள் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!













Click it and Unblock the Notifications