ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்.. இன்று துவங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.. அரியலூரில் அசத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் 2ம் கட்டம், அரியலூர் மாவட்டம், வாரணவாசி குழந்தைகள் மையத்தில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டத்தை இன்று முதல்வர் துவக்கி வைத்தார்.

கடந்த 2023ம்ஆண்டு ஜனவரியில், முதல்வர் ஸ்டாலின் "கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து, முதற்கட்டமாக 2023ம் ஆண்டு பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் வேலூர் மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.. அதுபோலவே, மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வு செய்தார்..

ariyalur nutrition mk stalin

அரசு திட்டங்கள்: இதில், அரசுத் திட்டங்கள், அடிப்படை வசதிகள், வருவாய்த் துறையின் சேவைகள், ஊரக மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்துதல், இளைஞர் திறன் மேம்பாடு, பொதுக் கட்டமைப்பு வசதிகள், கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்து போன்ற துறைசார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள், அவற்றின் பயன்கள் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்றடைவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு, தேவையான அறிவுரைகளும் வழங்கப்பட்டிருந்தன.

இதைத்தொடர்ந்து இப்போது மீண்டும் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார் ஸ்டாலின்.. ஏற்கனவே கோவை, விருதுநகர் மாவட்டங்களில் கள ஆய்வு பணிகளை மேற்கொண்ட முதல்வர், அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களையும் அறிவித்தார்.

அரியலூர்: இதைத்தொடர்ந்து, இன்று பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில், ஆய்வு மேற்கொள்கிறார்.. இதற்காக முதல்வர் ஸ்டாலின், சென்னையில் இருந்து திருச்சிக்கு நேற்றிரவு 7.35 மணிக்கு வந்தார். விமான நிலையத்தில் முதல்வரை, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், கலெக்டர் பிரதீப்குமார் மற்றும் எம்எல்ஏக்கள், கட்சியினர் வரவேற்றனர்.

தொடர்ந்து அங்கிருந்து காரில் அரியலூர் செல்லும் வழியில் மாவட்ட எல்லையான "கல்லகம் கேட்" பகுதியில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஜெயங்கொண்டம் சுற்றுலா மாளிகைக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் தங்கினார்.

ஊட்டச்சத்து: அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாரணவாசி குழந்தைகள் மையத்தில் "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தினை முதல்வர் இன்று துவக்கி வைத்தார். காலை 11.15 மணியளவில் அரியலூர்-செந்துறை சாலையில் உள்ள கொல்லாபுரத்தில் நடைபெறும் அரசு விழாவில் அரியலூர் மாவட்டத்தில் 26 புதிய திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.


இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் 27 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 456 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, 11,721 பயனாளிகளுக்கு நலத்திட்டஉதவிகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். மாலை 4.30 மணியளவில் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே அரியலூர் சாலையில் உள்ள பூமணம் திருமண மண்டபத்தில் நடைபெறும் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். அப்போது அவர், 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார்

திட்டப்பணிகள்:
தொடர்ந்து மாலை 6 மணியளவில் கார் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு 6.55 மணிக்கு சென்று, அங்கிருந்து இரவு 7.55 மணியளவில் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். முதல்வரின் வருகையையொட்டி அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத வலிமையான தமிழ்நாட்டை உருவாக்கிட ஒன்றிணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், மக்கள் பிரதிநிதிகளுக்கு ஏற்கனவே ஸ்டாலின் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருந்தார்.

தமிழக அரசு: அந்த செய்திக்குறிப்பில்," ஏற்றமிகு தமிழ்நாட்டை உருவாக்கிட, குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களின் சீரான வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகின்றது.

இந்தியாவிற்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் முன்னோடி திட்டமாக தமிழகத்தில் முதலமைச்சர் காலை உணவு திட்டம், முட்டையுடன் கூடிய சத்துணவு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களும், இளம் சிறார்களுக்கு இணை உணவுகள் வழங்கும் திட்டம், பாலூட்டும் தாய்மார்களுக்கு மகப்பேறு உதவித் திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் தமிழ்நாட்டின் மாணவச் செல்வங்களுக்கும், மழலைச் செல்வங்களுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும், தமிழ்நாடு அரசால் ஊட்டச்சத்து வழங்கப்பட்டு வருகின்றது.

குழந்தைகள்: நான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை களையும் நோக்குடன், முன்னோடி திட்டமான "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தினை முதற்கட்டமாக 2022-ஆம் ஆண்டு செயல்படுத்தினேன். அதன் அடிப்படையில் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக கண்டறியப்பட்ட குழந்தைகளில் சுமார் 77.3 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர் என்ற மிகவும் மகிழ்ச்சியான செய்தியை உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பிறந்தது முதல் ஆறு மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக வழங்கப்பட வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களின் உடல்நலம் பேணினால் மட்டுமே, குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்த முடியும்.

ஊட்டச்சத்தை உறுதி செய்: எனவே தான், தற்போது 76 ஆயிரத்து 705 ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 0-6 மாத குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்குவதோடு மட்டுமல்லாமல், குழந்தைகளின் நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தின் இரண்டாம் கட்டம் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. இதனை அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாரணவாசி குழந்தைகள் மையத்தில் 15.11.2024 அன்று நான் தொடங்கி வைக்கவுள்ளேன்.

இத்திட்டத்தினை நான் தொடங்கும் அதேநாளில், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் உடன் இணைந்து இத்திட்டத்தை துவக்கி வைத்து, ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிடுமாறு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள். சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் ஆகியோரை நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

விழிப்புணர்வு:
ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்ட குழந்தைகளின் தாய்மார்களை தமிழ்நாடு அரசுடன் இணைந்து, குடும்பத்தினரும் அதிக கவனத்துடன் பராமரிக்க. மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் முன் நின்று உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இதன்மூலம் ஊட்டச்சத்து குறைபாடு இல்லா வலிமையான வளமான மாநிலமாக தமிழ்நாட்டை நிலை நிறுத்த உறுதி ஏற்போம்!" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+